கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சண்முகர் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த கடந்த 2-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. மேலும், இரவும் சுவாமி, அம்மன்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சண்முகர் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சத்தில் (ருத்திரர்) வீதியுலா வந்து அருள் பாலித்தார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்ச…
Author: admin
சூர்யாவுக்கு முன்பே தனுஷும், தானும் சிக்ஸ் பேக் வைத்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ‘ரெட்ரோ’ விழாவில் நடிகர் சிவகுமார் பேசும் போது, “வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது” என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இடையே விவாதத்தை கிளப்பியது. பலரும் விக்ரம், விஷால் என ஒவ்வொரு நடிகரின் பெயரைக் கூறி அவர்தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து விஷால் பேசியுள்ளார். அதில், “முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தவர் தனுஷ்தான். வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ படத்தில் க்ளைமாக்ஸில் வைத்திருப்பார். அதன் பிறகு ‘சத்யம்’ படத்தின் நான் வைத்தேன். தொடர்ந்து ‘மதகஜராஜா’ படத்திலும் வைத்தேன். ஒருவேளை…
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30 முதல் மே 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஏப். 30 முதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி…
Last Updated : 28 Apr, 2025 07:34 AM Published : 28 Apr 2025 07:34 AM Last Updated : 28 Apr 2025 07:34 AM பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் குறித்து அந்த நீதிபதி ஒரு வரி கூட தனது தீர்ப்பில் எழுதவில்லை. இதற்கு முன்பும் இதே நீதிபதி இதே போன்ற தவறை செய்ததாக கூறிய முன்னி தேவி தனக்கு நிவாரணம்…
சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது. இது இந்தியாவில் ப்ரீமியம் போன் பட்ஜெட்டில் வெளியாகும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் என தகவல். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டில் ஐபோன் எஸ்இ மாடல் போன் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அதன் 4-வது ஜெனரேஷனான எஸ்இ4 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு போன் பயனர்களை ஆப்பிள் ஐஓஎஸ் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 இன்ச் டிஸ்பிளே, ஏ18 ப்ராசஸர், 5ஜி இணைப்பு வசதி, அதிகபட்சமாக 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஐஓஸ் 18 இயங்குதளம், பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என தகவல். இந்தியாவில் இந்த போனின் விலை சுமார் 40,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்…
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்.16) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வு (கோவா – Certificate course in Computer on Office Automation-COA) மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜூன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஏப்.16-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவா’ தேர்வு தேர்ச்சி கட்டாயம்: தமிழக அரசு துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு (‘கோவா’) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குருப்-4 தேர்வில் வெற்றிபெற்று, பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்கள்…
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் சேர்ந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சாய் சுதர்ஷன் 39 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளுக்கு 84 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜாஸ் பட்லர் அரை சதம், வாஷிங்டன் சுந்தர் 13, ராகுல் டிவாட்டியா 9, ஷாருக் கான் 5 என குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது. 210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஜெய்ஸ்வாலும், வைபவ் சூர்யவன்ஷியும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 70, வைபவ் சூர்யவன்ஷி வெறும்…
புதுடெல்லி: விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஏசிஐ) தெரிவித்துள்ளது. உலகின் வேகமான சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் விமானப் பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவுக்கான மதிப்பீடான 12 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு மிகப் பெரிய விமானச் சந்தை உள்ளது. இந்நிலையில் ஏசிஐ அமைப்பின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ஸ்டெஃபனோ பரோன்சி, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும் விமானப் பயணிகள் போக்குவரத்தில் ஒரு வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் விமானப் பயணிகள் வளர்ச்சி விகிதம் 2026-ல் 10.5% ஆகவும் 2027-ல் 10.3% ஆகவும் இருக்கும் என ஏசிஐ…
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அறுபத்து மூவர் உற்சவம் இன்று நடைபெற உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளன்று பவளக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர் வலம் வந்து அருள்பாலித்தார். பின்னர், அம்மை மயில் வடிவில் காட்சி தருதல் நிகழ்ச்சியும், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகர் வீதியுலா நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து அதிகார நந்தி, சவுடல் விமானம் உள்ளிட்ட வாகனங்களில் மாட வீதிகளில் சுவாமி உலா வந்தார். இந்நிலையில், பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு திருத்தேரில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர். காலை 7.30 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. 96…
பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஷாஜி கருண் காலமானார். அவருக்கு வயது 73. 1989ஆம் ஆண்டு வெளியான ‘பிறவி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஷாஜி கருண். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டது. இது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகளையும் வென்றது. 2011ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஷாஜி கருண் மலையாள சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைத்த புகழ்பெற்ற கலைஞர் ஆவார். சுமார் 40 படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ‘பிறவி’, ‘ஸ்வாஹம்’, ‘வனபிரஸ்தம்’, ‘நிஷாத்’, ‘குட்டி ஸ்ராங்கு’ மற்றும் ‘ஸ்வாபானம்’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷாஜி கருண் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு…