Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அமெரிக்க விசா பெற சமூக வலைதள விவரம் கட்டாயம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
    தேசியம்

    அமெரிக்க விசா பெற சமூக வலைதள விவரம் கட்டாயம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க விசா பெற சமூக வலைதள விவரம் கட்டாயம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதளங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

    அமெரிக்க அரசு சார்பில் சுற்றுலா விசா, வர்த்தக விசா, மாணவர் விசா, பணி விசா, உறவினர்களை சந்திக்க சார்பு விசா என பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களை பெற டிஎஸ்-160 படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த சூழலில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் தங்களது சமூக வலைதளங்களை விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். அதாவது டிஎஸ்-160 படிவத்தில் கடந்த 5 ஆண்டு கால சமூக வலைதளங்களின் முழுமையான விவரங்களை குறிப்பிட வேண்டும்.

    இந்த விவரங்கள் உண்மையானவை என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். டிஎஸ்-160 படிவத்தில் சமூக வலைதளங்களின் விவரங்களை குறிப்பிடவில்லை என்றால் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “விசா நடைமுறைகள் தொடர்பான அமெரிக்க அரசின் புதிய விதிகள் குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் அமெரிக்க விசாக்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

    விசா கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க குடியேற்றத் துறை நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதை கருத்தில் கொண்டு. அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதளங்களின் விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் விண்ணப்பதாரரின் கொள்கை, கோட்பாடுகள், அவரின் பின்னணியை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

    அமெரிக்காவில் கல்வி பயில ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களின் சமூக வலைதளங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் பலரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க விசா கிடைக்காத இந்திய மாணவ, மாணவியர் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு அமெரிக்க குடியேற்றத் துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ம.பி.யில் தண்ணீர் கலந்த டீசல் நிரப்பியதால் முதல்வரின் கான்வாய் வாகனங்கள் பழுது

    June 28, 2025
    தேசியம்

    லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துக் கொண்டு நொய்டாவில் முதியோர்களை கவனிக்காத ஆசிரமம்

    June 28, 2025
    தேசியம்

    கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறப்பு

    June 28, 2025
    தேசியம்

    ஹைதராபாத் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் இயக்கம்

    June 28, 2025
    தேசியம்

    பாகிஸ்தானுக்கு ஒரு ரகசிய தகவலை அளித்தால் ரூ.50,000: கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம்

    June 28, 2025
    தேசியம்

    6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்
    • தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!
    • உங்கள் உடல் உயிர்வாழக்கூடிய அதிகபட்ச வெப்பம் என்ன? புதிய ஆராய்ச்சிக்கு ஆபத்தான பதில் உள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ம.பி.யில் தண்ணீர் கலந்த டீசல் நிரப்பியதால் முதல்வரின் கான்வாய் வாகனங்கள் பழுது
    • இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.