சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகளை, சென்னை காவல் துறை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில், அன்றைய தினம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்பட உள்ளன. பின்னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் காவல் கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), பிரவேஷ்குமார் (வடக்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாஜக, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில்,…
Author: admin
இது நாக்கில் பாதிப்பில்லாத அழற்சி என்றாலும், இது மேற்பரப்பு பகுதியை பாதிக்கிறது. இந்த நிலையில், நாக்கு பொதுவாக நாக்கில் இளஞ்சிவப்பு-வெள்ளை புடைப்புகளால் மூடப்பட்டிருக்கும். டாக்டர் வாஸ் இந்த நாக்கு நிலைக்கு இணைக்கப்படக்கூடிய பிற நிபந்தனைகளை பட்டியலிடுகிறார், அதாவது வீக்கம், ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை, நோயெதிர்ப்பு ஒழுங்குபடுத்தல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்.இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிவதற்கு டாக்டர் வாஸ் பல சோதனைகளை பரிந்துரைக்கிறார்: சிஆர்பி, ஏ.என்.ஏ, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம்.டாக்டர் வாஸின் வார்த்தைகளில்: உங்கள் நாக்கு உங்களுக்குக் காண்பிப்பதை புறக்கணிக்காதீர்கள். இது நிலையான ஆய்வகங்களில் காண்பிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இது ஆழ்ந்த செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஏதாவது முடக்கப்பட்டால் ஆழமாக சோதிக்கவும்.
பிலாஸ்பூர்: நாய் அசுத்தம் செய்த மதிய உணவைச் சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார்-படாப்புரா மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள், நாய் அசுத்தம் செய்த உணவை 84 மாணவர்களுக்கு வழங்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. விவரம் அறிந்த பின்னர் அந்த மாணவர்களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனிடையே இந்த விவகாரத்தை அரசின் கவனக்குறைவு என்று கூறி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: நாய் அசுத்தம் செய்த உணவைச்…
சென்னை: 64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 45.21 விநாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயதான விஷால் தென்னரசு கயல்விழி. மேலும் இதன் மூலம் இந்த சீசனில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய அளவில் விரைவாக பந்தய இலக்கை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த வகையில் ஜப்பானின் யூகி ஜோசப் நகாஜிமா (44.84 விநாடிகள்), கத்தாரின் அமர் இஸ்மாயில் இப்ராஹிம் (44.90…
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசுகிறார். பாஜக சார்பில் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழகம் முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது. முதல் மாநாடு நெல்லையில் இன்று நடைபெறுகிறது. வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்…
புதுடெல்லி: கடந்த சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் 12%, 28% வரம்பு நீக்கப்பட்டு வரி முறை எளிதாக்கப்படும் என கூறினார். இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க மாநில நிதியமைச்சர்கள் சென்றுள்ளனர். அவர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். அவர்கள் ஜிஎஸ்டி வரியில் 12%, 28% வரம்புகளை நீக்குவதற்கு பரிந்துரை செய்தனர். இது ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்கிறது. இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கினால், ஜிஎஸ்டிவரி முறையில் 5% மற்றும் 18% மட்டுமே இருக்கும். மற்றவை நீக்கப்படும். இவற்றுக்கு பதிலாக ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி முறை அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மாநிலத்துக்கான பங்கீடு மற்றும் வருவாய் இழப்புக்கான இழப்பீடு குறித்த கேள்விகளை ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்யும். மத்திய அரசு அறிவித்த 12%, 28%…
பாப் மார்ட்டின் லாபுபு, ‘அசிங்கமான-அழகான’ கதாபாத்திரம், உலகளாவிய பேஷன் நிகழ்வாக வெடித்தது, ரிஹானா மற்றும் டேவிட் பெக்காம் போன்ற பிரபலங்களை வசீகரிக்கிறது. முதலில் ஒரு தேடப்பட்ட கைப்பை கவர்ச்சி, லாபுபுவின் புகழ் இந்த ஆண்டின் முதல் பாதியில் பாப் மார்ட்டின் ஈர்க்கக்கூடிய வருவாயை 669 மில்லியன் டாலர்களைத் தூண்டியது. பாப் மார்ட் வெறும் பொம்மைகளை விற்கவில்லை, இது ஒரு முழுமையான உலகளாவிய பாணி நிகழ்வை நிர்வகிக்கிறது. அதன் மையத்தில் ஒரு குறும்பு, பல் சூப்பர் ஸ்டார்: லாபுபு. கலைஞர் காசிங் லுங்கின் தி மான்ஸ்டர்ஸ் தொடரின் “அசிங்கமான-அழகான” உயிரினம் பொம்மை அலமாரியை ஒரு நல்ல பேஷன் துணை ஆக மாற்றியுள்ளது, கைப்பைகள், முதுகெலும்புகள், மற்றும் இப்போது, பாப் மார்ட்டின் சமீபத்திய நகர்வுக்கு நன்றி, உங்கள் தொலைபேசியில் கிளிப் செய்யப்படுகிறது. ஆமாம், வழிபாட்டு விருப்பம் மினி சென்றது, அது எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது.நீங்கள் இன்ஸ்டாகிராமிற்கு அருகில் எங்கும் இருந்திருந்தால், லாபுபுவின் பரந்த கண்கள்…
Last Updated : 22 Aug, 2025 09:08 AM Published : 22 Aug 2025 09:08 AM Last Updated : 22 Aug 2025 09:08 AM ரினி ஜார்ஜ், ராகுல் திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்னுடன் நட்புடன் பழகிய அரசியல்வாதி ஒருவர் எனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி, ஓட்டல் அறைக்கு அழைத்தார். காங்கிரஸில் இருப்பவர்கள் உட்பட மேலும் பல பெண்களுக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார். அரசியல்வாதியின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார். என்றாலும் அது பாலக்காடு எம்எல்ஏவும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் தான் என ஊகங்கள் வெளியாகின. கடந்த ஆண்டு பாலக்காடு இடைத்தேர்தலில் வென்ற ராகுல் தொடக்கத்தில் இந்தப் புகாருக்கு பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் மம்கூடத்தில் நேற்று ராஜினாமா…
மெக்கே: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் 297 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது கேசவ் மகராஜின் சுழலில் சிக்கி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்து இருந்தது. இந்நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. 10 காலை 10 மணிக்கு குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில்…
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு விரைவில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளியிட விரும்பாத ஒரு பக்தர் காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஏழுமலையானின் தீவிர பக்தர்களில் ஒருவர் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதில் அவர் அதிக லாபத்தை ஈட்டினார். 60 சதவீத விற்பனையிலேயே அவருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைத்தது. இதனால் அந்த பக்தர், இதெல்லாம் திருப்பதி ஏழுமலையானின் கருணை என்பதை உணர்ந்து, ஏழுமலையானுக்கு 121 கிலோ எடையில் தங்க ஆபரணங்களை வழங்க முடிவு செய்தார். இது குறித்து அந்த பக்தர் என்னை நேரடியாக சந்தித்து ஒரு கடிதமும் கொடுத்தார். அப்போது தன்னுடைய பெயரை மட்டும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுவதை அப்போது…