சென்னை: தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவருக்கு வயது 56.
தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
கரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.