Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்
    மாநிலம்

    டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்

    adminBy adminMay 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில், “தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்க வேண்டிய 250 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு நெல் உற்பத்தியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதலுக்கான நிதியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவிக்கும் நிலையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கான நிதியை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்போக்கு டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், 2016-17 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இருந்து நெல் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரெனெ ஏப்ரல் மாதத்திற்கான நெல் கொள்முதலை தன்னிச்சையாக ரத்து செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனிவரும் காலங்களிலும் எந்தவித பாரபட்சமுமின்றி தொடர்ந்து நெல்கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என நுகர்பொருள் வாணிபக் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!

    July 1, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

    July 1, 2025
    மாநிலம்

    “அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி

    July 1, 2025
    மாநிலம்

    காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’கண்ணப்பா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி: மோகன்பாபு உற்சாகம்
    • அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!
    • முடிட் டானி யார், அவரது திருமணம் ஏன் செய்திகளில் அதிகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை
    • நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: இயக்குநர் கே.பாக்யராஜ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.