Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, February 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»அமெரிக்க வரி தாக்கத்தை எதிர்வரும் நல்ல மாற்றங்கள் ஈடு செய்யும்: தலைமை பொருளாதார ஆலோசகர்
    வணிகம்

    அமெரிக்க வரி தாக்கத்தை எதிர்வரும் நல்ல மாற்றங்கள் ஈடு செய்யும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

    adminBy adminAugust 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க வரி தாக்கத்தை எதிர்வரும் நல்ல மாற்றங்கள் ஈடு செய்யும்: தலைமை பொருளாதார ஆலோசகர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள், அமெரிக்க வரிகளின் தாக்கத்தை ஈடு செய்யும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதாரத்தின் செயல்திறனை ஊக்குவிக்கும் காரணிகள் வலுவாக உள்ளன. இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் (அமெரிக்காவால்) உயர்த்தப்பட்டுள்ளதன் தாக்கம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மூலதனத்தில் பரவக்கூடும். இது ஓரளவு தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன். அதேநேரத்தில், இரண்டாம் காலாண்டு மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் மந்தநிலை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்படும். ஏனெனில், கூடுதல் வரி விதிப்பு என்பது நீண்ட காலம் நீடிக்காது என்பதே எனது பார்வை.

    வரி உயர்வின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் அதை ஈடு செய்யும் நடவடிக்கைகளும் இருக்கும். இதனால், இந்திய பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். இதன்மூலம், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சார்ந்த துறைகளில் வேலை இழப்பு கட்டுப்படுத்தப்படும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களில் சில மாற்று சந்தைகளைக் கண்டுபிடிக்கும்.

    நீண்டகால நோக்கில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் முடிவை எடுக்கலாம். அதோடு, அதிக உள்நாட்டு தேவை மூலமாகவும் அத்தகைய நிறுவனங்களின் உற்பத்தி பாதுகாக்கப்படும். நமக்கு சிறந்த பருவமழைக் காலம் உள்ளது. விவசாயம் மற்றும் கிராமப்புற தேவை அதிகரிக்கும். எனவே, வேலை இழப்புகள் ஏற்பட்டால் அது பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.

    நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8% ஆக இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அனுராதா தாக்கூர், “முதல் காலாண்டின் எண்கள் நமது பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருப்பதை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தில் உத்வேகம் ஏற்பட்டு வருவதை இது பிரதிபலிக்கிறது. வலுவான பெரிய பொருளாதார அடிப்படைகளில் நமது பொருளாதாரம் நங்கூரமிட்டிப்பதை இது காட்டுகிறது.

    உற்பத்தி, விநியோகம், கட்டுமானம், சேவை செயல்பாடுகளில் வலுவான வளர்ச்சி நிலவுகிறது. விவசாயமும் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. அறுவடை மற்றும் விதைப்பு இரண்டுமே கடந்த காலாண்டைவிட அதிகமாக உள்ளது. நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை

    December 3, 2025
    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது

    December 3, 2025
    வணிகம்

    பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது: பண்டிகை கால ஆறுதல்!

    December 3, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

    December 3, 2025
    வணிகம்

    இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் பதில்

    December 3, 2025
    வணிகம்

    உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கியூரியாசிட்டி கார்னர்: பூமியில் சூரியன் உதிக்காத அல்லது மறையாத சில இடங்கள் எங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குழந்தைகளுக்கான அன்றைய மேற்கோள்: “நாளையை உணர்ந்து கொள்வதற்கான ஒரே வரம்பு இன்றைய நமது சந்தேகங்கள் மட்டுமே.” – பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொனால்ட் டிரம்பின் வைரலான இந்தியா கேட் இடுகை மற்றும் ‘கிரேட்டஸ்ட் ஆர்ச்’ யோசனை பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வெற்றிகரமான பிரபலங்களால் ஈர்க்கப்பட்ட 8 ஆண் குழந்தை பெயர்கள்
    • மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் முதல் ஷிகர் தவான் வரை: விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கை சிறப்பாக மாறிய 5 பிரபலங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.