Author: admin

தாயை இழந்துவிட்ட 14 வயது மகளின் கல்விக்காக சென்னையில் குடியேறுகிறார் கிராமத்து மனிதரான சரவணன் (பிரேம்ஜி). சுவரொட்டித் தொழிலாளியாக உழைத்து, மகளைக் கண்ணும் கருத்துமாகப் படிக்க வைக்கிறார். ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மகள், திடீர் உடல்நலக் குறைவுக்கு ஆளாக, பதறியடித்து மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். பரிசோதனையில் அவளுக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துச் சொல்கிறார் மருத்துவர். இதைக் கேட்டுமனம் குமையும் மகளும் தந்தையும், பாலியல் குற்றவாளி யாரெனக் கண்டுபிடித்து பழிதீர்க்க முடிவெடுக்கிறார்கள். அவர்களால் அது முடிந்ததா என்பது கதை. ஒண்டிக்குடித்தனத்தில் வாழ்ந்தாலும் மானத்துடன் வாழ வேண்டும் என நினைக்கும் சாமானிய மனிதர்களின் கோபத்துக்கு நியாயமும் வலிமையும் உண்டு என்கிற கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பழிவாங்கும் திரைக்கதை, தங்குதடையில்லாமல் பயணிக்கிறது. குற்றம் எப்போது, எந்தச் சூழ்நிலையில் நடந்தது, குற்றவாளி யார்என்பதைக் கண்டறியத் தந்தையும் மகளும் எடுக்கும் முயற்சிகள் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் யதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. குற்றவாளி யார் என்பதைக் கண்டறிந்த…

Read More

கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் ஏதோ விடுமுறையைக் கழிக்க இங்கு வந்துள்ளது போலவே ஆடுகின்றனர் என்று விரேந்திர சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார். மேக்ஸ்வெல் படுமோசமாக ஆடி வருவதால் அவரது ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கே அவரை உட்கார வைக்க வேண்டியதாயிற்று. வெறும் 41 ரன்களை 5 போட்டிகளில் எடுத்துள்ளார் மேக்ஸ்வெல். கடந்த ஐபிஎல் சீசனிலும் ஆர்சிபி அணிக்காக ஆடி சொதப்பலோ சொதப்பல் என்று கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்து வரும் விரேந்திர சேவாக், இந்த முறை கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன் போன்றோர் இங்கு விடுமுறையைக் கழிக்க வருகின்றனர் என்று சாடியுள்ளார். “அவர்கள் இந்தியாவுக்கு விடுமுறையைக் கழிக்கவே வருகின்றனர். தங்கள் அணியை அவர்கள் நேசிப்பது போல் தெரியவில்லை. அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டுமென்ற உணர்வே அவர்களுக்கு…

Read More

வாஷிங்டன்: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். அண்மையில் பிஹாரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் மிகக் கடுமை​யாக தண்​டிக்​கப்​படு​வார்​கள். கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு அவர்​களுக்கு தண்​டனை வழங்​கப்​படும். பயங்கரவாதத்தை வேரறுக்​கும் காலம் வந்​து​விட்​டது. 140 கோடி இந்​தி​யர்​களின் மனவலிமையை யாராலும் உடைக்க…

Read More

சென்னை: மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் விடை​யாற்றி விழா​வில் சந்​தீப் நாராயண் குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பங்​குனி பெரு​விழா கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. முக்​கிய நிகழ்​வு​களான தேரோட்​டம் கடந்த 9-ம் தேதி​யும், அறு​பத்து மூவர் விழா 10-ம் தேதி​யும் நடை​பெற்​றன. இதன்​பிறகு, 14-ம் தேதி விடை​யாற்றி தொடங்​கியது. இதில், இசை, நாட்​டி​யம் என பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த 20-ம் தேதி பிரபல கர்​னாடக இசைக் கலைஞர் சந்​தீப் நாராயண் குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. அனந்த கிருஷ்ணன் (வயலின்), நெய்​வேலி வெங்​கடேஷ் (மிருதங்​கம்), அனிருத் ஆத்​ரேயா (கஞ்​சி​ரா)ஆகியோர் பக்​க​வாத்​தி​யம் வாசித்​தனர். பாப​நாசம் சிவன் கிருதிகள்: இந்த நிகழ்ச்​சி​யில், ‘வரு​வாரோ வரம் தரு​வாரோ’, ‘இன்​பம்வந்​தா​லும் என்ன துன்​பம் வந்​தா​லும்’, ‘காரணம் கேட்டு வாடி சகி’மற்​றும் மயிலை கபாலீஸ்​வரர் மீதுபாப​நாசம் சிவன் பாடி​யிருக்​கும்அரிய கிரு​தி​களான ‘கருணாகரனே சிவசங்​கரனே’, ‘கபாலி கருணை நிலவு…

Read More

சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இன்றைய கலந்துரையாடலின்போது அவர் கூறியதாவது: இன்று, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நான் உங்களுடன் பேசும்போது, ​​என் இதயத்தில் ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத சம்பவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். காஷ்மீரில் அமைதி திரும்பியது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உற்சாகம் இருந்தது, கட்டுமானப் பணிகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்தன, ஜனநாயகம் வலுவடைந்து வந்தது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சாதனை விகிதத்தில் அதிகரித்து வந்தது, மக்களின் வருமானம் அதிகரித்து…

Read More

சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு / உள்ளிட / எழுதப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் மேக் சாதனங்களுக்கு இயங்குதள அப்டேட்களை அறிமுகம் செய்ய, அதன் ஊடாக புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதில் பயனர்களுக்கு குட் மற்றும் பேட் அனுபவமாக அமைந்துள்ளது. நல்ல செய்தி என்னவென்றால், தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளில் அந்த சாதனைகளின் பயனர்கள் கமெண்ட் கொடுக்கவும், மெனுக்களை பார்க்கவும் முடியும். அதே நேரத்தில் தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளின் எழுத்துருவும் (Font) மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் தரத்தை பயனர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் எழுத்துகளுக்கே உரிய அழகியல் புதிய எழுத்துருவில் இல்லை என்பது அவர்களது சங்கடம். இது தொடர்பாக தங்களது எதிர்வினையை சமூக வலைதள பயனர்கள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். வழக்கமாக…

Read More

மதுரை: “பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை ஆதீன மடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாட்டுடன் உலக நாடுகள் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான், அதனை தூண்டி விடுவது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இதனால் பாகிஸ்தான் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை. நேரு காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நல்லவராக இருப்பதை விட வல்லவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நம்பர் ஒன்னாக உள்ளார். இந்தியா எப்போதும் சமாதானத்தை தான் விரும்புகிறது.…

Read More

‘ரெட்ரோ’ பட விழாவில் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் நடிகை சூர்யா. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. இதன் தெலுங்கு விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அடுத்ததாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். அது தமிழ் படமாக உருவானாலும், பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் தான் படமாக்கவுள்ளதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா. ‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது. இதனை முடித்துவிட்டு தான் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்…

Read More

கொல்கத்தா: “பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதனால், பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான கங்குலி, தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் ரீதியான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். நூறு சதவிதம் இதை செய்ய வேண்டும். இது மாதிரியான கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை. ஆண்டுதோறும் இதுமாதிரியான தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்யவும் கூடாது. நாம்…

Read More