சென்னை: சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.ஏ தமிழ் 5 ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (Integrated M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இந்த பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவம், வழிகாட்டி கையேட்டை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, நேரிலும் பெறலாம். பூர்த்தி…
Author: admin
முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 19 புள்ளிகளை குவித்து முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. அந்த அணி 2014-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 19 புள்ளிகளை பெற்ற போதிலும் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. ஏனெனில் பஞ்சாப் அணியின் நிகர ரன்…
டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் கோர்ட் அவரைக் கடிந்துள்ளது. அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ,…
ஏர்வாடி தர்ஹா 851ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இஃபுராஹீம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29ம் தேதி புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. அதனையடுத்து மே 9ல் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா மே 22 அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இஃபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5.50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது. சந்தனக்கூடு தர்ஹாவை மூன்று முறை வலம் வந்த பின்பு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதைத் தொடர்ந்து மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டு…
தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். நடிகர் ராஜேஷ் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக அறியப்படுகிறார். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘சத்யா’, ‘விருமாண்டி’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் அவர் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்தவர். கடைசியாக விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படமே இவர் நடித்த கடைசிப் படமாக உள்ளது.…
சென்னை: தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ் . கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். அவரும், ராஜேஷின் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம். கலைஞர் மறைவுற்றபோது, “தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்.” என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின்…
ஹைதராபாத்: ஹைதராபாத் சார்மினார் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குல்ஜார் ஹவுஸ் என்றழைக்கப்படும் பிரஹல்லாத் மோடி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 வயதுக்கு உட்பட்ட 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் துயரமான இந்த சம்பவம், அந்த கட்டிடத்திற்குள் காற்று வசதி இல்லாத காரணத்தினால் தான் நடந்தது என ஹைதராபாத் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ காற்று புக முடியாத வீடுகள் உள்ள அந்த கட்டிடத்தில் 6 ஏசிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாடி படி ஏறும் இடத்தில் மின்சார மெயின் பாக்ஸ் வைத்திருந்துள்ளனர். அதன் கீழே 2 சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். இரவு நேரத்தில் 6 ஏசிக்களும் பயன்படுத்தப்பட்டதால், அதிக வெப்பம் அடைந்து மின்சார பாக்ஸ் தீ பற்றி…
சென்னை: ஜூலை மாதம் நடைபெற உள்ள 10, 11-ம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த மார்ச் – ஏப்ரலில் நடந்த 10, 11-ம் வகுப்பு (பிளஸ் 1) பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்கள் மற்றும் தகுதியுள்ள தனி தேர்வர்களிடம் இருந்து துணை தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணை தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மே 22 முதல் ஜூன் 4-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர்கள் அரசு தேர்வு துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள…
கர்னூல்: சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு செய்திதாள்கள் கூட வருவது கடினம். ரேடியோ மூலமாக மட்டுமே நாம் செய்திகளை அறிய முடிந்தது. யார், யார் சட்டப்பேரவைகளில் நன்றாக பேசினார்களோ அவர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்று கொண்டு அவர்களை தேர்தல்களில் வெற்றி பெற செய்தனர். அதன் பின்னர், தொலைக்காட்சி வந்தது. தற்போது நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்து விட்டது. இது மாபெரும் மாற்றம். சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவு நன்மைகள் உள்ளனவோ, அவ்வளவு கெடுதல்களும் நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட நபர்கள், பெண்கள் ஆகியோரை குறி வைத்தும் சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன. இதனால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம். பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி செல்கிறார். விக்சித்…
சென்னை: தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: தற்போது எதி்ர்கொள்ளப் போகும் தென்மேற்கு பருவழை இயல்பானதாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்ய வேண்டும். பேரிடர் மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற வசதிகளோடும்…