Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பேர வலிமை குறைந்தது… பேசமுடியாத நிலையில் திமுக கூட்டணி கட்சிகள்!
    மாநிலம்

    பேர வலிமை குறைந்தது… பேசமுடியாத நிலையில் திமுக கூட்டணி கட்சிகள்!

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பேர வலிமை குறைந்தது… பேசமுடியாத நிலையில் திமுக கூட்டணி கட்சிகள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள்.

    சில வாரங்​களுக்கு முன்பு வரை தமி​ழ​கத்​தில் திமுக, அதி​முக, பாஜக, தவெக என சிறிய கட்​சிகளுக்கு 4 வித​மான கூட்​டணி வாய்ப்​பு​கள் இருந்​தன. அது இப்​போது திமுக கூட்​ட​ணி, அதி​முக கூட்​டணி என இரண்​டாக சுருங்​கி​விட்​டது. அதி​முக, தவெக ஆப்​ஷன்​கள் இருந்​தவரை திமுக கூட்​டணி கட்​சிகள் தங்​கள் பேர வலிமையை அதி​கப்​படுத்​தலாம் என்று கனவுக் கோட்டை கட்​டின. அதன் வெளிப்​பா​டாகவே தங்​களுக்கு குறைந்​தது 25 தொகு​தி​கள் வேண்​டும் என விசிக நிர்​வாகி​கள் பொதுத்​தளத்​தில் கோரிக்கை வைத்​தனர்.

    சிபிஎம், சிபிஐ கட்​சிகளும் அவ்​வப்​போது ஆட்​சி​யின் குறை​பாடு​களை சுட்​டிக்​காட்டி அழுத்​தம் கொடுத்​தன. காங்​கிரஸ் தரப்​பிலும் கூடு​தல் தொகு​தி​கள், கூட்​டணி ஆட்சி போன்ற வார்த்தை தூண்​டில்​களை வீசிப் பார்த்​தனர். மதி​முக-​வும் மனதில் ஆசையோடு இருந்​தது. 2019 மக்​கள​வைத் தேர்​தல் முதலே திமுக கூட்​ட​ணிக்கு கைகொடுத்து வரும் விசிக, சிபிஎம், சிபிஐ, மதி​முக ஆகிய கட்​சிகளுக்கு 2021 சட்​டமன்​றத் தேர்​தலில் தலா 6 தொகு​தி​களை மட்​டுமே ஒதுக்​கியது திமுக. அதி​லும் மதி​முக, உதயசூரியன் சின்​னத்​திலேயே போட்​டி​யிட வலி​யுறுத்​தப்​பட்​டது.

    விசிக-​வும் தனிச் சின்​னத்​தில் போட்​டி​யிட பெரிய போராட்​டமே நடத்​தி​யது. அப்​போதே மிகக்​குறை​வான தொகு​தி​களை பெற்​று​விட்​ட​தாக திமுக கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு மனக்​கு​முறல் இருந்​தது. அப்​போது, ‘மீண்​டும் அதி​முக – பாஜக அணி வெல்​லக்​கூ​டாது என்ற நோக்​கத்​துக்​காக பொறுத்​துக் கொள்​ளுங்​கள்’ என அவர்​களுக்கு சமா​தானம் சொல்​லப்​பட்​டது.

    இந்த நிலை​யில், கடந்த ஒரு வருட​மாகவே 2026 தேர்​தலில் அதிக தொகு​தி​கள் வேண்​டும் என, அதி​முக ஆப்​ஷனைக் காரணம் காட்டி காய் நகர்த்த ஆரம்​பித்தன திமுக தோழமை கட்​சிகள். அந்​தக் கனவும் இப்​போது கலைந்து போய்​விட்​டது. பாஜக உடன் அதி​முக ஜோடி சேர்ந்​த​தால் திமுக கூட்​டணி கட்​சிகளுக்கு அதி​முக ஆப்​ஷன் இனி அறவே இல்​லை.

    இன்​னொரு வாய்ப்​பென்​றால் அது தவெக தான், ஆனாலும், அரசி​யலுக்கு புதி​ய​வ​ரான விஜய்யை நம்பி ஆழம் பார்க்​கும் தைரி​யம் யாருக்​கும் இல்​லை. அதனால் இவர்​கள் முழுக்க முழுக்க திமுக கூட்​ட​ணி​யையே நம்பி இருக்​கவேண்​டிய சூழல் ஏற்​பட்​டு​விட்​டது. இதன் வெளிப்​பா​டாகவே, “கூட்​டணி தர்​மத்​துக்​காகவே பெரிய வாய்ப்​பு​களை தரு​வ​தாக சொன்ன அதி​முக, தவெக-​வின் கூட்​டணி அழைப்​பு​களை நிராகரித்​தேன்” என திரு​மாவளவன் பேசி வரு​கி​றார்.

    கடந்த காலங்​களில் தேர்​தல் நெருக்​கம் வரை கூட்​டணி கணக்​கு​கள் மாறிக்​கொண்டே இருக்​கும். அதனால் சிறிய கட்​சிகள் பேர வலிமை​யின் மூலம் கூடு​தல் தொகு​தி​களை பெறும் சூழல் இருந்​தது. தற்​போது தேர்​தலுக்கு ஓராண்​டுக்கு முன்பே அதி​முக – பாஜக கூட்​டணி அமைந்​து​விட்​டது. இதனால், பாஜக-வை எதிர்க்​கும் கட்​சிகளால் அதி​முக பக்​கம் இனி செல்​லவே முடி​யாது. எனவே வழக்​கம் போல திமுக கொடுக்​கும் தொகு​தி​களை வாங்​கிக்​கொண்டு அமை​தி​யாக போக வேண்​டிய சூழலே இம்​முறை​யும் உரு​வாகி​யுள்​ளது.

    அதி​முக – பாஜக கூட்​டணி ஆட்​சிக்கு வரு​வதை தடுக்க, கொடுக்​கும் தொகு​தி​களை வாங்​கிக் கொண்டு நில்​லுங்​கள் என இம்​முறை​யும் தோழமைக் கட்​சிகளுக்கு திமுக சமா​தானம் சொல்​லும்.ஜனநாயகத்​தில் பெரிய கட்​சிகளுக்கு நிக​ராக வெவ்​வேறு இலக்​கு​களை கொண்டு பயணிக்​கும் சிறிய கட்​சிகளும் முக்​கி​யம்​தான். இந்​தத் தேர்​தலில் அவர்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வத்தை பெரிய கட்​சிகள் வழங்​கு​மா, இல்லை ‘பெரியண்​ணன்’ மனப்​பான்​மை​யில் நடத்​துமா என பொறுத்​திருந்து பார்​ப்​போம்​!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 1, 2025
    மாநிலம்

    சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    July 1, 2025
    மாநிலம்

    லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

    July 1, 2025
    மாநிலம்

    டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
    • லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
    • டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி
    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.