Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»பஞ்சாப்புடன் இன்று மீண்டும் மோதல்: திருப்பியடிக்குமா பெங்களூரு?
    விளையாட்டு

    பஞ்சாப்புடன் இன்று மீண்டும் மோதல்: திருப்பியடிக்குமா பெங்களூரு?

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஞ்சாப்புடன் இன்று மீண்டும் மோதல்: திருப்பியடிக்குமா பெங்களூரு?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சண்​டிகரில் உள்ள முலான்​பூர் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

    இரு அணி​களும் நடப்பு சீசனில் 2-வது முறை​யாக மோதுகின்​றன. அதி​லும் ஒரு​நாள் இடைவெளி​யில் விளை​யாடு​கின்​றன. நேற்று முன்​தினம் பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் ஆர்​சிபி – பஞ்​சாப் அணி​கள் மோதி​யிருந்​தன. மழை காரண​மாக 14 ஓவர்​களாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தது பஞ்​சாப் கிங்​ஸ்.

    இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஆர்​சிபி அணியை தனது அற்​புத​மான பந்து வீச்​சால் 95 ரன்​களுக்​குள் மட்​டுப்​படுத்​தி​யது பஞ்​சாப் அணி. டிம் டேவிட் 26 பந்​துகளில், 50 ரன்​கள் விளாசி​யதன் காரண​மாகவே ஆர்​சிபி அணி​யால் சற்று கவுர​வ​மான ஸ்கோரை எடுக்க முடிந்​திருந்​தது. ஆடு​களத்​துக்கு தகுந்​த​வாறு தகவ​மைத்​துக் கொண்டு விளை​யா​டாத​தால் ஆர்​சிபி அணி சீரான இடைவெளி​யில் விக்​கெட்​களை தாரை​வார்த்​தது.

    பில் சால்ட் (4), விராட் கோலி (1), லியாம் லிவிங்​ஸ்​டன் (4), ஜிதேஷ் சர்மா (2), கிருணல் பாண்​டியா (1), மனோஜ் பன்​டேஜ் (1), யாஷ் தயாள் (0), புவனேஷ்வர் குமார் (8) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்​னில் நடையை கட்​டினர். சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய கேப்டன் ரஜத் பட்​டி​தார் 23 ரன்​கள் சேர்த்​தார். ஆர்​சிபி எடுத்த 95 ரன்​களில் டிம் டேவிட், ரஜத் பட்​டி​தார் ஆகியோர் கூட்​டாக சேர்த்​தது 73 ரன்​களாக அமைந்​திருந்​தது.

    ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தியதில் மார்கோ யான்சன், யுவேந்திர சாஹல் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர். யான்சன் 3 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதேவேளையில் யுவேந்திர சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

    96 ரன்​கள் இலக்கை விரட்​டிய பஞ்​சாப் அணி தொடக்​கத்​தில் சற்று தடு​மாறி​னாலும் 12.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை இழந்து 98 ரன்​கள் எடுத்து வெற்​றிக் கோட்டை கடந்​தது. நடப்பு சீசனில் சொந்த மண்​ணில் ஆர்​சிபி அணி​யின் ஹாட்​ரிக் தோல்​வி​யாக இது அமைந்​தது. அந்த அணி இங்கு விளை​யாடிய 3 ஆட்​டங்​களி​லும் வெற்​றியை வசப்​படுத்​த​வில்​லை.

    பஞ்​சாப் அணி​யின் பேட்​டிங்​கில் பிரியன்ஷ் ஆர்யா 16, பிரப்​சிம்​ரன் சிங் 13, ஸ்ரேயஸ் ஐயர் 7, ஜோஷ் இங்​லிஷ் 14 ரன்​களில் நடையை கட்​டினர். 55 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்து தவித்த நிலை​யில் இடது கை பேட்​ஸ்​மே​னான நேஹல் வதேரா 19 பந்​துகளில், 33 ரன்​கள் சேர்த்து அணியை வெற்​றிக் பாதைக்கு அழைத்து சென்​றார். நெருக்​கடி​யான நேரத்​தில் சுயாஷ் சர்மா பந்​துகளில் 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்டு அசத்​தி​யிருந்​தார் நேஹல் வதே​ரா.

    பஞ்​சாப் அணிக்கு இது 5-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 10 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளை​யில் 7 ஆட்​டங்​களில் 3-வது தோல்​வியை சந்​தித்த ஆர்​சிபி பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. இந்​நிலை​யில் இரு அணி​களும் மீண்​டும் இன்று பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. இந்த ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி பேட்​டிங் மற்​றும் பந்து வீச்​சில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தி​னால் மட்​டுமே வெற்றி பெற்று பதிலடி கொடுப்​பது சாத்​தி​யப்​படும்.

    அதேவேளை​யில் அர்​ஷ்தீப் சிங், சேவியர் பார்ட்​லெட், மார்கோ யான்​சன், யுவேந்​திர சாஹல் ஆகியோரை உள்​ளடக்​கிய பஞ்​சாப் அணி​யின் பந்து வீச்சு துறை மீண்​டும் ஒமுறை ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசைக்​கு சவால்​ அளிக்​க ஆயத்​த​மாக இருக்​கக்​கூடும்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ‘நான் ஏன் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால்…’ – ரொனால்டோ ஓபன் டாக்

    June 29, 2025
    விளையாட்டு

    மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD

    June 29, 2025
    விளையாட்டு

    வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

    June 29, 2025
    விளையாட்டு

    வங்கதேச கேப்டன் ஷாண்டோ ராஜினாமா

    June 29, 2025
    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

    June 29, 2025
    விளையாட்டு

    ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ ஃபாரெவர்’
    • திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
    • ‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகல்: பின்னணி என்ன?
    • 44-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் 58,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
    • ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும்? – பத்திரிகையாளர்களை கடுமையாக சாடிய வருண் தவான்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.