Author: admin

ராஜஸ்தானில் போலி மந்திரவாதிகள் கொடுத்த உணவுப்பொருளை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து ரொக்கம் உட்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நகரின் கஜுவாலா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கப்பார். ஷைத்தான் சிங் மற்றும் விக்ரம் சிங் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மந்திரவாதிகளை அழைத்துக் கொண்டு கப்பாரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பிளாக் மேஜிக் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறிய அவர்கள் சில சடங்குகளை செய்துள்ளனர். இந்த சடங்கில், ஷைத்தான் சிங், விக்ரம் சிங், அப்துல் கப்பார் மற்றும் அவருக்கு தெரிந்த ரஜேந்திர சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்றுள்ளனர். அப்போது, சில உணவுப் பொருளை அந்த 4 பேருக்கும் மந்திரவாதிகள் கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்ட அவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த ரொக்கம் உட்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அந்த மந்திரவாதிகள் கொள்ளையடித்துச்…

Read More

காட்பாடி யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில், திருவண்ணாமலை – தாம்பரம் ரயில் உள்பட 6 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை – திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி (66033), காட்பாடி – திருப்பதிக்கு இரவு 9.10 மணி ( 67210), , திருப்பதி – காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு (67209) இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, திருவண்ணாமலை – தாம்பரத்துக்கு ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) ரத்து செய்யப்பட உள்ளது. பகுதி ரத்து: ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், அரக்கோணம் – காட்பாடிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66057), சேவூர் – காட்பாடி…

Read More

11a விமானத்தில் பாதுகாப்பான இருக்கையா? ஏர் இந்தியா விபத்து உயிர் பிழைத்தவரின் கதை வைரலாகிறது; வல்லுநர்கள் உண்மையை விளக்குகிறார்கள் அகமதாபாத் காற்று விபத்து: அகமதாபாத்தில் ஒரு சோகமான ஏர் இந்தியா விபத்துக்குள்ளானதை அடுத்து, ஒரு தனி உயிர் பிழைத்தவர் ஒரு பிரபலமான கேள்வியை வெளிப்படுத்தியுள்ளார் – ஒரு விமானத்தில் “பாதுகாப்பான இருக்கை” போன்ற ஒன்று இருக்கிறதா? போயிங் 787 ட்ரீம்லைனர் பேரழிவிலிருந்து விலகிச் சென்ற ஒரே பயணிகள் விஸ்வாஷ்குமார் ரமேஷ் 11A இல் அமர்ந்திருந்தார், அவசரகால வெளியேறலுக்கு அடுத்ததாக அமைந்துள்ள ஒரு இருக்கை. அவரது உயிர்வாழ்வு தீவிரமான பொது ஊகங்களுக்கு வழிவகுத்தாலும், விமான விபத்துக்களில் உயிர்வாழக்கூடிய தன்மை இருக்கை எண்களை விட அதிகமாக நிர்வகிக்கப்படுகிறது என்பதை விமானப் பாதுகாப்பு வல்லுநர்கள் விரைவாக தெளிவுபடுத்துகிறார்கள்.ஒவ்வொரு செயலிழப்பும் வேறுபட்டது, மேலும் வெளியேறுதல்களுக்கு அருகாமையில் இருப்பது ஒருவரின் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும், விமான வடிவமைப்பு, தாக்க இருப்பிடம், தீ இயக்கவியல் மற்றும் பயணிகள் நடத்தை போன்ற பல…

Read More

பாஜக தலைவரும், சமூக சேவகருமான பசுபதிநாத் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் கழிதது, 16 பேருக்கு ஆயுள் தண்டனையை வாராணசி நீதிமன்றம் வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள சிக்ரா பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிநாத். சமூக சேவகரான இவர், பாஜக நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவரது மகன் ராஜ்குமார் சிங் (42). கடந்த 2022-ல் அப்பகுதியிலுள்ள சாராயக் கடையில் சிலர், தகராறில் ஈடுபட்டனர். அதை ராஜ்குமார் சிங் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜ்குமார் சிங்கை தாக்க ஒரு கும்பல் ஓடி வந்தது. இதைத் தொடர்ந்து தனது மகனைக் காப்பாற்ற பசுபதிநாத் ஓடினார். அந்த கும்பல், பசுபதிநாத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. மகனைக் காப்பாற்றும் முயற்சியில் பசுபதிநாத் உயிரிழந்தார். இந்த வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் 2 பேர் மைனர் என்பதால் அவர்கள், சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடந்து…

Read More

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருதரப்புக்கு இடையே மோதல் தொடர்கின்ற காரணத்தால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மற்றும் அமேரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் – ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. உலகத் தலைவர்கள் இந்த மோதல் கூடாது என வலியுறுத்தி உள்ளனர். ட்ரோன்கள் அழிப்பு: கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் தங்கள்…

Read More

கடலூர்: சிதம்பரத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் வடக்கு மெயின் மெயின் ரோடு பெரிய அண்ணா குளம் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 55 ஆண்டுகளாக வெகு விமரிசையாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 56 ஆண்டுக்கான திருவிழா கோயிலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான நேற்று இரவு (ஜூன்.14) கோயிலுக்கு அருகே உள்ள பெரிய அண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிதம்பரம் வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த தெப்ப உற்சவத்தில் குளத்தை 3 முறை சுற்றி வந்த பிறகு பின்பு மீண்டும் சாமி கோயிலுக்கு மேல தாளம் முழங்க கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான…

Read More

‘அஞ்சான்’ படத்தின் புதிய வெர்ஷன் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘அஞ்சான்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. இப்படத்தினை விளம்பரப்படுத்திய விதம் குறித்து இப்போதும் திரையுலகில் பலரும் குறிப்பிடுவார்கள். தற்போது இப்படத்தின் புதிய வடிவம் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார். ‘அஞ்சான்’ படத்தின் புதிய வடிவம் குறித்து லிங்குசாமி, “இந்தியில் அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘அஞ்சான்’ படத்தினை மணிஷ் என்பவர் வாங்கி அதனை புதிய வடிவத்தில் எடிட் செய்திருந்தார். அதனை பார்த்துவிட்டு மிரண்டுவிட்டேன். இது நமக்கு தோன்றவில்லையே என நினைத்தேன். அந்த வடிவத்தை தமிழில் வெளியிடும் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன்…

Read More

மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு தன்மையை உறுதி செய்து அறிக்கை சமர்பிக்க, மெட்ரோ ரயில் உயர்மட்ட வழித்தடத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் 3 நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமாக மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 3-வது வழித்தடத்தில் பல இடங்களில் உயர்மட்டபாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தடத்தில் ஒரு பகுதியாக, போரூர் – சென்னை வர்த்தக மையம் வழித்தடத்தில் உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இவற்றில், நந்தம்பாக்கம் அருகே இணைப்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதற்காக, மணப் பாக்கம் எல் அண்ட் டி நிறுவன நுழைவுவாயில் அருகே இரு தூண்களுக்கு இடையே இரண்டு ராட்சத கர்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கர்டர்கள் கடந்த 12-ம் தேதி இரவு சரிந்து…

Read More

அகமதாபாத்: கடந்த வியாழக்கிமை (ஜூன்.12) அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோரின் உடல்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 31 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட பலரை அடையாளம் கண்டறியும் டிஎன்ஏ சோதனை இன்னும் நடைபெற்று வருவதாக பி.ஜே. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ரஜ்னிஷ் படேல், “தற்போது வரை மொத்தம் 31 உடல்களின் டிஎன்ஏ அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 12 உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் வந்து தங்கள் உறவினர்களின் உடல்களை சேகரிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலை அடையாளம் காணும் பணி இன்னும் நடந்து வருகிறது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் அவரது டிஎன்ஏ இன்னும் பொருந்தவில்லை. அவரது…

Read More

தமிழகத்தில் கடலூர், ஆம்பூர் நகரங்களில் தமாகா நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகளை மீட்க தமிழ்நாடு காங்கிரஸின் சொத்து மீட்புக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றின் மூலம் வாடகையாக கட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருகிறது. பல சொத்துகள் யாரிடம் இருகிறது என்றே தெரியவில்லை. சில சொத்துகள் தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கடந்த 2017-ம் ஆண்டு முதல், காங்கிரஸ் சொத்து மீட்புக் குழுவை தேசிய அளவில் நியமித்து, காங்கிரஸின் பூர்வீக சொத்துகளை மீட்டு வருகிறது. தற்போது இதன் தலைவராக பஞ்சாப்பைச் சேர்ந்த விஜயேந்திர சிங் உள்ளார். தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கான பொறுப்பாளராக நிதின் கும்பல்கர் உள்ளார். தமிழகத்திலும் கடந்த 2017-ம் ஆண்டு சொத்து மீட்புக்குழு, ஜெ.எம்.ஆருண் தலைமையில் அமைக்கப்பட்டது. தற்போது…

Read More