விண்வெளியில் இந்தியாவின் வளர்ந்து வரும் அபிலாஷைகள் விரைவில் தொழில்நுட்ப சாதனைகள் மூலமாக மட்டுமல்லாமல், கலாச்சார பெருமையின் சக்திவாய்ந்த அடையாளமாகவும் குறிப்பிடப்படும். குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா தனது பயணத்திற்கு தயாராகி வருகிறார் ஆக்சியம் -4 பணி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, அவர் இந்திய வடிவமைப்பாளர் மனிஷ் திரிபாதியால் வடிவமைக்கப்பட்ட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மிஷன் பேட்ஜை அணிவார். இந்த சின்னம் இந்தியாவின் ஆழமான வேரூன்றிய விஞ்ஞான மரபுகளை அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் இணைக்கும் மிஷன் அடையாளத்தை விட அதிகமாக செயல்படுகிறது. பண்டைய ஆய்வகங்களின் அடையாளத்திலிருந்து காகன்யான் போன்ற நவீன சாதனைகளில் முடிச்சுகள் வரை, தி பேட்ஜ் விண்வெளி ஆய்வில் ஒரு தேசத்தின் கதையைச் சொல்கிறது. பாரம்பரியம் தொழில்நுட்பத்தை சந்திக்கும் ஒரு வரலாற்று தருணம் இது; இந்தியாவின் அடையாளம் நட்சத்திரங்களில் தைக்கப்பட்டு, உலக அரங்கில் பெருமையுடன் கொண்டு சென்றது.இந்திய வடிவமைப்பாளர் மனிஷ் திரிபாதி ஆக்ஸியம் -4 விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவுக்கான மிஷன்…
Author: admin
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று குப்தகாஷிக்கு அதிகாலை 5.30 மணிக்கு கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலை 6.00 மணியளவில் ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது. ருத்ரபிரயாகின் கவுரிகுண்ட் வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஹெலிகாப்டர் விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர். இந்தத் தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆரியன் எனும் தனியார் நிறுவனத்திற்கு இந்த ஹெலிகாப்டர் சொந்தமானது. இந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது இன்று அதே ஹெலிகாப்டர் குப்தகாஷியில் இந்து யாத்ரீகர்களுடன் கேதார்நாத்துக்கு பறந்துள்ளது. அனைவரையும் பத்திரமாக இறக்கிய பின் வேறு யாத்ரீகர்களுடன் குப்தகாஷிக்கு திரும்பியபோது இந்த சோக விபத்து…
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் இப்போது அட்லி இயக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. மலையாள நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்கிறார்கள். இது சூப்பர் ஹீரோ கதை என்றும் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்க இருப்பதாகவும் ஜேக்ஸ் பிஜோய் இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடிப்பில் ‘மின்னல் முரளி’ என்ற சூப்பர் ஹீரோ படத்தை ஏற்கெனவே இயக்கி இருந்தார்.
சென்னை: உலக தந்தையர் தினம் இன்று (ஜுன். 15) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தி கவனம் பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ராமதாஸுக்கும் – அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில் உலக தந்தையர் தினத்தில் அன்புமணி பகிர்ந்த பதிவில் “தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்; எல்லா நாளும் வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அன்புமணி தனது எக்ஸ் பக்க பதிவில், “தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், ராமதாஸ் அளித்த பேட்டி ஒன்றில், “உலகளவில் விருது பெற்றால் மட்டும் போதாது. தாய், தந்தையரிடமும் விருது பெற வேண்டும். 2026 தேர்தலுக்குப் பிறகு வேண்டும் என்றால், அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாக கூறினேன்.…
புது டெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததில் சதி இருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக, அகமதாபாத் கிளம்பி வந்த துருக்கி நாட்டுக் குழுவினர் சம்பந்தப்பட்ட போயிங் விமானத்தை தாங்கள் பராமரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். அகமதாபாத் விமான விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இந்த போயிங் விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டதாக சில குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்தன. இப்பிரச்சனையில், போயிங்கின் பராமரிப்பு உரிமைகோரலை துருக்கி நிறுவனம் நிராகரித்துள்ளது. இதற்காக துருக்கியின் விமான விபத்து புலனாய்வு பணியகக் குழு அகமதாபாத்திற்கு வருகிறது. மேலும், துருக்கியின் விமான விபத்து புலனாய்வு பணியகக் குழு அகமதாபாத்திற்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் விமானத்தை துருக்கி பராமரிப்பதாக ஏர் இந்தியா கூறியதாக செய்திகள் வெளியாகின. இதை நிராகரிக்கும் வகையில் இந்தியா வந்த துருக்கியின் விபத்து புலனாய்வு பணியகக் குழுவினர் அறிக்கை…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக் கணத்தை உருவாக்கி தந்த ‘இருவர்’ எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களின், வரலாற்றின் மூலப்படிவமாக இந்த வெற்றி நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எப்படி 1983 உலகக் கோப்பை இந்திய வரலாற்றில் ஒரு நாட்டுப்புறக் கதை போல் புழங்கத் தொடங்கி அதிலிருந்து பலரும் உத்வேகம் பெற்று கிரிக்கெட் இன்று இந்திய அணியை இந்த நிலைக்கு வளர்த்து விட்டதோ, அதேபோல் தென் ஆப்பிரிக்கா அதன் நீண்ட கால நிறவெறி மற்றும் வெள்ளை இன அடக்குமுறைகளில் இருந்து மீண்ட பிறகு ஏகப்பட்ட ஐசிசி தொடர் முக்கியக் கட்ட ஏமாற்றங்களுக்குப் பிறகு இப்போது வென்று கருப்பரின…
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘ரங்கூன்’ படத்தில் நாயகியாக நடித்தவர், இந்தி நடிகை சனா மக்புல். தொடர்ந்து ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஏராளமான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள இவர், தற்போது கல்லீரலில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “நான் சில காலமாக கல்லீரல் அழற்சி நோயுடன் வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் நிலைமை மோசமடைந்து விட்டது. இப்போது எனக்கு கல்லீரல் இறுக்கம் (சிரோசிஸ்) இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நானும் மருத்துவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எனது நோய் எதிர்ப்பு சிகிச்சையும் தொடங்கிவிட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லாமல் இந்த நோய் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நோய் ஏதோ நேற்று வந்ததல்ல. நீண்ட காலமாக அவதிப்பட்டு வருகிறேன். இப்போது தீவிரமடைந்து விட்டது. ஆனாலும் நான் வலுவாக இருக்க முயற்சிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி: தமிழக அரசியலின் திசைவழியை விசிக தீர்மானிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார். ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிவிஎஸ் டோல்கேட்டில் தொடங்கிய பேரணியை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியானது குட்ஷெட் பாலம், தலைமை அஞ்சல் அலுவலகம், ஒத்தக் கடை வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது: தமிழகத்தில் எல்லோரும் தேர்தல் கணக்குகளை பற்றி பேசிக் கொண்டிருக் கிறார்கள். யார் எந்தக் கூட்டணி, எத்தனை இடங்கள். யார் முதல்வர் என்ற கவலை நமக்கு இல்லை. திமுகவிடம் விசிக சிக்கிக் கொண்டு தவிக்கிறது என அரசி யல் அறியாமையில் அலையும் அற்பர்கள், அரைவேக்காடுகள் பேசுகின்றனர். தமிழக அரசியலின் திசைவழியை தீர் மானிப்பவர்கள் விசிகவினர். இந்திய அரசியலையே மதச்சார் பின்மைக்கு எதிரானவர்கள், ஆதரவான வர்கள் என்று…
ஒரு அரிய மற்றும் குறிப்பிடத்தக்க விஞ்ஞான சாதனைகளில், விஞ்ஞானிகள் 13 பில்லியன் ஆண்டுகள் பழமையான மைக்ரோவேவ் சிக்னலை தி காஸ்மிக் டான் என்று அழைக்கப்படும் காலத்திலிருந்து கண்டறிந்துள்ளனர். இது ஒரு நேரம் பிக் பேங் முதல் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் உருவாகத் தொடங்கியபோது. இந்த சாதனையை குறிப்பிடத்தக்கதாக ஆக்குவது என்னவென்றால், சமிக்ஞை விண்வெளியில் இருந்து அல்ல, ஆனால் வடக்கு சிலியின் ஆண்டிஸ் மலைகளில் அதிக உயரத்தில் அமைந்துள்ள பூமி சார்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்பு வானியற்பியலாளர்களால் செய்யப்பட்டது வகுப்பு (அண்டவியல் பெரிய கோண அளவிலான சர்வேயர்) திட்டம். இந்த திட்டத்திற்கு அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை நிதியளிக்கிறது. துருவப்படுத்தப்பட்ட நுண்ணலை கதிர்வீச்சின் இந்த பலவீனமான சமிக்ஞைகள் அரிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன ஆரம்பகால பிரபஞ்சம் முதல் அண்ட கட்டமைப்புகள் பிக் பேங்கிலிருந்து வெளிச்சத்தை எவ்வாறு பாதித்தன என்பதை வெளிப்படுத்துகின்றன.இதுபோன்ற மங்கலான மற்றும் பண்டைய சமிக்ஞை தரையில் இருந்து காணப்படுவது இதுவே…
அகமதாபாத் விமான விபத்து, இஸ்ரேல்-ஈரான் போர் ஆகியவற்றால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமானப் பயணக் கட்டணங்கள் உயரும் ஆபத்து உருவாகியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரால் அவற்றின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் ஏர் இந்தியா உட்பட உலகின் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லண்டன், துபாய், அபுதாபி, ரியாத், பிராங்பர்ட் போன்ற விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். ஆண்டுதோறும் 15 சதவீத வளர்ச்சியுடன் இது செயல்படுகிறது. உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் சமீபத்திய சில சம்பவங்கள் அதன் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுப்பதாக உள்ளது. முதலாவதாக, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது, இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய…
