புதுடெல்லி: ‘‘பாகிஸ்தான் அணு ஆயுத நாடாவதை தடுக்காமல் காங்கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்டது’’ என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளாார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “காங்கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறுவதற்கு இந்தியா எப்படி விட்டது’’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 1980-களில் பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதை இந்தியாவின் ‘‘ரா’’ உட்பட உளவு துறைகள் உறுதிப்படுத்தின. பாகிஸ்தான் கவுதா என்ற பகுதியில் அணுஆயுத தயாரிப்பு கூடத்தை அமைத்து வந்தது. அங்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் அதை தடுக்க இந்தியாவுக்கு இஸ்ரேல் உதவ முன் வந்தது. அதற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைதளமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு இந்திய ராணுவமும் ஆதரவு அளித்தது. அங்கிருந்து…
Author: admin
சேலம்: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தியது. இந்த லீக் ஆட்டம் சேலம் எஸ்சிஎப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்களைக் குவித்தது. அந்த அணி வீரர் சஞ்சய் யாதவ் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சுஜாய் 37, சுரேஷ் குமார் 3, வசீம் அகமது 3, ஜே கவுசிக் 15, யு.முகிலேஷ் 23, ஜபார் ஜமால் 17 ரன்கள் எடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்களையும், டி. நடராஜன், சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி…
தூத்துக்குடி: தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் நேற்று நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறினார். பின்னர் கீழே இறங்கிய சீமான், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிர்வாகிகளுடன் பனையோலை பட்டையில் கள் அருந்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் வேளாண்மையோடு சேர்ந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை இருந்ததை உடைத்தெறிந்தோம். அதேபோல, கள் இறக்க அனுமதி மறுக்கப்படுவதையும் உடைத்தெறிவோம். கள் போதை பானம் என்றால், டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? அல்லது புனித நீரா? மற்ற மாநிலங்களில் கள் இறக்க அனுமதி இருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்படுவது ஏன்? பனை கள்ளுக்கு ஏற்பட்ட தடையால் பனை மரங்கள் குறைந்து வருகின்றன. எனவே, நாம் தமிழர்…
ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவு கொண்டாட சென்றபோது கணவனை காதலருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜா ரகுவன்சியை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் தலைமறைவாக இருந்தபோது ரூ.5,000 ரூபாய்க்கு மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சோனம்-ராஜா ரகுவன்சி திருமணம் கடந்த மே 11-ம் தேதி நடைபெற்றது. மே 20-ல் தேனிலவு கொண்டாட மேகாலயாவுக்கு சென்ற போது ராஜாவை அவரது மனைவி சோனமும் அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜா ரகுவன்சியை கொலை செய்து விட்டு சோனம் மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாகா ஆகியோர் மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள திவாஸ் நாகா அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது,…
திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணிக்கு வர மாட்டார் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக, தேமுதிக, அமமுக மற்றும் சிறிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். திருமாவளவனுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதியை விஜய் எடுத்துச் சென்று விடுவார். அதேபோல, கணிசமான சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்குச் சென்றுவிடும் என்று திமுகவினர் அச்சப்படுகின்றனர். பாஜக கூட்டணிக்கு விஜய் வர மாட்டார். ஒரு நடிகர் கட்சி தொடங்கி உடனடியாக கூட்டணி என்று கூறினால், அவரது கட்சி காலியாகிவிடும். சிரஞ்சீவி, விஜயகாந்த் போன்றோர் முதலில் தனித்தே தேர்தலை சந்தித்தனர். விஜய் முதல்வராக வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இச்சூழலில், பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று விஜய் பிரச்சாரம் செய்தால், அவரது கட்சி காலியாகிவடும். கூட்டணி இல்லாமல் இருந்தால்தான் விஜய் வாக்குகள் பெறுவார். கூட்டணியில் சேர்ந்தால் அவர் வாக்குகளைப் பெற…
புதுடெல்லி: இந்தியாவில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டனுக்கு திரும்பி சென்றபோது மகனும் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ள பெரும் சோகமாக மாறியுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 241 பேரில் லாரன்ஸ் டேனியல் கிறிஸ்டியனும் ஒருவர். இவர் லண்டனில் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் தந்தை இறந்ததைத் தொடர்ந்து லாரன்ஸ் இந்தியா வந்துள்ளார். தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லாரன்ஸ் மீண்டும் மனைவியைப் பார்க்க லண்டனுக்கு திரும்பும்போது எதிர்பாராத விதமாக விமான விபத்தில் சிக்கி பலியானது அவரது குடும்பத்தாரை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் கணவன், மகன் என இரண்டு பேரையும் இழந்து தவிக்கும் தாயை ஆறுதல் சொல்லி தேற்றமுடியாமல் அந்த குடும்பம் தற்போது தவித்து வருகிறது. இதுகுறித்து லாரன்ஸின் அம்மா ரவீனா டேனியல் கிறிஸ்டியன் கண்கலங்கியபடி கூறுகையில், “ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லாரன்ஸ் அவனது மனைவியுடன் வேலை…
விழுப்புரம்: பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கியுள்ளார். இந்நிலையில், அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு முரளி சங்கர் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளார். இந்நிலையில், வடமாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், அருள் எம்எல்ஏ, பு.தா.அருள்மொழி, அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறும்போது, “கடந்த ஒரு வாரமாக நடந்த நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன. விரைவில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்…
சரி, ஆர்வமுள்ள மனம் கொண்டவர்களுக்கு, நீங்கள் அதை எப்படிச் சொன்னீர்கள் என்பது மட்டுமல்ல – நீங்கள் சொன்னது, நீங்கள் ஏன் சொன்னீர்கள், அது ரகசியமாக என்ன அர்த்தம். கவலை அன்றாட உரையாடல்களை குழப்பமான உணர்ச்சி புதிர்களுக்கு திருப்புகிறது. உங்களுக்கு பாதிப்பில்லாததாகத் தோன்றும் சொற்கள் வேறொருவருக்கு மேல் சிந்திக்கும் புயலைத் தூண்டும். பதட்டத்துடன் வாழும் ஒருவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்றால் (அல்லது நீங்களே வாழ்கிறீர்கள்), எந்த பொதுவான சொற்றொடர்கள் தற்செயலாக துயரத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய இது உதவுகிறது. நீங்கள் சொல்வதற்கு முன் மறுபரிசீலனை செய்ய சில சொற்றொடர்கள் இங்கே.
சேலம்: சேலத்தில் சஹகார் பாரதி அமைப்பின் (இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்தும் அமைப்பு) மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ரிசர்வ் வங்கி இயக்குநர் சதீஷ் கே.மராத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கூட்டுறவு இயக்கம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். கூட்டுறவு இயக்கங்கள் நுகர்வோரை பயனடையச் செய்ய வேண்டும். அதேநேரத்தில், கூட்டுறவு இயக்கங்களுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைவராக வரக்கூடாது. அரசியல் கட்சியினரால் ஊழல் அதிமாகிவிட்டது. தமிழகத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. நகைக் கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த கட்டுப்பாடுகள் நல்லதுக்குதான். நகைக்கடன் வாங்குபவர்களில் பெரிய வியாபாரிகள் இருந்தார்கள் என்பதால் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. என்னைப் பொறுத்தவரை, துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இவ்வாறு சி.பி. ராதா கிருஷ் ணன் கூறினார்.
சென்னை: மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சிசிஆர்டி) ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த பயிற்சி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், கலைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகளை கையாளவும், மாணவர்களுக்கு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பயிற்சிகள் உதவுகின்றன. அதன்படி நடப்பாண்டு கல்வியில் பொம்மலாட்டத்தின் பங்கு, இயற்கை மற்றும் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பில் பள்ளிகளின் பங்களிப்பு, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை, பள்ளிக் கல்வியில் அருங்காட்சியகங்கள் பணிகள் உட்பட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து…
