சென்னை: ஏற்கெனவே நடத்தப்பட்ட 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தேர்வர்கள் குறிப்பிட்ட காலம் வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட செயல் அலுவலர் -கிரேடு 3 தேர்வு ( குருப் 7 -பி), செயல் அலுவலர்-கிரேடு-4 தேர்வு (குருப்-8), கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குருப்-3 ஏ), ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு மற்றும் கடந்த 2024-ம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு ஆகிய 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்தேர்வுகளை எழுதியவர்கள் தங்களின் ஒருமுறை பதிவெண் மூலம் ஓஎம்ஆர் விடைத்தாளினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Author: admin
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா 2-வது இடம் பெற்றுள்ளார். அவர் இதுவரை 297 சிக்ஸர்களை விளாசியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா, 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் 297 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் விராட் கோலியும், 4-வது இடத்தில் எம்.எஸ். தோனியும், 5-வது இடத்தில் ஏபி டிவில்லியர்ஸும் உள்ளனர்.
ஜெட்டா: பிரதமர் மோடியின் விமானம் நேற்று சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றன. பிரதமர் மோடியின் வருகைக்கு அளிக்கப்பட்ட இந்த அரியவகை சிறப்பு மரியாதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரதமர் மோடி சவுதி, அரேபியா வரும்படி அந்நாட்டு இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். வெளிநாட்டு தலைவர்களின் வருகையின்போது, விமானநிலையத்தில் அந்நாட்டு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்த விமானத்துக்கு சவுதி போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றன. சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளதால், பிரதமர் மோடிக்கு இந்த அரியவகை சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த 2016 மற்றும்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழா ஏப்.28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய திருவிழாக்களான ஏப்.29-ம் தேதி (சித்திரை 16)செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்குமேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மே 6ம் தேதி (சித்திரை 23) செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்குமேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மே 7ம் தேதி (சித்திரை 24) புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெறும். மே 8ம் தேதி (சித்திரை 25) வியாழக்கிழமை…
மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘துடரும்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பினால் மோகன்லால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ‘துடரும்’ படம் வெளியிடப்பட்டது. பெரிதாக எந்தவொரு விளம்பரப்படுத்துதல் இல்லாமல் வெளியானது. முழுக்க கதையை நம்பி மட்டுமே படக்குழு வெளியிட்டது. ‘துடரும்’ படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே, பலரும் இணையத்தில் கொண்டாடி தீர்த்தார்கள். இதனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு எகிறியது. பல்வேறு மொழிகளிலும் இப்படத்தின் ரீமேக் உரிமையினை கைப்பற்ற இப்போதே பேச்சுவார்த்தையினை தொடங்கியிருக்கிறார்கள். ‘துடரும்’ படத்துக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு குறித்து மோகன்லால், “‘துடரும்’ படத்துக்கான அன்பு மற்றும் மனமார்ந்த பதிவுகளால் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறேன். ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பாராட்டு வார்த்தையும் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத வழிகளில் என்னைத் தொட்டுள்ளன. இந்தக் கதைக்கு உங்கள் இதயங்களைத் திறந்ததற்கும், அதன் ஆன்மாவைப்…
சென்னை: சென்னையில் வங்கி மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான சிபிஐ வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் என்ற புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார். தொடக்க விழாவில், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சரத்கர், வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து வருகின்றனர். இது ஏற்கெனவே இப்பகுதியில் நிலவிய நிச்சயமற்ற தன்மையை நினைவூட்டுவதாக உள்ளது. ‘மோடி பதுங்கு குழிகள்’ என பிரபலமாக அறியப்படும் இவற்றில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு அப்பால் இருந்து (பாகிஸ்தான்) நடத்தப்படும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே நிலத்தடியில் பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன. இவை மோடி பதுங்கு குழிகள் என அழைக்கப்படுகின்றன. பூஞ்ச் மற்றும் ரஜவுரி உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில்…
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது ஸ்பேடெக்ஸ் (Space Docking Experiment) பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் சந்திரயான் 4 உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு வெற்றிகரமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை வெற்றிக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் தொகுப்புகளை இஸ்ரோ அதன் எக்ஸ் பக்கத்தில் விரிவாக வெளியிட்டுள்ளது. அவை, SDX-2-ஐ பிரிப்பது, திட்டமிட்டபடி கேப்சர் லிவர் 3-ஐ விடுவிப்பது, SDX-2-லிருந்து கேப்சர் லிவரின் தொடர்பைத் துண்டிப்பது, பிடிப்புகளை விடுவிக்கும் கட்டளைகளை இரண்டு செயற்கைக் கோள்களுக்கும் வழங்குவது உள்ளிட்ட செயல்முறைகள் உள்ளடங்கியது. இஸ்ரோவின் இந்த வெற்றியைப் பாராட்டி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் மகிழ்சியில் உள்ளனர். ஸ்பேடெக்ஸ் நம்பமுடியாத அளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றி, பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன், சந்திரயான் 4…
சென்னை: ஐஐடி ஆண்டு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத் உட்பட 12 முன்னாள் மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை ஐஐடியின் 66-வது ஆண்டுவிழா ஐஐடி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஐஐடி முன்னாள் மாணவரும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலருமான சிவகுமார் கல்யாணராமன் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, “ஐஐடியில் நிலவும் ஆராய்ச்சி சூழலைப் பார்த்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் நிறுவனம் உயர் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தனியார் துறையினர் அதிக முதலீடு செய்ய உந்து சக்தியாகத் திகழ்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களும் இத்துறையில் அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தலைமை தாங்கிப் பேசுகையில், “நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் ஐஐடி மாணவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளில் சேர வேண்டும். அதற்கேற்ப…
கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அந்த அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார். நேற்று முன்தினம் கொல்கத்தாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. பிரியன்ஷ் ஆர்யா 69 ரன்களும் (35 பந்துகள், 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் (6 சிக்ஸர், 6 பவுண்டரி), கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்களும், ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி…