Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் அறிவிப்பு
    ஆன்மீகம்

    காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் அறிவிப்பு

    adminBy adminApril 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 30-ம் தேதி சன்யாச தீக்‌ஷயை காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார்.

    இது தொடர்பாக காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் (மேலாளர்) சல்லா விஸ்வநாத சாஸ்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப்.30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட்-டுக்கு சன்யாச தீக்‌ஷை வழங்குகிறார். இந்தப் புனித நிகழ்வு கிமு 482-இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது.

    ஆந்திரப் பிரதேசத்தின் அன்னவரம் க்‌ஷேத்திரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத், நிர்மல் மாவட்டம், பாசரா, ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணியாற்றியவர். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்ய ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிர்வாதமும், தொடர்ச்சியான அருளும் அவருக்கு 2006 -ஆம் ஆண்டு வேதக் கல்வியைத் தொடங்கிய காலத்திலிருந்தே கிடைத்துள்ளது.

    ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், ரிக் வேதத்துடன் யஜுர் வேதம், சாம வேதம், ஷடங்கங்கள், தஷோபநிஷாத்ரிகங்கள் மற்றும் தஷோபநிஷாத்ரிகப் படிப்புகளையும் முடித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Important Announcement #kamakoti pic.twitter.com/YXn1GTHQex


    — KanchiMatham (@KanchiMatham) April 25, 2025

    இளைய மடாதிபதியாக… – காஞ்சிபுரம் மாநகரில் பிரிசித்தி பெற்ற சங்கர மடம் உள்ளது. இந்த மடத்தின் 70-வது மடாபதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமாதி அடைந்ததைத் தொடர்ந்து இளைய மடாதிபதியாக இருந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 70-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் இளைய மடாதபதி தேர்வு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளையமடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டுள்ளார். இளையமடாதிபதியாக பொறுப்பேற்கும் கணேச சர்மா டிராவிட் வரும் மே 2-ம் தேதி நடைபெறும் ஆதிசங்கரர் ஜெயந்தியில் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் இணைந்து பங்கேற்கிறார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்

    June 29, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்

    June 28, 2025
    ஆன்மீகம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா!

    June 27, 2025
    ஆன்மீகம்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

    June 26, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    June 25, 2025
    ஆன்மீகம்

    திருமலையில் ஜூலை மாத விசேஷங்கள்

    June 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மார்கன்: திரை விமர்சனம்
    • ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!
    • உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுவது ஏன் முக்கியம்? ஒரு விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொனால்ட் டிரம்ப் Vs எலோன் மஸ்க் பகுதி 2: தொழில்நுட்ப கோடீஸ்வரர் வாதத்தை மறுதொடக்கம் செய்கிறார்; ‘பெரிய பில் அழகான’ முற்றிலும் பைத்தியம் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.