புதுடெல்லி: “இந்த முறை சமரசம் இருக்காது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள்” என்று பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் நாடு பாகிஸ்தான். இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் சிறிது கோபத்தை வெளிப்படுத்திவிட்டு, பின்னர் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனால், இந்த முறை சமரசம் இருக்காது; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள். அரசு என்ன செய்யப் போகிறது என்பதை நாம் இங்கே ஊகிக்க முடியாது. நம்மிடம் ஒரு வலுவான, முதிர்ந்த அரசு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் முட்டாள்தனமான…
Author: admin
Last Updated : 28 Feb, 2025 10:29 AM Published : 28 Feb 2025 10:29 AM Last Updated : 28 Feb 2025 10:29 AM இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமைகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றில் ஒன்று, ‘அறிவியல் மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் வளர்ப்பது.’ அறிவியல் மனப்பான்மை என்பது ஒருவரது தர்க்க – பகுத்தறிவு சார்ந்த மனப்பான்மை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் நாம் தர்க்கரீதியாகவும் பகுத்தறிந்தும் அணுகுகிறோம் என்றால் நாம் அறிவியல் மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்று பொருள். தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் அறிவியல் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நம்மால் நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமான முடிவுகளை எடுக்க முடியும். நம் கண் முன் நடப்பவை குறித்தும் நமக்குச் சொல்லப்படுபவை குறித்தும் அறிவியலின் துணையோடு பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுக்க முடியும். அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையும் செயல்பாடுகளையும் புறக்கணிக்க முடியும். சுதந்திர இந்தியாவின் முதல்…
ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,014 கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், முதுகலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மற்றும் இளங்கலையில் தொழில்முறை படிப்புகள் பயிலும் மாணவர்களை ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல், கால்நடை மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் , வேதியியல், இயந்திரவியல், கணினி அறிவியல், மின்சாரம், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் 1,014 சாத்தியமான திட்டங்கள் ஐஐடி, சிஎல்ஆர்ஐ, நியாட் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற…
Last Updated : 25 Apr, 2025 07:40 AM Published : 25 Apr 2025 07:40 AM Last Updated : 25 Apr 2025 07:40 AM கேரள மாநிலம் கொச்சியின் தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாளான நேற்று ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவை சேர்ந்த அனிமேஷ் குஜூர் பந்தய தூரத்தை 20.40 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு போடடியில் அம்லான் போர்கோகெய்ன் பந்தய தூரத்தை 20.52 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்த புதிய சாதனையை படைத்துள்ளார் அனிமேஷ் குஜூர். ஆசிய அளவில் அனிமேஷ் குஜூரின் சாதனை முதலிடத்திலும் உலக அளவில் 35-வது இடத்திலும் உள்ளது. எனினும் அனிமேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். உலக…
வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் உறுதி செய்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலையில் சீரற்ற தன்மையே நிலவியது. இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. முதல் லத்தீன் அமெரிக்க போப்! ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம்…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழாவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் நாள் விழாவான ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவை நடைபெற்றது. நேற்று இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இன்று(ஏப்ரல் 11) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7.05 மணிக்கு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக திவ்ய தம்பதிகள் ஆண்டாள் ரெங்கமன்னார் ராஜ அலங்காரத்தில் செப்புத் தேரில் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா கோபாலா’ கோஷம் முழங்க…
2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சில நொடிகளே வரும் ஒரு காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அண்மையில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு இப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடியிருந்தார். சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர்.
சென்னை: காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல் துறை மீது எனக்கு எப்போதுமே ஒரு நல்லெண்ணம் உண்டு. காரணம், அவர்களுக்கு இருக்கும் கடுமையான பணிச் சூழல். எப்போதுமே நெருக்கடியில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள். எந்த உடல் கஷ்டங்களையும் வெளியில் சொல்லி ஓய்வெடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள். போதை கலாச்சாரம், பயங்கரவாதம், அதிகரித்து வரும் கிரிமினல்களின் ஆதிக்கம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு இடையே, மனித உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாயம். அதோடு, ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்கிற குற்றச்சாட்டு. இவை எல்லாம் காவல்துறை சந்தித்து வரும் நெருக்கடிகள். அவர்களுக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை என்பது தான் அந்தப்…
புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் பயிற்சி அளித்தல், உபகரணங்கள், சிமுலேட்டர், ஆயுதங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போக்குவரத்து ஆகியவை உள்ளடங்கும். இதில் இந்திய விமானப்படையின் தற்போதுள்ள ரஃபேல் விமானங்களுக்கான கூடுதல் உபகரணங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னுவும் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் கையொப்பமிடப்பட்ட நகல்கள், இன்று (2025 ஏப்ரல் 28) புதுடெல்லியில்…
அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில் உண்மைக்கு முரணான போலியான அறிவியலும் வளர்ந்துவருகிறது. குறிப்பாகச் சமூக வலைதளங்களில் எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் போலியான தகவல்களைப் பொதுத் தளத்தில் பகிரும் போக்கு அதிகரித் துள்ளது. ஒரு நோய் பரவுகிறது என்றால், அந்த நோய் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எதனால் அந்த நோய் ஏற்படுகிறது, அந்த நோயைத் தடுக்கும் வழிகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, உண்மைத் தரவுகளின் அடிப்படையில் நோயை அணுகுவது அறிவியல். ஆனால், போலி அறிவியல் மூட நம்பிக்கைகளால் கட்டமைக்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்துவதே போலி அறிவியல். அதாவது, பகுத்தறிந்து ஒரு செய்தியைத் தெரிவிக்காமல், குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்த முயல்வதே போலி அறிவியல். மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் உண்மைத் தரவுகளை மழுங்கடிக்கும் வேலையைச் செய்கிறது போலி அறிவியல். அறிவியல் தன்னைக் கேள்வி களுக்கு உள்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும். அறிவியல்…