அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’. இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். கிருஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. பின்னர் ஜூலை 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது இதன் வெளியீடு மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.
இதுகுறித்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், படத்தின் தரத்தை மேம்படுத்த வெளியீடு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.