சென்னை: தமிழகத்தில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு உட்பட 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மே 19-ம் தேதி (நேற்று) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று (மே 20) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்…
Author: admin
சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த வரிசையில் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கி பழகிய யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. யாத்ரி டாக்டரின் இயற்பெயர் நவன்கர் சவுத்ரி. ஹரியானாவின் ரோத்தக் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். தற்போது அவர் டெல்லியில் வசித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டில் மருத்துவ பணியில் இருந்து விலகிய நவன்கர் சவுத்ரி, ‘யாத்ரி டாக்டர்’ என்ற…
புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புராஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது உலகத் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த புற்றுநோய் பாதிப்பு ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், ஜோ பைட ன் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து அறிந்து மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சைபுல்லா, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை பிரிவான டிஆர்எப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இதன்படி கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா மூத்த தலைவர் அபு சைபுல்லா பாகிஸ்தானின் சிந்து மாகாணம், மாட்லி பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இவர் நேபாளத்தில்…
வாஷிங்டன்: 1970 களில் உள்ள சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்கள், சில விஞ்ஞானிகள் திரவ நீரின் ஓட்டங்களுக்கு சாத்தியமான ஆதாரங்களாக உருவாக்கிய குன்றுகள் மற்றும் பள்ளம் சுவர்களின் பக்கங்களில் ஓடும் ஆர்வமுள்ள இருண்ட கோடுகளைக் கைப்பற்றியுள்ளன, இது உயிரினங்களுக்கு ஏற்ற சூழல்களை கிரகங்கள் வைத்திருக்கும் என்று கூறுகிறது.ஒரு புதிய ஆய்வு அந்த விளக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்ட இந்த சினேவி அம்சங்களில் சுமார் 500,000 ஐ ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலர்ந்த செயல்முறைகள் மூலம் உருவாக்கப்பட்டதாக முடிவு செய்தனர், அவை திரவ ஓட்டங்களின் மேலோட்டமான தோற்றத்தை விட்டுவிட்டன, செவ்வாய் கிரகத்தின் பார்வையை ஒரு பாலைவன கிரகமாக தற்போது வாழ்க்கையில் விருந்தோம்பல் – குறைந்தபட்சம் அதன் மேற்பரப்பில் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சாய்வான நிலப்பரப்பில் செவ்வாய் வளிமண்டலத்திலிருந்து அபராதம்-தானிய தூசி குவிப்பதன் மூலம் இந்த கோடுகளின் உருவாக்கம் இயக்கப்படுகிறது என்று தரவு சுட்டிக்காட்டியது, பின்னர் காற்று வாயு, விண்கல் தாக்கங்கள்…
புதுடெல்லி: வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகி உள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும்விதமாக சசி தரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த 7 குழுக்களில் 59 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 51 பேர்எம்பிக்கள், ஆவர். 8 பேர் வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆவர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 31 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்பிக்கள் 7 குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான குழுவில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த எம்பி யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இந்த குழு இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. தன்னிச்சையாக… இதுதொடர்பாக திரிணமூல்…
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில், கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக நுஷ்ரத் பரியா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், வெளிநாட்டுக்கு செல்ல டாக்காவின் ஷாஜகான்லால் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது நுஸ்ரத் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து,அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவரின் வழக்கறிஞர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனு மே 22-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. நடிகை நுஸ்ரத் பரியா தாய்லாந்துக்கு பயணிக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், விமான நிலையத்தில் அவர் போலீஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷேக் முஜிபுர் ரஹ்மான் பற்றிய ‘முஜிப்…
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீடு தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. இன்றைய காலகட்டத்தில், பொது சந்தையில் இந்த காப்பீடுகளை பெற தனிநபர்கள் பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பெரும் செலவை தவிர்த்து, ஆயுள் காப்பீடு, தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவற்றை அவர்கள் கட்டணமின்றி பெற அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக முன்னோடி வங்கிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக, பல சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன. மேலும், ‘அரசு…
நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஓடுபாதை மோதலைத் தவிர்க்க பயணிகள் ஜெட் புறப்படுவதை நிறுத்த வேண்டியிருந்தது (புகைப்படம்: ஆபி) இந்த மாத தொடக்கத்தில் நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஏன் ஆபத்தான முறையில் மூடப்பட்டன என்பதை கூட்டாட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர், விமான நிலையத்தில் மேம்பட்ட மேற்பரப்பு ரேடார் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தாலும், இதுபோன்ற நெருக்கமான அழைப்புகளைத் தடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகிய இரண்டும் திங்களன்று மே 6 சம்பவத்தை விசாரித்து வருவதாகக் கூறியது, ஒரு குடியரசு ஏர்வேஸ் ஜெட் விமானத்தை நிறுத்த வேண்டியிருந்தது, ஏனெனில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் இன்னும் ஓடுபாதையில் டாக்ஸி.Www.liveatc.net என்ற வலைத்தளத்திலிருந்து ஏபிசி பெற்ற கோபுரத்திலிருந்து ஆடியோவில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு குடியரசு ஏர்வேஸ் ஜெட் விமானியின் விமானியிடம் கூறியது: “மன்னிக்கவும், யுனைடெட் அதற்கு முன்பே அழிக்கப்பட்டது என்று நினைத்தேன்.”கட்டுப்பாட்டாளர்…
புதுடெல்லி: போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை ஒட்டி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. போர்ச்சுகல் நாட்டுக்கான இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போர்ச்சுகல் நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு வெளியே பாகிஸ்தானியர்கள் கோழைத்தனமாக போராட்டம் நடத்தினர். இதற்கு அமைதியாகபதிலடி தரும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அலுவலகத்துக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது. தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆதரவு அளித்த போர்ச்சுகல் அரசுக்கும் அதன் காவல் துறையினருக்கும் நன்றி. இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயலால் இந்தியாவை மிரட்ட முடியாது. எங்கள் நிலைப்பாடு அசைக்க முடியாதது” என கூறப்பட்டுள்ளது. இத்துடன் அந்த போஸ்டர் தொடர்பான புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.