Author: admin

சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘கோவா’ தேர்வு எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation-COA)தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தை ()www.dte.tn.gov.in) விரிவாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்-4 தேர்வுக்கு யாரும் உரிய தொழில்நுட்பக்கல்வித்தகுதி…

Read More

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்று ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), ராஜஸ்​தான் ராயல்​ஸ்​(ஆர்​ஆர்) அணி​கள் மோதவுள்​ளன. பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. இந்த சீசனில் இது​வரை சொந்த மைதானத்தில் நடை​பெற்ற ஒரு போட்​டி​யில் கூட பெங்​களூரு அணி வெற்றி பெற​வில்​லை. எனவே, இன்று நடை​பெறும் போட்​டி​யில் ராஜஸ்​தானை வீழ்த்தி வெற்​றிக் கணக்கை பெங்​களூரு அணி தொடங்​கும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கின்​றனர். பெங்​களூரு அணி இது​வரை 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 5-ல் வெற்​றி, 3-ல் தோல்வி என 10 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. பெங்​களூரு மைதானத்​தில் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களில் குஜ​ராத், டெல்​லி, பஞ்​சாப் அணி​களிடம் அந்த அணி தோல்வி கண்​டுள்​ளது. ஆனால் வெளிமை​தானங்​களில் நடை​பெற்ற 5 ஆட்​டங்​களி​லும் அந்த அணி வெற்றி பெற்​றுள்​ளது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் உள்​ளூர் மைதானத்​தில் வெற்றி பெற்று கணக்​கைத் தொடங்​கு​வ​தில்…

Read More

சான் பெட்ரோ: கரீபியன் நாடான பெலீசுவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் (49) சுட்டுக் கொல்லப்பட்டார். கரீபியன் கடல் பகுதியில் பெலீசு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் கோரசோல் நகரில் இருந்து சான் பெட்ரோ நகருக்கு சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டினார். விமானம் சான் பெட்ரோ நகரில் தரையிறங்கக்கூடாது. வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அவர் மிரட்டல் விடுத்தார். ஆனால் விமானி ஹோவல் கிரேஞ்ச் மிரட்டலுக்கு அடிபணியாமல் சான் பெட்ரோ நகரை நோக்கி விமானத்தை இயக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அகின்யேலா டெய்லர், 3 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தினார். தான் விரும்பும் இடத்துக்கு விமானத்தை திருப்பவில்லை என்றால் அனைத்து…

Read More

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சண்முகர் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த கடந்த 2-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. மேலும், இரவும் சுவாமி, அம்மன்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சண்முகர் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சத்தில் (ருத்திரர்) வீதியுலா வந்து அருள் பாலித்தார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்ச…

Read More

சூர்யாவுக்கு முன்பே தனுஷும், தானும் சிக்ஸ் பேக் வைத்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ‘ரெட்ரோ’ விழாவில் நடிகர் சிவகுமார் பேசும் போது, “வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது” என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இடையே விவாதத்தை கிளப்பியது. பலரும் விக்ரம், விஷால் என ஒவ்வொரு நடிகரின் பெயரைக் கூறி அவர்தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து விஷால் பேசியுள்ளார். அதில், “முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தவர் தனுஷ்தான். வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ படத்தில் க்ளைமாக்ஸில் வைத்திருப்பார். அதன் பிறகு ‘சத்யம்’ படத்தின் நான் வைத்தேன். தொடர்ந்து ‘மதகஜராஜா’ படத்திலும் வைத்தேன். ஒருவேளை…

Read More

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30 முதல் மே 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஏப். 30 முதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி…

Read More

Last Updated : 28 Apr, 2025 07:34 AM Published : 28 Apr 2025 07:34 AM Last Updated : 28 Apr 2025 07:34 AM பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் குறித்து அந்த நீதிபதி ஒரு வரி கூட தனது தீர்ப்பில் எழுதவில்லை. இதற்கு முன்பும் இதே நீதிபதி இதே போன்ற தவறை செய்ததாக கூறிய முன்னி தேவி தனக்கு நிவாரணம்…

Read More

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது. இது இந்தியாவில் ப்ரீமியம் போன் பட்ஜெட்டில் வெளியாகும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் என தகவல். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டில் ஐபோன் எஸ்இ மாடல் போன் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அதன் 4-வது ஜெனரேஷனான எஸ்இ4 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு போன் பயனர்களை ஆப்பிள் ஐஓஎஸ் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 இன்ச் டிஸ்பிளே, ஏ18 ப்ராசஸர், 5ஜி இணைப்பு வசதி, அதிகபட்சமாக 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஐஓஸ் 18 இயங்குதளம், பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என தகவல். இந்தியாவில் இந்த போனின் விலை சுமார் 40,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்…

Read More

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்.16) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வு (கோவா – Certificate course in Computer on Office Automation-COA) மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜூன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஏப்.16-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவா’ தேர்வு தேர்ச்சி கட்டாயம்: தமிழக அரசு துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு (‘கோவா’) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குருப்-4 தேர்வில் வெற்றிபெற்று, பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்கள்…

Read More

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் சேர்ந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சாய் சுதர்ஷன் 39 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளுக்கு 84 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜாஸ் பட்லர் அரை சதம், வாஷிங்டன் சுந்தர் 13, ராகுல் டிவாட்டியா 9, ஷாருக் கான் 5 என குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது. 210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஜெய்ஸ்வாலும், வைபவ் சூர்யவன்ஷியும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 70, வைபவ் சூர்யவன்ஷி வெறும்…

Read More