Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, April 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
    உலகம்

    ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (செப்.1) ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், “குனார் மாகாணத்தில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். 2500 பேர் காயமடைந்துள்ளனர். நாங்கர்ஹர் பகுதியில் 12 பேர் உயிரிழந்தனர். 255 பேர் காயமடைந்தனர். எண்ணற்ற வீடுகள் தரைமட்டமாயின” என்றார்.

    ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ குத்ரேஸ் கூறுகையில், “ஆப்கானிஸ்தானை தாக்கியுள்ள கடுமையான பூகம்பத்தால் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2023-ல் ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர். 63,000 பேர் வீடுகளை இழந்தனர். அதற்கு முன்னதாக ஜூன் 2022-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000 பேர் உயிரிழந்தனர்.

    ஏற்கெனவே, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான சிக்கல்கள் மிகுந்துள்ளன. தலிபான் ஆட்சியில் வெளிநாட்டு நிதிகள் குறைந்துள்ளன. மோசமான பொருளாதார நிலையால் கடுமையான நெருக்கடியில் வாழும் மக்களுக்கு இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் இன்னும் துயரம் தான்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    2019 முதல் அமெரிக்காவில் இந்திய மாணவர் காணவில்லை: மயூஷி பகத் பற்றிய FBI இன் சமூக ஊடக இடுகை குழப்பத்தைத் தூண்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 14, 2026
    உலகம்

    அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்தியப் பெண் கொல்லப்பட்டார், 3 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 13, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் குல்தீப் சிங், இங்கிலாந்தின் ‘பணத்திற்காக பண மோசடி’ வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்; காப்பீட்டு மோசடியைத் திட்டமிடுவதற்கு கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 13, 2026
    உலகம்

    கொள்கை முதல் உள்கட்டமைப்பு வரை: நியூயார்க்கின் அதிகாரப் பட்டியலில் உள்ள இந்திய வம்சாவளி தலைவர்கள் யார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 13, 2026
    உலகம்

    ‘பிரண்டனின் மனைவி பாதி இந்தியராக இருந்தால் கவலை வேண்டாம்’: 7-லெவனில் இந்தியர்களை அழைத்த அமெரிக்க காங்கிரஸுக்கு இணையம் பதிலளிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 13, 2026
    உலகம்

    ஆபிரகாம் லிங்கனின் அன்றைய மேற்கோள்: “பண்பு என்பது ஒரு மரம் போன்றது, மற்றும் புகழ் அதன் நிழல் போன்றது. நிழல் என்பது நாம் எதைப் பற்றி நினைக்கிறோமோ அதுதான் உண்மையான விஷயம்.” | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அந்த வாடிய கீரைகளை தூக்கி எறிய வேண்டாம்! அவர்களின் நெருக்கடியை மீட்டெடுக்கும் 20 நிமிட சமையலறை தந்திரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரபஞ்சம் எதிர்பார்த்ததை விட வேகமாக விரிவடைகிறது: விஞ்ஞானிகள் அண்ட முடுக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அன்றைய ஆப்பிரிக்க பழமொழி: “வேகமாக செல்ல விரும்பினால் தனியாக செல்லுங்கள், தூரம் செல்ல விரும்பினால் ஒன்றாக செல்லுங்கள்” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குக்கீகளை நாம் சிற்றுண்டி சாப்பிடும் விதத்தை மாற்றும் எதிர்பாராத சமையலறைக் கருவி மேம்படுத்தல் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய சோடா பயன்படுத்துவது புத்திசாலித்தனமான வழியா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.