ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புகளுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு, கணினி வாயிலாக நாளை (ஏப்ரல் 29) நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ல் தொடங்கி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றை எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல்…
Author: admin
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட் செக்மென்ட் மாடலாக வெளிவந்துள்ளது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் ஏராளமான ஏஐ அம்சங்களும் உள்ளன. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்கள் அறிமுகமாகின. தற்போது டி4 வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.77 இன்ச் AMOLED…
புதுடெல்லி: இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் இன்று (ஏப்.27) நிறைவடைகிறது. மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பாகிஸ்தானியர்கள் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர். அவர்களின் இந்திய உறவினர்களும் அட்டாரி எல்லைக்கு வந்து தங்களின் கண்ணீருடன் வெளியேறுபவர்களை வழியனுப்பி வருகின்றனர். இந்தியாவுக்கு வந்திருந்த பல்வேறு பாகிஸ்தானியர்கள் உறவினர்களின் திருமண நிகழ்வுகளில்…
தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.29 முதல் மே 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 3-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப் 29 முதல் மே 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான…
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. ரியான் ரிக்கெல்டன் 58 ரன்கள் (32 பந்துகள், 6 சிக்ஸர், 4 பவுண்டரி) குவித்து அசத்தினார். ரோஹித் சர்மா 12, வில் ஜேக்ஸ் 29 (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), திலக் வர்மா 6, ஹர்திக் பாண்டியா 5, கார்பின் போஷ் 20 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். நமன் திர் 11 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ், அவேஷ் கான்…
‘தொட்டாங் சிணுங்கி’ இயக்குநர் கே.எஸ்.அதியமான் நீண்ட இடைவெளிக்குப் பிரகு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘தொட்டாங் சிணுங்கி’ படத்தின் மூலம் இயக்குநராக கொண்டாடப்பட்டவர் கே.எஸ்.அதியமான். அப்படத்துக்குப் பிறகு தமிழ், இந்தி படங்களை இயக்கினாலும் எதுவுமே பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்கினார். அப்படமும் பாதியிலேயே நிற்கிறது. தற்போது புதிய படம் ஒன்றை சத்தமின்றி இயக்கி வருகிறார் அதியமான். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தில் விதார்த், ரேவதி, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் தெரியவரும். ஒட்டுமொத்த படத்தினையும் முடித்துவிட்டு, படம் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். ‘சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ ஆகிய படங்களின் மூலம் நாயகனாக அறியப்பட்டவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது ‘படை தலைவன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பெரும்பாலான காட்சிகளை காடுகளுக்குள் படமாக்கி இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ் குமார், இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
மூலவர்: மன ஆலய ஈஸ்வரர் அம்பாள்: மரகதாம்பிகை தல வரலாறு: திருநின்றவூரில் பிறந்த பூசலார், அங்குள்ள சிவலிங்கத்தை தினமும் தரிசித்து வந்தார். அந்தலிங்கம் மேற்கூரை இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப் பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. தன்னிடம் பொருள்ஏதும் இல்லாததால், தன் மனதுக்குள் கோயிலை கட்டினார்.அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டிக் கொண்டிருந்தான். இருவரும் ஒரே நேரத்தில் கோயிலை கட்டி முடித்து, ஒரே நாளில்கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்துவிட்டதால், மற்றொரு நாள் காஞ்சிபுரம் கோயில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்ளும்படி கூறினார். மன்னனும் அதையேற்று, திருநின்றவூர் சென்று பூசலாரைசந்தித்து தான் குடமுழுக்கு நடைபெற உள்ள கோயிலைக் காண வந்துள்ளதாகத் தெரிவித்தார். நடந்த விஷயத்தை பூசலார் கூறியதும், அன்பால் மனதில் கட்டும் கோயிலுக்கும், மிகுந்த…
இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது. அதில் ஒன்று இந்தியா உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு. இதனால் அந்த நாட்டில் மருந்து விநியோக சங்கிலி பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. ஏனெனில், அந்த நாட்டின் மருந்து தேவையில் சுமார் 30 முதல் 40 சதவிதம் வரையில் இந்தியாவை நம்பியே உள்ளது. குறிப்பாக மருந்து சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்களும் இதில் அடங்கும். இந்நிலையில், மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை பெற அவசரகால தயார்நிலை சார்ந்த நடவடிக்கையை அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம்…
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது ஆர்சிபி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த போட்டிய்ல் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணியின் அசோக் பொரெல், டூ ப்ளெஸ்ஸிஸ் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் அசோக் பொரெல் 28 ரன்கள், டூ ப்ளெஸ்ஸிஸ் 22 ரன்களுடன் வெளியேறினர். கருண் நாயர் 4 ரன்களுடன் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 41 ரன்கள் விளாசினார். அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. அக்சர் படேல் 15, ஸ்டப்ஸ் 34, அஷுடோஷ் சர்மா 2, விப்ராஜ் நிகாம் 12 என 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. 163 எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஜேக்கப் பெதெல் 12 ரன்கள் எடுத்தார். கோலி அரை சதம் எடுத்து அசத்தினார்.…