Author: admin

“பி.சி.ஸ்ரீராமை கொண்டாட விழா எடுக்க வேண்டும்” என்று இயக்குநர் வசந்த பாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் கதிர், இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசும் போது “மீரா படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பி.சி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து வியப்பாக இருக்கும். இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.ஸ்ரீராம். இவர் படத்தில் இவரது…

Read More

குன்னூர்: இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன்(78) குன்னூரில் காலமானார். இவருக்கு 42 குண்டுகள் முழங்க, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பாம்பே சாப்பர்ஸின் கர்னல் கமாண்டராகப் பணியாற்றியுள்ள இவர், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகளின் முதல் இயக்குநராகவும், மேற்கு கட்டளையின் ராணுவ தளபதியாகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 40 ஆண்டு சேவைக்குப் பிறகு 2006-ம் ஆண்டு ராணுவ துணைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து வெலிங்டன் எரிவாயு மயானத்துக்கு இவரது உடல், தேசியக் கொடி போர்த்தப்பட்டு ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு,…

Read More

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசோடு இணைந்து செயல்படுகின்றன. இந்த சூழலில் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதித்து, கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானோடு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு இந்தியாவில் இடமில்லை என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கபில்…

Read More

சென்னை: இந்தியாவில் விவோ Y39 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஸ்க்ரீன் ட்ரான்ஸ்லஷன், ஏஐ ஆடியோ அல்கோரிதம் மாதிரியான ஏஐ டூல் அம்சங்களும் இதில் உள்ளன. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் விவோ Y39 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகி உள்ளது. விவோ ‘Y’ சீரிஸில் முதல் முறையாக ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ள போனாக இது உள்ளது. மிட் செக்மென்ட் விலையில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன் இது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.68 இன்ச் எல்சிடி டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15…

Read More

நடப்பு ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் தோனி வீரர்கள் தேர்வில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை என்று கூறும் சுரேஷ் ரெய்னா, அவர் ஈடுபாடு காட்டியிருந்தால் ஏலத்தில் வீரர்கள் தேர்வில் தவறுகள் நடந்திருக்காது என்றார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடக நிறுவனத்துக்கு இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியது: “எம்.எஸ்.தோனிதான் இறுதி முடிவை எடுப்பார் என்று அவர்கள் எப்போதும் கூறுவார்கள். ஆனால், நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் எந்த ஏலத்திலும் நேரடியாகப் பங்கேற்றதில்லை. அந்த விவாதங்களிலும் நான் கலந்து கொண்டதில்லை. தக்கவைத்த வீரர்கள் பற்றியே நான் பேசியிருக்கிறேன். ஒரு வீரரை ஏலம் எடுக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க தோனிக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எனக்குத் தெரிந்து தோனி அவ்வளவாக இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றே தோன்றுகிறது. சிஎஸ்கேவின் மைய நிர்வாகக் குழுவே ஏலத்தில் தீர்மானங்களை எடுக்கின்றனர். தோனி வேண்டுமானால்…

Read More

சென்னை: அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் விதிகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படுகிறது. அதில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் மின்னணு நிதி பரிமாற்ற (இசிஎஸ்) முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில்…

Read More

இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஈடுபட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும்…

Read More

தொடர் விடுமுறை காரணமாக, பழநி மலைக் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிஸ்கட்டும், பிரசாதமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்குச் சென்றனர். பழநி அடிவாரம், சந்நிதி வீதி, பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

Read More

முரளி, வடிவேலு நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘இ பறக்கும் தள்ளிகா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். அதனையும் தஹா தான் இயக்கி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இதன் மறுவெளியீட்டு உரிமையினை சிவபெருமான் என்பவர் கைப்பற்றி இருக்கிறார். தற்போது மறுவெளியீட்டில் பல படங்கள் வெற்றியடைந்து வருவதால், இப்படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

Read More

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் (92). வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

Read More