புதுச்சேரி: நாட்டில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ஜிப்மர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், 13-ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் பணியில் சேருமாறும் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் அனைத்து துறைகளுக்கும் பிறப்பித்த உத்தரவின் விவரம்: “நாட்டில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உருவாகி வரும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தயார் நிலையில் இருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. கடுமையான மருத்துவ அல்லது அவசர கால சூழ்நிலைகளைத் தவிர, மறு உத்தரவு வரும் வரை எந்த விடுப்பும் அனுமதிக்கப்படாது. முன்னர் அனுமதிக்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.…
Author: admin
பெருங்குடல் புற்றுநோய் 20 மற்றும் 30 களில் உள்ளவர்கள் உட்பட இளைய நபர்களை அதிகளவில் பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வுகள் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே ஆரம்பகால பெருங்குடல் புற்றுநோய் (ஈஓசிஏசி) வழக்குகளில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகின்றன. 2010 மற்றும் 2019 க்கு இடையில், ஆரம்பகால புற்றுநோய்கள், குறிப்பாக பெருங்குடல், இந்த வயதினரில் 80% அதிகரித்துள்ளன. நோய் பரவுவதைத் தடுக்க அதன் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிரின் குற்றச்சாட்டுக்கு , இந்தியா கர்னல் சோபியா குரேஷி மூலம் தக்க பதில் அளித்துள்ளது என காங். எம்.பி சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வாழ்வது சாத்தியமற்றது என பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிர் கூறினார். அதற்கு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் பாக். ராணுவ தளபதிக்கும், உலகத்துக்கும் இந்தியா சரியான பதில் அளித்துள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். அவருடன் இணைந்து பேட்டியளித்த ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். இது பாக். ராணுவ தளபதியின் கருத்துக்கு சரியான பதிலடி. இது பாகிஸ்தானியர்கள் கூறுவதுபோல் இந்து – முஸ்லிம் பிரச்சினை அல்ல. இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒன்றாக இணைந்து வாழ்கிறோம்…
சென்னை: 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வரும் 2025-26-ம் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.19 கோடி பாடநூல்கள் முழுமையாக அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2.72 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.47 கோடி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு…
“எனக்கு எவ்வளவோ பேர் பணம் தரவேண்டும்…” என்று பட விழாவில் பேசும்போது யோகி பாபு காட்டமாக குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன்பு ‘கஜானா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் யோகி பாபு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு ரூ.7 லட்சம் கேட்பதாக தயாரிப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டினார். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ‘கஜானா’ தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனிடையே யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்துகொண்டு பேசும்போது, “என் சம்பளம் எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அனைத்தையும் வெளியில் இருப்பவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நீங்களே சம்பளத்தை முடிவு செய்து நல்ல கதைகளை அனுப்புங்கள். ஆனால், சொன்ன சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். சம்பள பாக்கியை கேட்டால் தான் இங்கு எதிரியாகி விடுகிறேன். அதுதான் உண்மை.…
கன்று உயர்த்துவது உங்கள் கன்று தசைகளை வலுப்படுத்த எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள பயிற்சிகளில் ஒன்றாகும்.அதை எப்படி செய்வது: உங்கள் கால்களை தோள்பட்டை அகலத்துடன் நிற்கவும். மெதுவாக உங்கள் கால்விரல்களில் உயர்ந்து, உங்கள் குதிகால் முடிந்தவரை தரையில் இருந்து உயர்த்தவும். ஒரு நொடி பிடித்துக் கொள்ளுங்கள், பின்னர் உங்கள் குதிகால் மெதுவாக கீழே குறைக்கவும்.மறுபடியும்: 15 முதல் 20 வரை 2 முதல் 3 செட் செய்யுங்கள்.நன்மைகள்: இந்த உடற்பயிற்சி கன்று தசைகளை செயல்படுத்துகிறது, அவற்றின் உந்தி செயலை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது எங்கும் செய்யப்படலாம்-வரிசையில் காத்திருக்கும்போது அல்லது வேலையில் இடைவேளையின் போது.
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள எல்லைப்பகுதிகள் மற்றும் நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சியை முறியடித்து, 7 பயங்கரவாதிகளைக் கொன்றதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்த சில மணிநேரத்துக்கு பின்பு உள்துறை அமைச்சரின் இந்த ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள நிலைமைகளை பற்றி அதிகாரிகளோடு ஆலோசித்தது மட்டும் இல்லாமல், நாட்டிலுள்ள விமானநிலையங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக தெரிகிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளை எல்லைப் பாதுகாப்புப்படை கண்காணித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளைப் பாதுகாக்கும் பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில்,…
இஸ்லாமாபாத்: ராஜதந்திர ரீதியாக இந்தியா உடனான பதற்றத்தை தணிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அவரது அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் அறிவுரை வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகையான ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் ராஜதந்திர அணுகுமுறையின் மூலம் தணிக்கப்பட வேண்டும் என்று தனது சகோதரரும், தற்போதைய பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப்புக்கு நவாஸ் ஷெரீப் ஆலோசனை வழங்கியுள்ளார். இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பவை என்பதால், அமைதியை மீட்டெடுக்க கிடைக்கக்கூடிய அனைத்து ராஜதந்திர வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் விரும்புகிறார். இந்தியாவுடன் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுக்க அவர் விரும்பவில்லை. இந்தியாவுடன் நல்லுறவை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நவாஸ் ஷெரீப் சுட்டிக்காட்டினார். மேலும், கார்கில் போரை எதிர்த்ததால் 1999-இல் தனது அரசாங்கம் வெளியேற்றப்பட்டது…
ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ (Immortal) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கிங்ஸ்டன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு, தனது அடுத்டுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவர் நடித்த புதிய படம் ஒன்று முடிக்கப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டுமே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ‘இம்மார்ட்டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக அருண் ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூனில் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ படத்தில் கவனம்…
மாமல்லபுரம்: பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழு கட்டுப்பாடுடன், இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வந்து செல்ல வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், அந்த இடத்தில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை செல்ல…
