மதுரை: அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்ராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளேன். நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளேன். கட்டுமானத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுத் துறைகளில் முறையாக டெண்டர் எடுத்து, அரசு திட்டங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு 2025- 2026 ஆண்டுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை வெளியிடப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் உரிய காலத்தில் வெளியிட்டால் மட்டுமே, அந்த விலைப் பட்டியல்…
Author: admin
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் ‘சப்ளையர்’ கெவின் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு ‘கொகைன்’ போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணா என்ற கிருஷ்ண குமார் ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு கைமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராகும்படி, போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இல்லாமல் தலைமறைவானார். இதையடுத்து, 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், அவர் நேற்று…
சென்னை: வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், போர்ப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயர்ந்தது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 22-ம் தேதி பவுன் ரூ.73,880-க்கும் நேற்று முன்தினம் ரூ.72,560 என்றும் விற்பனையானது. அந்த வகையில் 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது. இந்நிலையில் நேற்று விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையானது. அதேநேரம் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.120-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1 லட்சத்து 20…
சிறுநீரில் காணக்கூடிய இரத்தம் நன்கு அறியப்பட்ட அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் சிறுநீர் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் இன்னும் சிறிய அளவிலான இரத்தங்களைக் கொண்டிருக்கலாம், அவை ஆய்வக சோதனைகளால் மட்டுமே கண்டறிய முடியும். இது நுண்ணிய ஹெமாட்டூரியா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தை விட சிறுநீரின் “ஆஃப் நிறத்தில்” காணப்படுகிறது.சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு சிறுநீர் போன்ற வெளிப்படையான அறிகுறி இல்லாததால், சிறுநீரில் உள்ள நுண்ணிய இரத்தம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. புகைபிடித்தல், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளிப்பாடு அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகள் உங்களிடம் இருந்தால், வழக்கமான சிறுநீர் சோதனைகள் இந்த மறைக்கப்பட்ட அறிகுறிகளை ஆரம்பத்தில் பிடிக்க உதவும்.ஆதாரங்கள்: மாயோ கிளினிக், கிளீவ்லேண்ட் கிளினிக், தேசிய புற்றுநோய் நிறுவனம்
பிரிட்ஜ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3 டெஸ்ட், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 56.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 78 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் உஸ்மான் கவாஜா 128 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 28 ரன்களும் சேர்த்தனர். சாம் கான்ஸ்டாஸ் 3, கேமரூன் கிரீன் 3,…
சென்னை: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் சொத்து விவரங்களை ராபர்ட் புரூஸ் மறைத்ததாகவும், தேர்தலில் பல முறைகேடுகளை செய்ததாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் கடந்த 19-ம் தேதி ஆஜராகி, காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸின் சொத்துகள் தொடர்பான சான்று ஆவணங்களை பதிவு செய்தார். இந்நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு…
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பல கட்சிகள் இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருந்தது. இதையடுத்து, இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இந்த கட்சிகள் 2019-ம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அத்துடன் இந்த கட்சிகளுக்கு எங்கே யும் அலுவலகங்களும் இல்லை. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையின்…
கோலாலம்பூர்: மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், அபய் சிங் ஜோடி 2-1 (9-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் நூர் ஜமான், நசீர் இக்பால் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டம் 88 நிமிடங்கள் நடைபெற்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங் ஜோடி இறுதிப் போட்டியில் 2-1 (8-11, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் மலேசியாவின் அய்னா அமனி, ஸின் யிங் யி ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங்,…
சென்னை: பொது மாறுதல் கலந்தாய்வில் குறிப்பிட்ட 40 ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டு அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ்) பதிவு செய்வது சார்ந்து ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. இதுதவிர 2021-22-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வின்போது அரசுப் பள்ளிகளில் அதிகளவு காலிப் பணியிடங்களை கொண்ட 40 ஒன்றியங்கள் முன்னுரிமை பகுதிகளாகத் தேர்வு செய்யப்பட்டன. அந்த 40 ஒன்றியங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று தொடர்ந்து 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டு கலந்தாய்வில் மாறுதல் கோரினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு முன்னுரிமை கோரும் ஆசிரியர்கள் அந்த ஒன்றியத்திலேயே தொடர்ந்து 3…
கொழும்பு: இலங்கை – வங்கதேசம் அணிகள் அணி இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். தைஜூல் இஸ்லாம் 9, எபாதத் ஹொசைன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எபாதத் ஹொசன் 8, தைஜூல் இஸ்லாம் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ, சோனல் தினுஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், விஷ்வா பெர்னான்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரரான பதும் நிஷங்கா அற்புதமான தொடக்கம் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய லகிரு உதரா 65…