Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு
    உலகம்

    உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உலகில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

    உலக மக்களின் மனநலம் இன்று, மனநலம் வரைபடம் 2024 ஆகிய தலைப்புகளில் உலக சுகாதார அமைப்பு 2 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு புதிய தரவுகள் குறித்த விவரம்: உலக அளவில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்கிறது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்று தற்கொலையாக மாறுகிறது.

    உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். பதற்றமும் மனச்சோர்வும் பொதுவமான மனநலக் கோளாறுகளாக உள்ளன. இவை, 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து மனநலக் கோளாறுகளிலும் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இருந்தன. மனநல பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

    2011 முதல் மதிப்பிடப்பட்ட தரவுகளில் 20-29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மனநல பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கவனக்குறைவு, அதிக செயல்பாட்டுக் கோளாறு, ஆட்டிசம் கோளாறு, அறிவு வளர்ச்சியில் கோளாறு ஆகிய குறைபாடுகள் பொதுவாக ஆண்களுக்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பதற்றம், மனச்சோர்வு, உணவுக் கோளாறு ஆகியவை பெண்களுக்கான பொதுவமான மனநலப் பிரச்சினையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    மனநலக்கோளாறுகளில் முதலில் பதற்றம் ஏற்படுகிறது. பின்னர் அது மனச்சோர்வாக மாறுகிறது. 40 வயதுக்குப் பிறகு பதற்றத்தைவிட மனச்சோர்வுதான் அதிகமாக காணப்படுகிறது. 50 வயது முதல் 59 வயது வரை அது உச்சத்தை அடைகிறது.

    அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூக – பொருளாதார சூழல்களிலும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக தற்கொலைதான் உள்ளது. தற்கொலை விகித்ததைக் குறைக்க உலக சுாதார அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள், தற்போதைய தற்கொலை விகிதத்தில் 3-ல் 1 பங்கை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதை அடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் 12% மட்டுமே அடையமுடியும்.

    போதுமான நிதி, வலுவான தலைமைத்துவம், ஏற்கெனவே உள்ள திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளே தேவையாக இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 6 முட்டை ரெசிபிகள் : ரமலான் செஹ்ரி: 6 முட்டை ரெசிபிகளை நீங்கள் 30 நிமிடங்களுக்குள் தயார் செய்யலாம்
    • மென்மையான சருமத்தை உடனடியாக பெற சர்க்கரை ஸ்க்ரப்பை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி
    • நீனா குப்தாவின் மூல பிரதிபலிப்புகள்: மசாபாவை தனியாக வளர்ப்பது, விவியன் ரிச்சர்ட்ஸுடன் காதல், மற்றும் பெருமையின் உளவியல் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா இன்று இரவு ஆர்ட்டெமிஸ் II வெளியீட்டு காலவரிசையை முக்கிய நிலவு மிஷன் புதுப்பிப்பில் வெளியிட உள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • துபாய் விமான அனுபவம்: பயண இடையூறுகளுக்கு மத்தியில், இந்த பெண் துபாய் விமானத்தில் தானே பயணிக்கிறார், அதை ‘தனியார் ஜெட்’ அனுபவம் என்று அழைக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.