Author: admin

திருவனந்தபுரம்: கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. இதன்பிறகு கடந்த 2019, 2021, 2024-ம் ஆண்டுகளில் இதே பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் தென்பட்டன. அப்போது சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த சூழலில் கேரளாவின் மலப்புரம் மாவட்டம், வளஞ்சேரியை சேர்ந்த 42 வயதான பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வளஞ்சேரி முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள்…

Read More

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவ, மாணவிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 436 அரசுப் பள்ளிகள் உட்பட 2,638 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,316 மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 8.02 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பதிவு செய்த நிலையில், 7.92 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10,049 பேர் (1.25%) தேர்வில் பங்கேற்கவில்லை. மாநிலம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 4-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளும் முடிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட…

Read More

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்னதுபோல கல்லூரிக் கனவு – உயர்வுக்குப் படி – சிகரம் தொடு – நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள், மாணவர்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தை ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடக் கூடாது. அவர்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவார்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உயர்கல்விக்கான விருப்பமிக்க மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து…

Read More

புதுடெல்லி: அரசியல் கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வரக்கோரி கடந்த 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தலில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதால், அரசியல் கட்சிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட அரசியல் கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு பதில் அளிக்க கோரி மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் 6 அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்நத 14-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா மற்றும்…

Read More

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 2,853 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 26,887 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் பல்வேறு பாடங்களிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அந்த வகையில், 2,853 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 26,887 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் ‘சென்டம்’ எடுத்துள்ளனர். கணினி பயன்பாடு – 4,208, வேதியியல் – 3,181, கணிதம் – 3,022, வணிகவியல் 1,624, கணக்கு பதிவியல் – 1,240, இயற்பியல் – 1,125, உயிரியல் – 827, பொருளியல் – 556, வணிக கணிதம், புள்ளியியல் – 273, தாவரவியல் – 269, வரலாறு – 114, விலங்கியல் – 36 என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் ‘சென்டம்’ பெற்றுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழில் 135 பேர், ஆங்கிலத்தில் 68 பேர்…

Read More

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 9) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 12 முதல் 14-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 10, 11 தேதிகளில் ஒருசில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில…

Read More

புதுடெல்லி: இந்தியா மீது வியாழக்கிழமை அன்று இரவு பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. அதை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், சிம்லா, கங்கரா, பட்டிண்டா, ஜெய்சல்மார், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முன்ட்றா, ஜாம்நகர், ஹிராசர் (ராஜ்கோட்), போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. மே 10-ம் தேதி வரை இந்த விமான நிலையில் மூடப்பட்டு இருக்கும் என தகவல். பாதுகாப்பு மேம்பாடு: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்ட காரணத்தால் பயணிகள், தங்களது புறப்பாட்டுக்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்னதாக…

Read More

காவலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல் ஒரு சிறிய, பாசமுள்ள இனமாகும், இது ஆரம்பநிலைக்கு சரியான பொருத்தமானது. இந்த நாய்கள் நட்பு, தகவமைப்பு மற்றும் மனோபாவம் மற்றும் அளவு இரண்டிலும் குறைந்த பராமரிப்பு. அவர்கள் தோழமை மற்றும் அன்பை நேசிக்கிறார்கள், ஆனால் ஒளி நாடகத்தையும் நடைகளையும் அனுபவிக்கிறார்கள். அவர்களின் மென்மையான நடத்தை குழந்தைகள், மூத்தவர்கள் மற்றும் பிற செல்லப்பிராணிகளுடன் அவர்களை சிறந்ததாக்குகிறது. அவர்களின் நீண்ட காதுகள் மற்றும் மென்மையான கோட் மிதமான சீர்ப்படுத்தல் தேவைப்படும்போது, ​​அவற்றின் இனிமையான, ஆர்வமுள்ள தன்மை இயல்பு ஒரு புதிய வீட்டிற்கு வரவேற்க எளிதான சிறிய இனங்களில் ஒன்றாகும்.

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியா கொடுத்த பதிலடியில், பாகிஸ்தானில் லாகூர் உட்பட பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்கள் அழிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா திட்டமிட்ட துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த 25 நிமிட தாக்குதலில், தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 குண்டுகள் வீசப்பட்டன. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள்…

Read More