புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிகழும் மோதலால் அங்கு வாழும் பாம்புகளும் பாதிக்கப்பட்டு அவைகள் இடம்மாறித் தவிக்கின்றன. பாம்புகளை மீட்கும் பணியில் எஸ்ஒஎஸ் எனும் சர்வதேச அமைப்பின் ஜம்மு காஷ்மீர் பிரிவு ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் வாழும் வனவிலங்குகள் எதிர்பாராத துயரங்களை சந்தித்து வருகின்றன. காஷ்மீர் போன்ற உணர்திறன் மிக்க பகுதிகளில், மனித வாழ்விடங்கள் இயற்கையான வாழ்விடங்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது முதல் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான எஸ்ஒஎஸ் வனவிலங்குகளின் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. இந்த தொண்டு நிறுவனத்தின் ஜம்மு-காஷ்மீர் பிரிவிடம் உதவி கேட்டு தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன.. இவற்றில் பெரும்பாலனவை எல்லையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வருபவை. இப்படி வரும் பல அழைப்புகளுக்கு எஸ்ஒஎஸ் தொடர்ந்து பதிலளித்து வருகிறது. போர்ச் சூழலால், எல்லைகளில் அதிகரித்து வரும்…
Author: admin
சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு இன்று (மே 9) தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் இளநிலை வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மே 9) காலை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர…
உளவியல் சார்ந்து பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம். குறுகுறுப்பான பதின்மம் எதிர்பாலினர் மீதான ஈர்ப்பால் அதிகக் குறுக்கீட்டைச் சந்திக்கும் பருவம். இன்னொரு பக்கம், பெற்றோரின் அதிகப்படியான கண்டிப்பு, பள்ளிப் பாடங்களின் சுமை என அழுத்தும் மனச்சுமையால் ‘பிகேவியரல் சேன்ஞ்சஸ்’ என்கிற பெரிய சிக்கல்களையும் சந்திக்கிறார்கள். இந்தப் படம் தமிழ் சினிமாவில் இதுவரைக் கையாண்டிராத பதின்ம வயதினரின் உளவியல் சிக்கலை ஒரு ஹாரர் த்ரில்லராகக் கையாண்டிருப்பது முற்றிலும் புதிய முயற்சியாக அமைந்திருக்கிறது. குறிப்பாகத் திகில் பட பாணியில், இதுவரை யாரும் தொடாத கதைக்கருவில் வெகுசில பதின்ம வயதினரைப் பாதிக்கும் உளவியல் சிக்கலைக் கதைக்களமாக்கியிருக்கிறது. பதின்ம பருவத்தின் தொடக்கத்திலிருக்கிற தரணின் கண்ணுக்கு, வீட்டுக்குள்ளும் வெளியிலும் முகக்கவசம் அணிந்த உருவம் ஒன்று அடிக்கடி தென்படுகிறது. அது தன்னை ‘கீனோ’ என சொல்லிக் கொண்டு ‘என்னிடம் வா’, ‘என்னைக் கட்டியணைத்துக் கொள்’ என்று அழைக்கிறது. பதின்மத்தை ஊடறுக்கும் சுற்றமும் நட்பும் அந்த உருவத்தைக் கண்டு…
ட்ரைகாப்ரின், இயற்கையான துணை, ட்ரைகிளிசரைடு டெபாசிட் கார்டியோமியோவாஸ்குலோபதி (டி.ஜி.சி.வி), ஒரு அரிய இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்வாழும் விகிதங்களை கணிசமாக மேம்படுத்துகிறது என்பதை ஒசாகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ட்ரைகாப்ரின் அறிகுறிகளைத் தணிப்பது மட்டுமல்லாமல், இதய தசை செயல்பாடு மற்றும் கட்டமைப்பு சேதத்தை மாற்றியமைத்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் மரணத்திற்கு இருதய நோய்கள் முக்கிய காரணமாகும். இந்த நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் உயிர்களைக் கோருகின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.பல தீவிர நிகழ்வுகளில், இத்தகைய ஆஷியர்ட் தோல்வி, ஒரு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே வழி. இது ஒரு தீவிர அறுவை சிகிச்சை மற்றும் அதிக செலவில் வருகிறது, இது பெரும்பாலும் நோயாளிகளை பெரும் நிதி அழுத்தத்தில் சேர்க்கிறது. எவ்வாறாயினும், இதய செயலிழப்பு உள்ள சில நோயாளிகளுக்கு மீட்கப்படுவதற்கு தேவைப்படும் அனைத்தும் தேவைப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். ஆம், அது சரி, அறுவை…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முறியடித்துள்ளனர். இந்த முயற்சியில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டத்தாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஜம்மு பிஎஸ்எஃப் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மே 8-ம் தேதி சுமார் 11 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் நடந்த மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தானின் தாண்டர் பகுதியில் இருந்து அங்குள்ள துருப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினை பயன்படுத்தி பெரிய குழு ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்தது. என்றாலும் விழிப்புடன் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், மிகப்பெரிய இந்த ஊடுருவலை தடுத்தனர். குறைந்தது 7 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இதன்மூலம் பாகிஸ்தான் தரப்புக்கு பெரும் சேதம் விளைவித்தனர். தொடர் கண்காணிப்புகளால் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.…
குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம், இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஹில் குரோவ் பகுதில் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்க வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் குன்னூர் – ஊட்டி இடையே பாதிப்பின்றி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தொகுக்கப்பட்ட உணவு, ரொட்டிகள், உணவு, நம்கீன்கள் போன்றவற்றை சாப்பிடத் தயாராக இருக்கும், ஆனால் பெரும்பாலான தொகுக்கப்பட்ட உணவுகள் உப்பு, கொழுப்பு மற்றும் பாதுகாப்புகள் அதிகம், இதனால் அவை மிகவும் ஆரோக்கியமானவை, மேலும் நம் கணினிக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன.துரதிர்ஷ்டவசமாக அது மோசமடைகிறது. பல தொகுக்கப்பட்ட உணவுகளில் நீண்ட காலமாக உட்கொண்டால், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மறைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. எனவே, தீர்வு என்ன? தொகுக்கப்பட்ட உணவை வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய 4 பொருட்கள் இங்கே …பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள்தொத்திறைச்சி, பன்றி இறைச்சி, ஹாட் டாக் மற்றும் டெலி இறைச்சிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பெரும்பாலும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் உள்ளன. இந்த இரசாயனங்கள் இறைச்சியைப் பாதுகாக்கவும் அதன் நிறத்தையும் சுவையையும் மேம்படுத்தவும் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும், உடலில், அவை நைட்ரோசமைன்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்கலாம், அவை பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய்களுடன் இணைக்கப்பட்ட புற்றுநோய்கள்.உலக சுகாதார அமைப்பு…
புதுடெல்லி: உத்தராகண்டில் யாத்ரீகர்களுடன் கங்கோத்ரிக்குச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானி, ஐந்து யாத்ரீகர்கள் என ஆறு பேர் உயிரிழந்தனர். உத்தராகண்டின் டேராடூனில் இருந்து கங்கோத்ரிக்கு வியாழக்கிழமை காலை 6 யாத்ரீகர்களுடன் ஹெலிகாப்டர் கிளம்பத் தயாராக இருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஹெலிகாப்டர் பறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வானிலை எச்சரிக்கை அறிவுறுத்தலை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் காலை 9 மணியளவில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கனானி கிராமத்துக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளனாது. பின்பு அங்குள்ள பாகீரதி ஆற்றில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு யாத்ரீகர்களில் 5 பேர் மற்றும் விமானியும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மும்பையைச் சேர்ந்த விஜய் லட்சுமி ரெட்டி (57), ருச்சி அகர்வால் (56), கலா சந்திரகாந்த் சோனி (61), உத்தரப் பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த…
சென்னை: இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கமல்ஹாசன் தனது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் உயர்ந்த பாதுகாப்பு நிலையை முன்னிட்டு, மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது ராணுவ வீரர்கள் துணிச்சலோடு எல்லையில் தங்கள் கடமையை செய்து வரும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம்…
சென்னை: தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர்களின் துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன. துரைமுருகன் வசம் இருந்த கனிமவளத் துறை, ரகுபதிக்கும், அவரிடம் இருந்த சட்டத் துறை, துரைமுருகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி 6-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கரிடமும், மதுவிலக்குத் துறை, முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன. பொன்முடி கவனித்து வந்த வனத் துறை, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், 2 அமைச்சர்களின் துறைகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரைப்படி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த சுரங்கங்கள், கனிமவளத் துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
