சென்னை: சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து புன்னை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏப். 14-ம் தேதி பரமபதநாதன் திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலித்தல், சிம்ம வாகன வீதி உலாவும், 15-ம் தேதி கருட சேவை நிகழ்வும் நடைபெற்றன. 16-ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை நிகழ்வும், 17-ம் தேதி பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்தில் அருள்பாலித்தல் நிகழ்வும் நடைபெற்றன. நேற்று சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானம், யானை வாகன வீதி உலா நடைபெற்றது.…
Author: admin
சீமான், ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதற்காக ரஜினி நடித்த ‘தர்மயுத்தம்’ படத்தின் தயாரிப்பாளரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கியிருப்பதாக தெரிகிறது. இப்படத்தினை ஆதம் பாவா மற்றும் இரா.க.சிவகுமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதில் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரைமுருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக செழியன், இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஒரு கொலையின் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார். தென்காசி,குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப்புறங்களிலும்…
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது… விலகலுக்கான காரணம்… எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள். மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக செயல்பாட்டாளராக வளர்ந்த உங்களுக்கு நாதக அறிமுகம் எப்படி கிடைத்தது? கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச்செயலாளராக இருந்தேன். கஜா புயல் பாதிப்பின்போது, மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்காத நிலையில், அது குறித்து பேச வேண்டும் என நாதக தரப்பில் கேட்டனர். அது தொடர்பாக நாகப்பட்டினத்தில் நடந்த…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிஷ்த்வார் துணை ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் வெளியிட்ட உத்தரவில், “ பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாசகார சக்திகள் முயன்று வருகின்றன. இந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை தைப்பதற்கும், விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடைவிதித்துள்ளது. அப்படி ராணுவ மற்றும் போர் ஆடைகளை வாங்கி விற்கும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த உத்தரவு வெளியான 15 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள அங்கீகாரம் குறித்து எழுத்துப்பூர்வமாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு டீலரும் ராணுவம், போலீஸ் ஆடைகள் விற்பனை தொடர்பான முறையான பதிவேட்டை பராமரிக்க வேண்டும். டீலர்கள் ராணுவ உடைகளை…
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம் 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்ய முடியும். 15 நிமிட சார்ஜில் 320 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். சீனாவின் பிஒய்டி நிறுவனம், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன சாதனையை முறியடித்து உள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்டி நிறுவனர் வாங் சூயான்பு, சீனாவின் சென்சென் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது நிறுவனம் சார்பில் சூப்பர் இ-பிளாட்பார்ம் சார்ஜரை உருவாக்கி உள்ளோம். இந்த சார்ஜர் மூலம் 5 நிமிடங்களில் காரை சார்ஜ் செய்யலாம். ஐந்து நிமிட சார்ஜில் 400 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக பிஒய்டி நிறுவனத்தின் ஹான் எல், டேங் எல் மின்சார கார்களில் 5 நிமிட சார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்படும். இதன்பிறகு எங்களது அனைத்து மின்சார கார்களிலும் இதே வசதி…
சென்னை: சென்னை இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை இஸ்கான் சார்பில் பகவான் ஜெகன்நாதர் மற்றும் பொறுமையின் சிறப்புகள் குறித்த கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்குபெறலாம். 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு, கதைகள், ஸ்லோகங்கள், வரைகலை, கைவினை பயிற்சிகள், நெருப்பில்லா சமையல் விளையாட்டு, கீர்த்தனைகள் கற்றுத் தரப்படும். 13 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கதைகள், ஸ்லோகங்கள், கீர்த்தனை, ஒரு நிமிட உரை, கலந்துரையாடல், விவாதங்கள், ஆய்வு, மன வரைபடங்கள் கற்பிக்கப்படும். சிறுவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்வதன் மூலம் கடவுள் பக்தி, நல்ல குணங்கள் மற்றும் நமது கலாச்சாரத்தை கற்று பயனடைவார்கள். மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். இந்த சிறப்பு முகாம்…
ஒரு வெற்றிகரமான ரஞ்சி டிராபி சீசனை விட ஒரு சுமாரான ஐபிஎல் சீசனே வீரர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது என்று கூறும் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் மீடியா கவரேஜ், ரஞ்சி டிராபிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை, சம்பளங்களிலும் பெரும் இடைவெளியும் சமத்துவமின்மையும் உள்ளது என்று சாடியுள்ளார். ஐபிஎல் மூலம் நல்ல வீரர்கள் இந்திய கிரிக்கெடுக்குக் கிடைத்து வருவதை வரவேற்கும் கவாஸ்கர், ரஞ்சி டிராபி இதனால் பெறும் மிக மிகக் குறைவான கவன ஈர்ப்பினால் உள்ளூரிலிருந்து ஒரு வீரர் வருவது மிக மிகக் கடினமாகியுள்ளது என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். ‘தி இந்து ஸ்போர்ட் ஸ்டார்’ இதழுக்கு எழுதிய பத்தி ஒன்றில் கவாஸ்கர் பகிர்ந்தவை: ‘நடப்பு ஐபிஎல் மீண்டும் காட்டுவது என்னவெனில் ஒரு நல்ல ஆட்டம் ஆடிவிட்டால் போதும், உடனே அவரை உயர்ந்த கவுரவங்களுக்கு உரியவராக உயர்த்துகின்றனர். ஆனால், தேசிய சாம்பியன்ஷிப் ஆன ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளில் ஆடினால் அந்த ஆட்டத்துக்கோ, வீரருக்கோ போதிய வெளிச்சம்…
வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கா பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை 5 பேர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. இந்திய எல்லையில் ராணுவம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய அமைப்பு பாகிஸதானைச் சேர்ந்தது என்பதாலும், தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானியர்களும் அடங்கும் என்பதாலும் இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது என கூறப்படுகிறது. இந்த பின்னணியில், அமெரிக்கர்கள்…
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் வரும் 26-ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னிகள் என 2 மனைவிகளுடன் தனி சந்நிதியில் வீற்றிருந்து மங்கள குருவாக அருள்பாலித்து வருகிறார். இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பால் நீல நிறமாக மாறும். இத்தகைய சிறப்பு பெற்ற ராகுபகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பின்னோக்கி நகர்வார். அதன்படி, ராகு பகவான் வரும் 26-ம் தேதி மாலை 4.20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இதையொட்டி, அன்று மாலை ராகு பகபவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனையும், அதன்பின் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் தா.உமாதேவி, அறங்காவலர் குழுத் தலைவர் சி.சிவகுருநாதன்…
அலைச்சறுக்கு வீரரான சிவா, சென்னையில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் கடற்கரையில் ராட்சத உருவத்தில் மயங்கி கிடக்கும் சுமோ தஷிரோவை (யொஷினோரோ தஷிரோ) சிவா மீட்கிறார். பார்ப்பதற்கு வெளிநாட்டவரைப் போல் இருக்கும் அவரை, உணவகத்துக்கு அழைத்து வருகிறார். பழைய ஞாபகங்களை இழந்து விடும் அவரை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர் ஜப்பானில் மிகப்பெரிய சுமோ விளையாட்டு சாம்பியன் என்பது தெரிய வருகிறது. அவரை மீண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்ல, சிவா திட்டமிடுகிறார். ஆனால், ஜப்பானில் இருக்கும் ஒரு கும்பல் அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கிறது. அவரை, சிவாவால் ஜப்பானுக்கு அழைத்து செல்ல முடிந்ததா, இல்லையா ? என்பது கதை. வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள கதைதான். அதை முடிந்தவரை நாயகன் சிவாவுக்கு ஏற்ப நகைச்சுவையாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஹோசிமின். விடிவி கணேஷின் ஃபிளாஷ்பேக்கில் விரியும் கதையில், ராட்சத மனிதன் கதைக்குள்…