செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் கூகுள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் சாட்பாட்டுகளை அறிமுகப்படுத்தியது போல ‘எக்ஸ்’ தளத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தினார் எலன் மஸ்க். இப்போது ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘க்ரோக்’ சாட்பாட் அளிக்கும் பதில்களைச் சுற்றி பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்த க்ரோக், வரம்பு மீறி கொச்சையான சொற்களைப் பயன்படுத்தியதால் அப்பதிவு வைரலானது. வரலாறு, சினிமா, அரசியல் விமர்சனங்கள், சித்தாந்தங்கள் என அனைத்துத் தலைப்புகளை ஒட்டிய கேள்விகளுக்கும் க்ரோக் வெளிப்படையான பதில்களைப் பதிவு செய்வதால் ‘எக்ஸ்’ தளத்தில் பயனர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. சிலர், க்ரோக்கின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், க்ரோக்கின் பதில்களைப் பகிர்ந்து ஜெமினி ஏ.ஐ, ஓபன் ஏ.ஐ சாட்பாட்டுகளுடன் ஒப்பிடுகையில் க்ரோக் தனித்து நிற்கிறது என ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில்…
Author: admin
கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை கல்லூரிகளும் ஜூன் 16-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என மாநில கல்லூரி கல்வி ஆணையர் இ,சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்,. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஏப்ரல்/மே மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிஏ, பிஎஸ்சி., பிகாம். பிபிஏ, உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதி வருகின்றனர். செஸ்டர் தேர்வுக்கு பிறகு மே மாதம் கல்லூரி மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு செமஸ்டர் வகுப்பு ஜூன் 16-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கலை மற்றும்…
புதுடெல்லி: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர். இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000-ம் ஆண்டு மார்ச்சில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மார்ச் 20-ம் தேதி மாலை, அனந்த்நாக் மாவட்டத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிட்டிசிங்போரா என்ற தொலைதூர கிராமத்துக்குள் இந்திய ராணுவ சீருடையில் தீவிரவாதிகள் நுழைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கிராமவாசிகள் மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். பலர் டிரான்சிஸ்டர் ரேடியோக்களில் அமெரிக்க அதிபரின் வருகை பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் உள்ளூர் குருத்வாராவில் மாலை பிரார்த்தனைக்கு பிறகு அப்போதுதான் திரும்பியிருந்தனர். இந்நிலையில் தீவிரவாதிகள் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து, கோயில்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இருந்த சீக்கிய ஆண்களை சுற்றி வளைத்தனர். மொத்தம் 37 ஆண்களை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 35 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இருவர்…
சென்னை: சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து புன்னை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏப். 14-ம் தேதி பரமபதநாதன் திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலித்தல், சிம்ம வாகன வீதி உலாவும், 15-ம் தேதி கருட சேவை நிகழ்வும் நடைபெற்றன. 16-ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை நிகழ்வும், 17-ம் தேதி பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்தில் அருள்பாலித்தல் நிகழ்வும் நடைபெற்றன. நேற்று சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானம், யானை வாகன வீதி உலா நடைபெற்றது.…
சீமான், ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதற்காக ரஜினி நடித்த ‘தர்மயுத்தம்’ படத்தின் தயாரிப்பாளரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கியிருப்பதாக தெரிகிறது. இப்படத்தினை ஆதம் பாவா மற்றும் இரா.க.சிவகுமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதில் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரைமுருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக செழியன், இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஒரு கொலையின் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார். தென்காசி,குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப்புறங்களிலும்…
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது… விலகலுக்கான காரணம்… எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள். மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக செயல்பாட்டாளராக வளர்ந்த உங்களுக்கு நாதக அறிமுகம் எப்படி கிடைத்தது? கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச்செயலாளராக இருந்தேன். கஜா புயல் பாதிப்பின்போது, மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்காத நிலையில், அது குறித்து பேச வேண்டும் என நாதக தரப்பில் கேட்டனர். அது தொடர்பாக நாகப்பட்டினத்தில் நடந்த…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிஷ்த்வார் துணை ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் வெளியிட்ட உத்தரவில், “ பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாசகார சக்திகள் முயன்று வருகின்றன. இந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை தைப்பதற்கும், விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடைவிதித்துள்ளது. அப்படி ராணுவ மற்றும் போர் ஆடைகளை வாங்கி விற்கும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த உத்தரவு வெளியான 15 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள அங்கீகாரம் குறித்து எழுத்துப்பூர்வமாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு டீலரும் ராணுவம், போலீஸ் ஆடைகள் விற்பனை தொடர்பான முறையான பதிவேட்டை பராமரிக்க வேண்டும். டீலர்கள் ராணுவ உடைகளை…
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம் 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்ய முடியும். 15 நிமிட சார்ஜில் 320 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். சீனாவின் பிஒய்டி நிறுவனம், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன சாதனையை முறியடித்து உள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்டி நிறுவனர் வாங் சூயான்பு, சீனாவின் சென்சென் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது நிறுவனம் சார்பில் சூப்பர் இ-பிளாட்பார்ம் சார்ஜரை உருவாக்கி உள்ளோம். இந்த சார்ஜர் மூலம் 5 நிமிடங்களில் காரை சார்ஜ் செய்யலாம். ஐந்து நிமிட சார்ஜில் 400 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக பிஒய்டி நிறுவனத்தின் ஹான் எல், டேங் எல் மின்சார கார்களில் 5 நிமிட சார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்படும். இதன்பிறகு எங்களது அனைத்து மின்சார கார்களிலும் இதே வசதி…
சென்னை: சென்னை இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை இஸ்கான் சார்பில் பகவான் ஜெகன்நாதர் மற்றும் பொறுமையின் சிறப்புகள் குறித்த கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்குபெறலாம். 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு, கதைகள், ஸ்லோகங்கள், வரைகலை, கைவினை பயிற்சிகள், நெருப்பில்லா சமையல் விளையாட்டு, கீர்த்தனைகள் கற்றுத் தரப்படும். 13 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கதைகள், ஸ்லோகங்கள், கீர்த்தனை, ஒரு நிமிட உரை, கலந்துரையாடல், விவாதங்கள், ஆய்வு, மன வரைபடங்கள் கற்பிக்கப்படும். சிறுவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்வதன் மூலம் கடவுள் பக்தி, நல்ல குணங்கள் மற்றும் நமது கலாச்சாரத்தை கற்று பயனடைவார்கள். மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். இந்த சிறப்பு முகாம்…