சென்னை: நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வை தமிழக சிறைகளில் உள்ள 2 பெண் கைதிகள் உட்பட 130 கைதிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 கைதிகள் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. புழல் சிறையில் தேர்வு எழுதிய 21 பேரில் 18 பேரும், புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 4 பேரில் 2 பேரும், வேலூர் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 9 பேரில் 5 பேரும், கடலூர் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 7 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல கோவையில் 20, சேலத்தில் 8, திருச்சியில் 22, மதுரையில் தேர்வு எழுதிய 30 பேரில் 29 பேரும், பாளையங்கோட்டையில் 7 பேரும், மதுரை மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் தலா ஒருவரும் தேர்ச்சி பெற்றனர். பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி மீனாட்சி சுந்தரம் 524 மதிப்பெண்களும், அதே சிறைக் கைதி வைத்திலிங்கம் 517 மதிப்பெண்களும்,…
Author: admin
சென்னை: பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்தும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுவதாக அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, ரேகா பிரியதர்ஷினி, செல்வக்குமார், பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், ‘பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செயல்படுவது உறுதியாகி இருக்கிறது. இதற்காக முதல்வருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மனப்பூர்வமாக பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது’ என கூறியுள்ளனர்.
ஒரு குடும்ப திருமணத்தில் அணிய லெஹங்காவைத் தேடுவது, இங்கே மிகவும் பிரபலமான லெஹங்காக்கள் உள்ளன.
புதுடெல்லி: இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை. ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஜம்மு எல்லை பகுதியில் வியாழக்கிழமை இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப் படையின் எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. முன்னெச்சரிக்கையாக ஜம்மு மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால்…
சென்னை: பாமக சார்பில் 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா திருவிடந்தை நித்தியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பி்ல் மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சி்த்ரா பவுர்ணமி நாளில் பாமக நடத்தும் இந்த மாநாட்டின் காரணமாக கோயி்ல்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுவர் என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’’ எனவும் கோரியிருந்தார். இந்த…
முட்டைகளில் புரதம், பயோட்டின், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. போதுமான புரத உட்கொள்ளல் முடி அமைப்பு மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கிறது, அதே நேரத்தில் பயோட்டின் கெராடின் உற்பத்தியில் உதவுகிறது. முடி உயிர்ச்சக்தியை ஊக்குவிப்பதற்கான ஒரு சீரான உணவுக்கு முட்டைகள் ஒரு மதிப்புமிக்க கூடுதலாக இருக்கலாம், ஆனால் அவை முடி உதிர்தலுக்கான முழுமையான தீர்வு அல்லது அதிசய சிகிச்சையாக இல்லை. முடி வளர்ச்சி என்பது ஆரோக்கியமான, முழுமையான பூட்டுகளைத் தேடும் பலருக்கு ஒரு கவலையாக உள்ளது. கூடுதல் மற்றும் சீரம் முதல் வீட்டு வைத்தியம் மற்றும் உணவு மாற்றங்கள் வரை, முடி வளர்ச்சி எய்ட்ஸின் பட்டியல் நீளமானது.இவற்றில், முட்டைகள் பெரும்பாலும் இயற்கையான, மலிவு விருப்பமாக வருகின்றன. ஆனால் முட்டைகளை சாப்பிடுவது உண்மையில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும், அல்லது இது மற்றொரு அழகு கட்டுக்கதையா? இந்த கூற்று கட்டுக்கதை அல்லது யதார்த்தமா என்பதை தீர்மானிக்க…
வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் வகையில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கராச்சி விமான நிலையம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதைத் தொடர்ந்து அனைத்து விமானப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் தங்களது வான்வெளியை 48 மணி நேரம் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும், இந்தியாவின் பொறுப்பற்ற மற்றும் ஆத்திர மூட்டும் செயல்களால் சிவில் விமானப் போக்குவரத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பிடம் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சுமார் 6 கி.மீ தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், புத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று திருச்சி வந்தார். பின்னர், துவாக்குடி அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 5.30 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டார். டிவிஎஸ் டோல்கேட் சந்திப்பிலிருந்து குட்ஷெட் மேம்பாலம் வரை அரை கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து காரில் ஏறி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இறங்கினார். திருச்சி புத்தூரில் நடிகர் சிவாஜி கணேசன்…
பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார் மற்றும் அமைப்பை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 412 புள்ளிகளை இழந்து 80,334 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி-50 குறியீட்டெண் 141 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,273 புள்ளிகளில் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.90% மற்றும் 1.05 % சரிந்தன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு குறைந்ததால் நேற்று ஒரே வர்த்தக தினத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ரூ.423.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்று ரூ.418.50 லட்சம் கோடியாக சரிவடைந்தது. பாகிஸ்தான் சந்தையில் கடும் வீழ்ச்சி: இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச் சந்தைகளில்…
ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. ஜம்மு எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள் திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஜம்முவின் சில இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு பகுதி முழுவதும் நேற்றிரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். காஷ்மீரின் ஜம்மு பிராந்தியம், பூஞ்ச் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை…
