Author: admin

நீண்ட காலமாக கவனிக்கப்படாத அத்தியாவசிய கனிமமான மெக்னீசியம் இறுதியாக அதன் தருணத்தைக் கொண்டுள்ளது. சிறந்த தூக்கத்தை வழங்குவதிலிருந்து இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வரை, மெக்னீசியம் பல பாத்திரங்களை வகிக்கிறது. உணவு குறையும் போது, மக்கள் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸுக்கு திரும்புகிறார்கள். ஆனால் என்ன நினைக்கிறேன்? நம்மில் பெரும்பாலோர் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் தவறான வழியில் எடுத்து வருகிறோம் என்று உணவு ஒவ்வாமை, ஹார்மோன்கள் மற்றும் குடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற கார்னெல், ஹார்வர்ட் மற்றும் கொலம்பியாவில் பயிற்சி பெற்ற இரட்டை பலகை சான்றளிக்கப்பட்ட மருத்துவரும் ஆரோக்கிய நிபுணருமான டாக்டர் ஆமி ஷா கூறுகிறார். அவர் பல்வேறு வகையான மெக்னீசியம் சப்ளிமெண்ட் மற்றும் அவற்றின் நன்மைகளை விளக்கினார். மெக்னீசியம் மீண்டும் நடைமுறையில் உள்ளது”இந்த நாட்களில் மெக்னீசியத்தில் அதிக ஆர்வம் உள்ளது” என்று டாக்டர் கூறுகிறார். ஷா. மெக்னீசியம் எண்ணெய் கால் சடங்கு சுகாதார நன்மைகளுக்கு பிரபலமடைகிறது”ஏன் ஆர்வம்? சரி, சமீபத்திய ஆய்வுகள், பெண்களில் மூளை…

Read More

கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கினார். இதில், ராயக்கோட்டையில் அவர் பேசியதாவது: மலர் விவசாயிகளுக்காக ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மாங்கனி கொள்முதல் விலையை கிலோ ரூ.13 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது, விவசாயத்துக்கு சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழn்கப்படுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் படும்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி60 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ வி60 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘V’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விவோ வி50 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக வி60 வெளிவந்துள்ளது. ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. விவோ வி60 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 4 பிராஸசர் …

Read More

டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்களில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் அதிரடி சதம் விளாசி தனது அணியின் வெற்றிக்கு உதவினார். தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஆக.12) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 6.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது தடுமாறியது. அதன் பின்னர் ஸ்டப்ஸ் உடன் இணைந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்தார் டெவால்ட்…

Read More

விழுப்புரம்: செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக.12) கடிதம் அனுப்பியுள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பொதுக்குழுக் கூட்டத்தை தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தி முடித்தார். இக்கூட்டத்தில், பாமக தலைவராக அவர் ஓராண்டுக்கு நீட்டிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று (ஆக.12) அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதத்தை, அவரது தனி செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ளார். அதில், “பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த மே 30-ம் தேதி முதல் தலைவராக உள்ளார். செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், எந்தவித அங்கீகாரம் இல்லாமல் எம்எல்ஏ மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களை பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார். அன்புமணி மேற்கொண்டுள்ள 100 நாள் நடை…

Read More

கரும்பு அல்லது பாம் சப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சுத்திகரிக்கப்படாத இனிப்பு, பல கலாச்சாரங்களில் பல கலாச்சாரங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு இயற்கையான மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை சர்க்கரையைப் போலன்றி, வெல்லம் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது, ஏனெனில் இது குறைந்தபட்ச செயலாக்கத்திற்கு உட்படுகிறது. மிதமாக தினமும் வெல்லம் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவும். இது உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது, இரத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, மேலும் சிறந்த தோல் மற்றும் சுவாச செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது. இந்த கட்டுரையில், உங்கள் அன்றாட உணவில் வெல்லம் சேர்ப்பதன் முதல் 7 விஞ்ஞான ரீதியாக ஆதரிக்கப்பட்ட சுகாதார நன்மைகளை நாங்கள் ஆராய்வோம், மேலும் இது உங்கள் ஆரோக்கிய வழக்கத்தில் ஏன் ஒரு இடத்திற்கு தகுதியானது.உங்கள் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு நாளும் வெல்லம் உட்கொள்ள 7 காரணங்கள்செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறதுவெல்லம் செரிமான நொதிகளின் சுரப்பைத்…

Read More

கிருஷ்ணகிரி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிப்போம் என கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ மூன்றாம் கட்ட பிரச்சாரத்தின் 2-வது நாளான இன்று (ஆக.12) கிருஷ்ணகிரியில் ரவுண்டானா பகுதியில் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும் என பேசியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கோவை, திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. திமுக ஆளும் கட்சியாக இருக்கலாம். கோவையில் அதிமுகதான் ஆளும் கட்சி. 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 80 சதவீதம் வெற்றி பெற்று வலுவான கட்சி என நிரூபித்து உள்ளோம். மேற்கு மண்டலம் அதிமுக வலிமையாக உள்ளது. மீண்டும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம். தமிழகத்தில் ஸ்டாலின்…

Read More

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராமேசுவரம் வரவேண்டிய ரயில்களும், ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைத்தார். ஏப்ரல் 7-ம் தேதி முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி, கோவை மற்றும் வடமாநிலங்களுக்கும் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன. இந்த புதிய ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் நாட்டின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் என்ற பெருமையும் கொண்டது. இந்நிலையில், பயன்பாட்டுக்கு வந்த பின் தூக்குப் பாலம் திறந்து மூடுவதில் இரண்டு முறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, ரயில் போக்கு வரத்தில் தாமதம் ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய தூக்குப் பாலத்தில் உள்ள கம்பிவடம், சக்கரங்களில் பராமரிப்பு செய்யும் பணியில்…

Read More