ஹாமில்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்ஸனின் கனவு அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
நியூஸிலாந்து நட்சத்திர வீரரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்ஸன், 21-ம் நூற்றாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த வீரர்களை கொண்டு அணியை உருவாக்கி அறிவித்துள்ளார். அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, வீரேந்திர சேவாக் ஆகிய 3 இந்திய வீரர்களை சேர்த்துள்ளார். ஆனால் அந்த அணியில் தனது பெயரைச் சேர்க்கவில்லை.
வில்லியம்ஸன் தேர்வு செய்த 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி விவரம்: மேத்யூ ஹேடன் (ஆஸ்திரேலியா), வீரேந்திர சேவாக்(இந்தியா), ரிக்கி பான்டிங்(ஆஸ்திரேலியா), சச்சின்(இந்தியா), ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா), ஏபி டி வில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா), மகேந்திரசிங் தோனி(இந்தியா), டேல் ஸ்டெயின்(தென் ஆப்பிரிக்கா), ஷோயப் அக்தர்(பாகிஸ்தான்), மெக்ராத்(ஆஸ்திரேலியா), முரளிதரன் (இலங்கை).