சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி…
Author: admin
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இன்றைய கலந்துரையாடலின்போது அவர் கூறியதாவது: இன்று, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நான் உங்களுடன் பேசும்போது, என் இதயத்தில் ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத சம்பவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். காஷ்மீரில் அமைதி திரும்பியது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உற்சாகம் இருந்தது, கட்டுமானப் பணிகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்தன, ஜனநாயகம் வலுவடைந்து வந்தது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சாதனை விகிதத்தில் அதிகரித்து வந்தது, மக்களின் வருமானம் அதிகரித்து…
சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு / உள்ளிட / எழுதப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் மேக் சாதனங்களுக்கு இயங்குதள அப்டேட்களை அறிமுகம் செய்ய, அதன் ஊடாக புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதில் பயனர்களுக்கு குட் மற்றும் பேட் அனுபவமாக அமைந்துள்ளது. நல்ல செய்தி என்னவென்றால், தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளில் அந்த சாதனைகளின் பயனர்கள் கமெண்ட் கொடுக்கவும், மெனுக்களை பார்க்கவும் முடியும். அதே நேரத்தில் தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளின் எழுத்துருவும் (Font) மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் தரத்தை பயனர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் எழுத்துகளுக்கே உரிய அழகியல் புதிய எழுத்துருவில் இல்லை என்பது அவர்களது சங்கடம். இது தொடர்பாக தங்களது எதிர்வினையை சமூக வலைதள பயனர்கள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். வழக்கமாக…
மதுரை: “பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை ஆதீன மடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாட்டுடன் உலக நாடுகள் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான், அதனை தூண்டி விடுவது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இதனால் பாகிஸ்தான் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை. நேரு காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நல்லவராக இருப்பதை விட வல்லவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நம்பர் ஒன்னாக உள்ளார். இந்தியா எப்போதும் சமாதானத்தை தான் விரும்புகிறது.…
‘ரெட்ரோ’ பட விழாவில் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் நடிகை சூர்யா. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. இதன் தெலுங்கு விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அடுத்ததாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். அது தமிழ் படமாக உருவானாலும், பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் தான் படமாக்கவுள்ளதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா. ‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது. இதனை முடித்துவிட்டு தான் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்…
கொல்கத்தா: “பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதனால், பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான கங்குலி, தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் ரீதியான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். நூறு சதவிதம் இதை செய்ய வேண்டும். இது மாதிரியான கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை. ஆண்டுதோறும் இதுமாதிரியான தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்யவும் கூடாது. நாம்…
வாடிகன்: வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 1300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வாடிகன் சென்றார். இரண்டு நாள் பயணமாக வாடிகன் சென்ற குடியரசுத் தலைவர் முர்மு, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவருடன் சென்ற மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜோசுவா டி…
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் கோயில் சித்திரைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி, கொடிமரம் முன்பு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் உட்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாவட்ட நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், கோயில் கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று முதல் மே 10-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெறும். பிரதான நிகழ்ச்சி எண் திசை கொடியேற்றம் மே 1-ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் காலை 11.45 மணிக்குள் நடைபெறும். மே 2-ம் தேதி சந்திரசேகரர் முத்து பல்லக்கில் புறப்பாடு, மே 7-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளல், அன்று காலை 5.30 மணிக்கு மேல் காலை 6.30 மணிக்குள் தேரோட்டம், மே…
கோடை விடுமுறை காலங்களில் மாணவர்கள் டிவி, செல்போனில் அதிகமான நேரத்தை செலவிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. எனவே, இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிகளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும். விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும்…
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எடுத்துக்கொள்கிறது. இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் வழக்கை தேசிய புலனாய்வு முகமை முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்ள்ளது. ஏற்கனவே பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைரசன் புல்வெளியில் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ குழுவினர் புதன்கிழமை முதல் முகாமிட்டு தாக்குதலுக்கான ஆதாரங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமையின் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி மேற்பார்வையிலான குழு அமைதியான மற்றும் அழகிய பைசரன் புல்வெளியில் கண்கள் முன்னே தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றன. காஷ்மீரில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவங்களை ஒரு வரிசையில்…