சென்னை: ஆர்டிஇ திட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.617 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ‘நான் முதல்வன்’ திட்டம் மட்டுமின்றி ‘உயர்வுக்குப் படி’ திட்டம் மூலமும் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. தற்போது அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ‘கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு திறன்’ எனும் திட்டம் மூலம் இதில் மேலும் கவனம் செலுத்தப்படும். முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தை இன்னும் அதிகப்படுத்த இருக்கிறோம். பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களை வீடுகளுக்கே தேடிச்சென்று அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை செய்துவருகிறோம். தேர்வை எழுதாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு சிறந்த வாய்ப்பாகும்.…
Author: admin
வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். அண்மையில் அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை அடுத்து அவர் இப்படி சொல்லியுள்ளார். “போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டுமே முடியும். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தில் நாம் தலையிட போவதில்லை. அது நம் பணியும் அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் ஆயுதங்கள் கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது. இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பது நம் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் உள்ளது” என வான்ஸ் கூறியுள்ளார்.…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். 8-ம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 9-ம் நாளான புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 10-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினர். திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி -…
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். ‘கூலி’ படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு தான், ‘கைதி 2’ இயக்கவுள்ளார். லோகேஷ் நடிக்கும் படத்த்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். தற்போது அருண் மாதேஸ்வரன் கதையை இறுதி செய்து, முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்துக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ‘கூலி’ இறுதிகட்டப் பணிகள் முடிந்தவுடன் முழுமையாக இதில் கவனம் செலுத்தவுள்ளார். அருண் மாதேஸ்வரன் படத்தை முடித்துவிட்டு, இந்தாண்டு இறுதியில் ‘கைதி 2’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கேவிஎன் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.
மதுரை: தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த இரணியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில், 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் கட்டாயக் கல்வி பெறுவதை கல்வி பெறும் உரிமைச் சட்டம் உறுதிப்படுத்தியது. இந்த சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்க வேண்டும். இது சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 25 சதவீதி இடஒதுக்கீடு ஒவ்வொரு…
புதுடெல்லி: எந்தவொரு சைபர் அச்சுறுத்தல்களையும் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வர்த்தக உறுப்பினர்களுக்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில், “ரான்சம்வேர், விநியோகச் சங்கிலி ஊடுருவல், டிடிஓஎஸ் தாக்குதல், வலைத்தள சிதைப்பு, மால்வேர் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சைபர் தாக்குதல்கள் குறித்து சந்தை பங்கேற்பாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற இடர்பாடுகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும். நமது நாட்டின் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறையில் செயல்படும் அமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக இண்டியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி-இன்) சுட்டிக்காட்டியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது” என பிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து வங்கிகள் தங்களது இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள தங்களது கிளைகளில் வங்கிகள்…
சைக்கிள் நெருக்கடிகள் உங்கள் மேல் மற்றும் கீழ் ஏபிஎஸ் மற்றும் உங்கள் சாய்வுகளை (பக்க தசைகள்) குறிவைக்கின்றன, இது தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதை எப்படி செய்வது:உங்கள் முதுகில் படுத்து, கால்களைத் தூக்கி, 90 டிகிரி கோணத்தில் முழங்கால்களை வளைக்கவும்.உங்கள் கைகளை உங்கள் தலையின் பின்னால் வைக்கவும்.உங்கள் வலது காலை நேராக்கும்போது உங்கள் வலது முழங்கையை உங்கள் இடது முழங்காலை நோக்கி கொண்டு வாருங்கள்.உங்கள் இடது முழங்கையை உங்கள் வலது முழங்காலுக்கு கொண்டு வருவதன் மூலம் பக்கங்களை மாற்றவும்.30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை சைக்கிள் ஓட்டுதல் இயக்கத்தில் மாற்றுவதைத் தொடரவும்.இந்த உடற்பயிற்சி உங்கள் மையத்தை தொனிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது. மேலும் ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் துறை தலைவர், உளவுத் துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராஜஸ்தானில் சிவப்பு எச்சரிக்கை அவசர நிலையை அமல்படுத்த முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டார். இதன்படி ராஜஸ்தான் முழுவதையும் உஷார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் அகர்வால்…
ஜெய்சல்மார்: பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயணித்த எஃப் 16 ரக விமானத்தை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்திய நிலையில், அதிலிருந்து வெளியேறிய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சல்மாரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலை மேற்கொண்டதாக தகவல். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லையோர பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் ‘யாரும் வெளிவர வேண்டாம்’ என எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல். முன்னதாக, வியாழக்கிழமை இரவு 8.20 மணி அளவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரை குறிவைத்து இந்த தாக்குதல் இருந்தது. இதை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு கருவி மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜம்மு விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.…
புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அவரிடம் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பதில் தாக்குதலை இந்தியா கொடுக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாது கத்தார், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். “அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உடன் பேசினேன். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதியை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு இந்தியா தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டி பேசியுள்ளேன். அதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துள்ளேன்” என கூறியுள்ளார்.…
