நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இதில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது.
இதில் தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்நிலையில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமான வில்லியாக இல்லாமல் அவரது கேரக்டர் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.