புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் மஞ்சள் நிற புகையை எழுப்பி, எம்.பி.க்கள் இடையே பீதியை ஏற்படுத்தினர். அதன்பின் நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் (சிஐஎஸ்எப்) ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி ஒருவர் நாடாளுமன்ற வளாகத்தின் உயரமான சுற்றுச்சுவர் மீது ஏற முயன்றார். அவரை சிஐஎஸ்எப் வீரர்கள் பிடித்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகே 20 வயது நபர் ஒருவர் சந்தேகிக்கும் வகையில் நேற்று காலை சுற்றிக் கொண்டிருந்தார். அவரை சிஐஎஸ்எப் வீரர்கள் பிடித்து விசாரித்தனர். பெங்களூரைச் சேர்ந்த அவரிடம் இருந்து சர்ச்சைக்குரிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.