நடிகர்கள் யாருமின்றி, படக்குழு, தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியின்றி முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு திரைப்படம் கன்னடத்தில் உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சித்தஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா மூர்த்தி. கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து இப்படத்தை நரசிம்மா உருவாக்கியுள்ளார். ’லவ் யூ’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.10 லட்சம் தானாம். அதுவுமே கூட மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. இசையமைப்பாளரோ, ஒளிப்பதிவாளரோ யாரும் கிடையாது. சென்சார் போர்டும் இப்படத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதால் இனி அடுத்தடுத்து ஏஐ படங்கள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் வெளியானால் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெரும் என்று இதனை உருவாக்கிய நரசிம்மா மூர்த்தி…
Author: admin
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நிர்வாகத்தின் தூண்கள், அரசின் கரங்களாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். தேசிய அளவில் தமிழகம் பல்வேறு வகையில் முதல் இடத்திலும், முன்னோடி மாநிலமாகவும் திகழ்வதற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உழைப்பு, சீரிய பங்களிப்பும் மிக முக்கிய காரணம். எனவே, அவர்களது நலன் கருதி தற்போது அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈட்டிய விடுப்பு: கரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு நிதிநிலையில் ஏற்பட்ட பெரும் சுமையால் அரசு…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்துவைத்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூனில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. சிறையில் இருந்தபோது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி…
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது ஏதாவது புதுமையான விஷயங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ‘ப்ராம்ப்ட்’ எனப்படும் கட்டளைகளை ஏஐயிடம் சொன்னால் போதும் அது வாக்கியங்களை அமைப்பது, ஒளிப்படங்களை உருவாக்குவது எனத் தொடங்கி தற்போது வீடியோவையும் உருவாக்கித் தருகிறது. அப்துல் கலாம் – ரத்தன் டாடா பேசிக் கொள்வது போலவும், ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது போலவும், பூனைக் கூட்டம் சுட்டித்தனம் செய்வது போலவும் எனக் கற்பனைக்கு எட்டும் விஷயங்களையெல்லாம் ஏஐயிடம் பேசி வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். அப்படி, உலகப் பிரபலமான மார்வெல் – டிசி சூப்பர் ஹீரோக்களைப் போல இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ அண்மையில் வைரலானது. இது பலரது வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பார்ப்பதற்குத் தத்ரூபமாக உண்மையானது போன்று அவை காட்சியளிப்பதால் மெய்யையும் பொய்யையும் பிரித்துப் பார்ப்பதில் பயனர்கள் குழம்பிப் போனார்கள். நெட்டிசன்களில் சிலர் இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு…
தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே வரும் கல்வியாண்டு்க்கான (2025-26) இலவச சேர்க்கைக்கு இணைதள விண்ணப்பப் பதிவு ஏப். 3-வது வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்,…
மும்பை: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்துக்கு நேற்று முன்தினம் வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் என்றும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்” என்றார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்கவைச் சேர்ந்த சங்கிலித் தொடர் துரித உணவு கடைகளான கேஎஃப்சி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்தனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேஎஃப்சி கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சமீப வாரங்களாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். பாகிஸ்தானின் தெற்குப் பகுதி துறைமுகநகரமான கராச்சி, கிழக்குப் பகுதி நகரமான லாகூர் மற்றும் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆயுதம் ஏந்தியவர்கள் கேஎஃப்சி கடைகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய 11 சம்பவங்கள் நடந்துள்ளன என போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வாரத்தில் லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கேஎஃப்சி ஊழியர், அடையாளம் தெரியாத நபரொருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று தன் பெயரை…
சென்னை: மடிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்.11-ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெறுகிறது. இதுகுறித்து, ஸ்ரீ ஐயப்பன் மண்டலி செயலாளர் ஆர்.மகாலிங்கம், ஸ்ரீ ஐயப்பன் கோயில் அறக்கட்டளை செயலாளர் ஆர்.வி.வீரபத்ரன் ஆகியோர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மடிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயில் கடந்த 1978-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி சபரிமலை தந்திரி செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ நீலகண்டரு தந்திரி மூலம் கட்டப்பட்டது. இந்நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏப்.11-ம் தேதி (நாளை மறுதினம்) காலை 8.27 மணி முதல் காலை 9.57 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சபரிமலை பரம்பரை பூசாரிகள்: சபரிமலையின் பரம்பரை பூசாரிகள் செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ கந்தரரு மோகனராரு தந்திரி, பிரம்மஸ்ரீ மகேஷ் தந்திரி ஆகியோரால் மகா கும்பாபிஷேகம்…
டொவினோ தாமஸ், சேரன் நடித்துள்ள ‘நரிவேட்டா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினா தாமஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நரிவேட்டா’. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சேரன் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். போலீஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் மே 16 அன்று வெளியாகிறது. ட்ரெய்ல்ர் எப்படி? – தங்கள் நிலத்துக்காக போராடும் பழங்குடியின மக்கள் – சிஸ்டம் / போலீஸ்/ அரசுக்கும் இடையிலான மோதலே படத்தின் அடிநாதம் என்று தெரிகிறது. காட்டை ஆக்கிரமித்திருப்பதாக கூறி பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் அவர்களிடம் சேரன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோடு தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறைகளையும், அராஜகங்களையும் காட்டுகிறது. இளம் போலீஸ்…
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, தமிழகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்திருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் பெயர், விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியேற்றும் பணியை தொடங்கினர். அந்த வகையில் தமிழகத்திலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னையில் 20 பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்தனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த 2 பாகிஸ்தானியர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனை…