புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்நுட்ப கோளாறால் பாஜக முக்கிய நிர்வாகிகள் பயணித்த இண்டிகோ விமானம் ரத்தானது. புதுச்சேரிக்கு ஹைதராபாத்தில் இருந்து வந்து இன்று மாலை 5.15 மணியளவில் பெங்களூருக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் உருளும் போது தொழில்நுட்பக் கோளாறை விமானி கவனித்துள்ளார். இதையடுத்து, மீண்டும் விமான நிலைய ஏப்ரனுக்குக் கொண்டு வரப்பட்டது. விமானத்தில் மொத்தம் 81 பயணிகள் இருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவின் புதுச்சேரி மாநில தலைவர் பதவியேற்பு நிகழ்வுக்கு வந்திருந்த பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் தருண் சுக், மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும் விமானத்தில் இருந்துள்ளனர். கோளாறை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டால் பெங்களூரு விமானம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டு செல்லும் வசதி புதுச்சேரி விமான நிலையத்தில் இல்லை. இதையடுத்து. பாஜக முக்கிய நிர்வாகிகள் கார் மூலம்…
Author: admin
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சிறப்பு பயணம். அவற்றின் அர்த்தங்களுடன், தூய்மையின் சாரத்தை கைப்பற்றும் சில அழகான மற்றும் தனித்துவமான இந்திய பெண் குழந்தை பெயர்கள் இங்கே.
இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரியதர்ஷினி செல்லத்துரை அசல் ஆட்டத்திறன் கொண்டவர் என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்பின் சேத்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் மங்கோலியா அணிக்கு எதிராக இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தி இருந்தார் பிரியதர்ஷினி. அதுவும் சர்வதேச அளவில் அவர் விளையாடிய இரண்டாவது ஆட்டத்தில் இந்த கோல்களை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த பிரியதர்ஷினி? – திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சவளக்காரன் என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் பிரியதர்ஷினி. கால்பந்து விளையாட்டு சார்ந்த கட்டமைப்புகள் எதுவும் முறையாக இல்லாத அந்த கிராமத்தின் நெல் வயலில் பயிற்சி செய்த அவர்தான் இன்று இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அங்கிருந்து பெருங்கனவோடு புறப்பட்ட அவர் இன்று இந்திய அணிக்காக தாய்லாந்தின் சியான் மாய் நகரில் கோல் பதிவு செய்து அசத்தியுள்ளார். கடந்த மே…
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்…
சென்னை: “புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். இது வெறும் வார்த்தை ஜாலத்துக்காக அல்ல” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவரித்துள்ளார். தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 19-வது தேசிய புள்ளியியல் தின விழா சென்னை நந்தனத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளங்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும், தமிழக அரசின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “புள்ளியியல் என்பது ஒரு நாட்டுக்கோ, ஒரு நிறுவனத்துக்கோ மட்டும் தேவைப்படுவது அல்ல. ஒவ்வொரு வீட்டுக்கும் தேவைப்படுகிறது. வீட்டின் மாத பட்ஜெட், வருடாந்திர பட்ஜெட் போன்றவற்றை முறையாகப் பதிவு செய்து,…
ஒட்டுமொத்த உடல்நலம் (குறிப்பாக இருதய பிரச்சினைகள்) பற்றி நாம் பேசும்போது, உயர் பிபி சிறந்த குற்றவாளியாக வெளிப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படும் உயர் பிபி, தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக இருக்கும் ஒரு நிலை. இது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை அளிக்கிறது, இது இறுதியில் வழிவகுக்கும், இது மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. இருப்பினும், குறைந்த பிபி என்றும் அழைக்கப்படும் ஹைபோடென்ஷன் பற்றி என்ன? குறைந்த பிபி கூட, இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்க முடியுமா? பதில் தோன்றும் அளவுக்கு எளிதானது அல்ல. ஏன் என்று பார்ப்போம் …இரத்த அழுத்தத்தைப் புரிந்துகொள்வதுஇரத்த அழுத்தம் என்பது உங்கள் இதயம் உடலைச் சுற்றி செலுத்தும்போது உங்கள் தமனிகளின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் சக்தி. இது இரண்டு எண்களில் அளவிடப்படுகிறது:சிஸ்டாலிக் அழுத்தம் (முதல் எண்): இதயம் துடிக்கும் போது அழுத்தம்.டயஸ்டாலிக் அழுத்தம் (இரண்டாவது எண்): இதயம்…
செய்யூரில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடத்துக்கு ரூ.2.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால், விரைவாக பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள், சிப்காட் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், மேற்கண்ட வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளை சார்ந்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கான, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு வசதிகள் இல்லாததால் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைக்க வேண்டும் என செய்யூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து…
நாள்பட்ட அழற்சி பல நோய்களுக்கு வழிவகுக்கிறது- மூட்டுவலி போன்ற ஆட்டோ இம்யூன் நோய் முதல் இதய நோய் வரை. ‘மாதுளை, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், ஹைப்பர் கிளைசீமியா மற்றும் அழற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நோய் ஆபத்து காரணிகளைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க மாதுளை உதவக்கூடும் என்று 2014 ஆம் ஆண்டின்’ மாதுளையின் சக்திவாய்ந்த சுகாதார விளைவுகள் ‘என்ற தலைப்பில் ஒரு ஆய்வில், பாலிஃபெனோலின் சில கூறுகள் சாத்தியமான ஆண்டிஜோஜனோஜனல், மற்றும் ஆன்டி-இன்ஃப்ளேடியேட்டரி மற்றும் ஆன்டி-இன்ஃப்ளரேட்டேட்டரி மற்றும் ஆன்டி-இன்ஃப்ளரேட்டேட்டரி மற்றும் ஆன்டி-இன்ஃப்ளரேட்டேட்டரி மற்றும் ஆன்டி-இன்ஃப்ளேஜிடேட்டரி மற்றும் எதிர்ப்புஅவுரிநெல்லிகள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளன. 2023 சீரற்ற மருத்துவ பரிசோதனையில் 18 நாட்கள் தினசரி புளூபெர்ரி உட்கொள்ளல் (1 கப்/நாள்) அழற்சி எதிர்ப்பு ஆக்ஸிலிபின்களை அதிகரித்தது மற்றும் பயிற்சியற்ற பெரியவர்களில் உடற்பயிற்சியின் பின்னர் அழற்சி சார்பு லிப்பிட் மத்தியஸ்தர்களைக் குறைத்தது. அவுரிநெல்லிகள் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு…
பரேலி: கோவிட் பெருந்தொற்றுநோயானது நுகர்வு அடிப்படையிலான கலாசாரம் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, பிற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் இன்று (ஜூன் 30, 2025) நடைபெற்ற இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடிரயசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “’ஈஷாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நமது கலாச்சாரமானது அனைத்து உயிரினங்களிலும் கடவுளின் இருப்பைக் காண்கிறது. கடவுள் – ஞானி – விலங்குகள் இடையேயான பிணைப்பின் நம்பிக்கை மற்றும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும். மனிதர்கள் காடுகள், வனவிலங்குகளுடன் இணைந்து வாழும் முறையைக் கொண்டிருந்தனர். வனவிலங்குகளில் பல இனங்கள் அழிந்துவிட்டது. சில விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. உயிரினங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மண்வள ஆரோக்கியம் ஆகியவற்றின்…
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவுக்கான மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு வருபவர்களுக்கு இதய பிரிவு சிகிச்சைக்கான மருத்துவர்கள் இல்லாததால் மற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் டயாலிஸிஸ், கண், காது மற்றும் மூக்கு தொண்டை, குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வரும் நிலையில், இதய சிகிச்சை பிரிவுக்கு கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உரிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுநர்கள் சிலரிடம் கேட்டபோது, இதய…
