Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, February 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»புதினை அடுத்து திங்களன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்!
    உலகம்

    புதினை அடுத்து திங்களன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்!

    adminBy adminAugust 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதினை அடுத்து திங்களன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை அடுத்து, வரும் திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளார்.

    இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “அலாஸ்காவில் நிகழ்ந்த சந்திப்பு சிறப்பானது, வெற்றிகரமானது. ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மிகுந்த மதிப்புக்குரிய நேடோ பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய தலைவர்களுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசினேன்.

    ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி, நேரடியாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான் என்று அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது. இது போரை (தற்காலிகமாக) முடிவுக்குக் கொண்டு வரும் வெறும் போர் நிறுத்த ஒப்பந்தம் அல்ல. அவ்வாறு ஒன்று நடந்தால் அது நிலைக்காது. அதிபர் ஜெலன்ஸ்கி திங்கள்கிழமை மதியம் வெள்ளை மாளிகைக்கு வருவார். அனைத்தும் சரியாக நடந்தால், நாங்கள் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு சந்திப்புக்கு திட்டமிடுவோம். இது நிகழ்ந்தால் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

    அலாஸ்கா சந்திப்பு: முன்னதாக, அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்​பில் அதிபர் புதின் உடன் வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாரவ், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஆண்ட்ரே பெலோ​சோவ், நிதியமைச்​சர் அண்​டன் சிலுன்​னோவ் மற்​றும் 2 மூத்த அதி​காரி​கள் பங்கேற்றனர்.

    இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் ட்ரம்ப் – புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போராட்டன என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனின் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “புதின் உடனான இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது. ஆனால் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். மேலும் ட்ரம்ப் கூறும்போது, “இப்போது இதைச் செய்து முடிப்பது உண்மையில் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும். ஐரோப்பிய நாடுகளும் இதில் கொஞ்சம் தலையிட வேண்டும் என்று நான் கூறுவேன், ஆனால், இது முழுக்க அதிபர் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; அவள் வேலையில்லாதவள், சமூக சேவை செய்வேன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    டோனி ஹாக்கின் திருமணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தீவில் நடந்ததா? ஸ்கேட்போர்டிங் லெஜண்ட் பதிலளிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 8, 2026
    உலகம்

    “இஸ்லாம் இடம்பெயர்வு மீது கட்டமைக்கப்பட்ட மதம்”: NYC மேயர் மம்தானி குடியேற்றத்தைப் பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரத்தை அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • H-1B விசா அச்சுறுத்தலில் உள்ளது: அமெரிக்க சட்டமியற்றுபவர் EXILE சட்டத்தை அறிமுகப்படுத்தினார்; இந்திய விண்ணப்பதாரர்களுக்கு என்ன அர்த்தம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாம் ஆல்ட்மேன், ஜென்சன் ஹுவாங் மற்றும் பிற உலகத் தலைவர்கள் இந்தியா AI உச்சிமாநாடு 2026 இல் கலந்துகொள்வதால் டெல்லி சொகுசு ஹோட்டல்கள் கட்டணங்களை ரூ.20 லட்சமாக உயர்த்துகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்னீக்கர் ட்ரெண்ட்ஸ் 2026: ரெட்ரோ ரன்னர்ஸ் முதல் பாப்-கலர் ஸ்னீக்கர்ஸ்: 2026 இன் 5 ஹாட்டஸ்ட் ஸ்னீக்கர் டிரெண்டுகள்
    • வேலையில் சோர்வாக இருக்கிறதா? மைக்-டிராப் வெளியேறுவதற்கு 5 கிண்டலான ராஜினாமா கடிதங்கள்
    • எலோன் மஸ்க் கூறுகிறார், “நீங்கள் நிலவுக்கு செல்ல வேண்டும்” என அவர் சந்திர மாஸ் டிரைவருடன் AI செயற்கைக்கோள் தொழிற்சாலை திட்டத்தை அறிவிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.