Author: admin

கோவை: தேமுதிகவுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானத்தில் `துரோக அதிமுக’ என்று தெரிவித்துள்ளனர். திமுகதான் தமிழகத்துக்கு துரோகம் செய்தது. அதிமுகவைப் பொருத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, அவர் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்தபோதும் சரி, சிறப்பான திட்டங்களை மக்களுக்காக கொண்டுவந்தோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி நடக்கிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சிதான் துரோக ஆட்சி. மத்திய அமைச்சரவையில் 16 ஆண்டுகாலம் திமுக இடம் பெற்றிருந்தது. அப்போதே கல்வியை மத்திய அரசு பட்டியலில் இருந்து, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் மக்களைப் பற்றியும், மாணவர்களை பற்றியும் கவலைப்படுவதில்லை.…

Read More

ஈரோடு: ஆன்லைன் வர்த்தகத்தால், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு காய்கறி, பழ மார்க்கெட்டில் நிரந்தர கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம், அரசாணையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடையடைப்பு போராட்டம்: இவ்வாறு வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். ஆன்லைன் வர்த்தகத்தால், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த கூட்டாண்மை நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கின்றன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிட உள்ளோம். தமிழ்நாடு வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஜூலை மாதம் 22-ம் தேதி நடக்கவுள்ளது.…

Read More

கோவை: ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக கமல் கொள்கையை மாற்றிவிட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றபோது தூர்வாரப்படாத கால்வாயை துணியால் மறைத்துள்ளனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கே தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு. கட்சி தொடங்கும்போது வாரிசு அரசியல் கூடாது என்ற கமல், ராஜ்யசபா சீட் கொடுத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கிறார். எம்.பி. சீட்டுக்காக கொள்கையை மாற்றிக்கொண்டார். தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. மத்திய அரசின் திட்டங்களை மறைத்துவிட்டு, எதுவும் செய்யாத அரசாக தமிழக அரசு திகழ்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்த ரத்தீஷ் ரூ.300 கோடியில் வீடு, ஆகாஷ் ரூ.500 கோடியில் வீடு கட்டியுள்ளனர். தேர்தலில் திமுக பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கும் என்று விஜய் கூறுவது உண்மைதான். வரும் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக…

Read More

மதுரை: மதுரையில் முதல்வர் வரும் பாதையில் அமைந்திருந்த ‘பந்தல் குடி’ கழிவுநீர் கால்வாயை சுற்றி லும் வண்ண திரைச்சீலைகளை கட்டி மறைத்திருந்தனர். மதுரை மாநகராட்சியில் உள்ள மழைநீர் கால்வாய்களில் ‘பந்தல்குடி’ கால்வாய் முக்கியமானது. கடந்த காலத்தில் செல்லூர் கண்மாயின் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக வைகை ஆற்றில் சென்று கலந்தது. தற்போது செல்லூர் பகுதியின் ஒட்டுமொத்த கழிவுநீரும் இக்கால்வாய் வழியாகச் சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. இப்பகுதியை கடந்து செல்லும் மக்கள், கடும் துர்நாற்றத்தின் மத்தியில் சென்று வந்தனர். இக்கால்வாய் வழியாகத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். பந்தல்குடி கால்வாய் சீரமைக்கப்படாமலேயே இருக்கிறது. முதல்வர் வரும்போது இந்த கால்வாய் அவர் கண்ணில் படாத வகையில் தங்கள் ஆலோசனைப்படியே அதிகாரிகள் கால்வாயை மறைக்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயின் இருபுறமும் வண்ண திரைச்சீலைகளை அழகாக கட்டி மறைத்திருந்ததாக திமுகவினர் தெரிவித்தனர். கால்வாயைச் சுற்றிலும் திரைச்சீலைகள் அமைத்திருந்ததை பார்க்க அழகாக…

Read More

இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, அமெரிக்க கனவுகள் திடீரென்று சந்தேகத்தில் உள்ளன அமெரிக்காவில் உயர் கல்வியைத் தொடர விரும்பிய இளைஞர்கள் இந்த வீழ்ச்சியை விட அதிகமான மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பும் நாடு இந்தியா, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு நாட்டினருடனான நேர்காணல்களை இடைநிறுத்த டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்குப் பிறகு, இந்த வீழ்ச்சி ஒரு நிலையில் உணர்வை விவரித்தது.சிலர் தங்கள் ஊட்டங்களைத் துடைக்கிறார்கள், கருத்துகளை நீக்குகிறார்கள் மற்றும் கணக்குகளை பின்பற்றுகிறார்கள், இது சமூக ஊடக பயன்பாட்டை திரையிடுவதாக வெளியுறவுத்துறை கூறியது. மற்றவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட குழு அரட்டைகளில் செய்திகளையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றனர். சிலர் “விசா கோயில்களில்” தெய்வீக உதவியை நாடியுள்ளனர் – ஏனெனில் இந்து பக்தர்கள் கூறுகையில், அங்கு பிரார்த்தனைகள் ஒரு சுற்றுலா, படிப்பு அல்லது வேலை விசாவைப் பெறுவதற்கான அதிக வாய்ப்பை அளிக்கின்றன.தொழில் ஆலோசகர்கள் சிகிச்சையாளர்களாக மாறிவிட்டனர், மேலும் பல இந்தியர்கள் அமெரிக்காவில் வைத்திருக்கும் நீட்டிக்கப்பட்ட குடும்ப நெட்வொர்க்குகள் ஆன்லைனில் போர்…

Read More

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது என்பது நீண்டகாலமாக தொடர்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சிட்டிசன் கூட்டமைப்பு சார்பில் ‘போர்க்களம் முதல் சாதூர்யம் வரை – ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில் துணிச்சல், தேசிய பாதுகாப்பு, தூதரக ரீதியிலான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திர போராட்டத்துக்கு பிறகு படைகளை அனுப்பி காஷ்மீரை ஆக்கிரமித்தது, அதைத்தொடர்ந்து கார்கில் போர், நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் என இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இவ்வாறு பாகிஸ்தான் பகிரங்கமாக தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடத்தப்பட்டிருக்கும் பஹல்காம் தாக்குதலுக்கு, பிரதமர் நரேந்திர மோடியில் தலைமையின்கீழ் முப்படைகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தக்க பதிலடி கொடுத்திருக்கின்றனர். அந்தவகையில் ஆபரேஷன் சிந்தூருக்கு வித்திட்ட முப்படையினர், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப…

Read More

வைகோவின் எம்.பி. சீட் குறித்த துரை வைகோ வருத்தம் தெரிவித்தது ஏன்? என்பது குறித்து மதிமுக பொருளாளர் விளக்கம் அளித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக திமுக உறுதியளித்தது என்றும் தற்போது வழங்கப்படாததால் வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துரை வைகோவின் வருத்தம் குறித்து மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலின்போது தொகுதி பங்கீடு குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக் குழு தலைவராக இருந்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, “மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை பதவி காலம் இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. தற்போது மக்களவையில் ஒரு எம்.பி. மாநிலங்களவையில் ஒரு எம்.பி., என இரண்டு…

Read More

வந்தே பாரத் ரயிலில் காலை உணவாக அசைவ உணவை விருப்பத் தேர்வாக செய்யமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய நகரங்க ளுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் படுகின்றன. இந்த ரயில்களில் பயணிகளுக்கு பயணத்தின்போது, உணவு, தேநீர், காபி, பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகிறது. காலை, மதியம் பயணத்தை பொருத்து, பயணிகளின் விருப்பத்தை கேட்டறிந்து உணவு வழங்கப்படுகிறது. பட்டியலில் நீக்கம்: டிக்கெட் கட்டணத்துடன் உணவு விருப்பத்தை தெரிவிப்போருக்கு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐஆர்சிடிசி-யின் இணையதளத்தில் காலை , மதியம், இரவு ஆகிய 3 வேளையும் வழங்கப்படும் உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சைவ, அசைவ உணவுபிரியர்களுக்கு ஏற்ப பயணத்தின் போது, குறிப்பிட்ட நிலையத்துக்கு ரயில் வரும் போது உணவு வழங்கப்படும், காலை உணவு பட்டியலில் அசைவ உணவு இருந்தது. இதற்கிடையில், வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த முறையான அறிவிப்பும்…

Read More

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும் என சிறப்பு தீர்மானத்தை மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் பி.மூர்த்தி செய்திருந்தார். அவர் வரவேற்று பேசினார். 3,400 பொதுக்குழு உறுப்பினர்கள், 23 சார்பு அமைப்புகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், 4,000 சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட…

Read More

தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 2) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3 முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60…

Read More