கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜூலை 1-ம் தேதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்வும் நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கோயிலில் அமைந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சிவ கைலாஷ் தீட்சிதர் கொடியேற்றி வைக்க, அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. இன்று (ஜூன் 24) முதல் 30-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, தேர்த் திருவிழா ஜூலை 1-ம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமன் நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். 2-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலை 4 மணி…
Author: admin
சென்னை: திமுக ஐடி விங்குக்கு அதிமுக ஐடி விங் தக்க பதிலடி தராததால், அதன்மீது பழனிசாமி அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார். ‘கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று பொருள்படும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதேநேரம், இந்த விவகாரத்தில் அதிமுக ஐடி விங் தக்க பதிலடி கொடுக்காதது பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதிமுக ஐடி விங் திருப்திகரமாக செயல்படாதது, பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்தை…
சிவகாசி: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்ததை தவிர்த்து இருக்கலாம், அது வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்றதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. ஆட்சியாளர்கள் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இந்து மத நம்பிக்கைகள் கொண்டோரை புண்படுத்துவதுதான் திமுகவின் வரலாறு. குனிந்தவன் நிமிர்ந்தால் எதிரி காணாமல் போய்விடுவான். அதுபோல இன்று தமிழகத்தில் முருக பக்தர்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால், திமுக கூட்டணி கட்சியினர் மாநாட்டை விமர்சிக்கின்றனர். திமுக, விசிக கூட்டணி மனதளவில் முறிந்துவிட்ட நிலையில் பெயரளவிலேயே தொடர்ந்து வருகிறது. விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், திமுக மீது அதிருப்தியில் உள்ளன. முருக பக்தர்கள் மாநாட்டில் 99 சதவிகிதம் நல்ல நிகழ்வுகள் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை மட்டும் பேசி நல்ல கருத்துகளை…
நம்முடைய உடல் ரீதியாக வரும்போது, நாங்கள் நிறைய செய்கிறோம் – நாங்கள் நிறைய ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோம், உடற்பயிற்சி செய்கிறோம், சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறோம், போதுமான தண்ணீரைக் குடிக்கிறோம். இருப்பினும், மூளைக்கு வரும்போது, மூளை உண்மையில் கண்ணுக்கு “காணக்கூடியது” அல்ல என்பதால், அதை எளிதாக எடுத்துக் கொள்ள முனைகிறோம், மேலும் இது ஆட்டோ பயன்முறையில் இயங்குகிறது என்று நாங்கள் உணர்கிறோம். இருப்பினும், நம் உடல்களைப் போலவே, நம் மூளைக்கும் நிறைய கவனிப்பும் உடற்பயிற்சியும் தேவை. மூளை ஆரோக்கியமான உணவை உட்கொள்வது முக்கியம், மற்றும் புதிர்கள் மற்றும் வாசிப்பு மூலம் உங்கள் மூளையை உடற்பயிற்சி செய்யுங்கள், இங்கே 5 சப்ளிமெண்ட்ஸ் உதவக்கூடும் …
எங்கள் மூளை மிகவும் சக்திவாய்ந்த உறுப்புகளில் ஒன்றாகும், மேலும் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, கூர்மையாகவும், கவனம் செலுத்தவும், ஆரோக்கியமாகவும் இருக்க சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. இருப்பினும், மன அழுத்தம், வயதான மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான சவால்களுடன், பலர் நினைவாற்றல் இழப்பு, மூளை மூடுபனி மற்றும் மன சோர்வு ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். ஆனால், மூளையைப் பாதுகாக்கும் மற்றும் மன சரிவை எதிர்த்துப் போராட உதவும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்கவும், மூளை உயிரணு செயல்பாட்டை ஆதரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும், வயது தொடர்பான மன சரிவை மெதுவாகவும் உதவுகின்றன. எனவே, உங்கள் அன்றாட உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் உட்பட காலப்போக்கில் உங்கள் நினைவகம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தலாம். இதுபோன்ற சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றில் நிறைந்த உணவுகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்வில், இத்திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப காலத்திலேயே நோயை கண்டறிவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. அதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16,566 பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 50.76 லட்சம் மாணவர்களுக்கு தேசிய சிறார் நல திட்டம் மூலம் மருத்துவ அலுவலர்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை நோய் தடுப்பு குறித்து பயிற்சி வழங்குவார்கள். இந்த மாணவர்கள்…
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 செ.மீ., சோலையாறில் 10 செ.மீ., சின்கோனாவில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., கோவை மாவட்டம் ‘உபாசி’, கடலூர் மாவட்டம் லால்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில்…
புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வருகிறார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கும் சசி தரூருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரப்பூர்வமாக உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு குழுக்களை அமைத்தது. அவற்றில் சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சசி தரூர் தலைமையிலான குழு கடந்த மாதம் சென்றது. அந்நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகளை சந்தித்து பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து எடுத்துரைத்து வெற்றிகரமாக நாடு திரும்பினார் சசி தரூர். இந்நிலையில், ‘இந்து’ ஆங்கில நாளிதழ் நேற்று வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. சசி…
இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசின. இதில் 3 அணு சக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து இருக்கிறது. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.…
இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதிகோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் ஆஜராகினர். அப்போது அசோக்குமாருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் 30-க்கு தள்ளிவைத்துள்ளார்.