ஸ்ரீநகர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் என்ஐஏ சார்பில் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர். தாக்குதலின்போது அவர்களோடு இருந்த குடும்பத்தினரிடம் என்ஐஏ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதற்காக அந்தந்த மாநிலங்களில் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரிக்கின்றனர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில்…
Author: admin
Last Updated : 21 Feb, 2025 11:23 AM Published : 21 Feb 2025 11:23 AM Last Updated : 21 Feb 2025 11:23 AM சென்னை: இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16e என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE4 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு மாடலை வெளியிட்டு சர்ப்ரைஸ் தந்துள்ளது. உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் தன்னகத்தே கொண்டுள்ளது. கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை…
சென்னை: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.15) நிறைவு பெறுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதன்படி தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் (ஏப்.15) நிறைவு பெறுகிறது. இறுதி நாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல்…
லக்னோ: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி கண்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்தார். டெல்லி, லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்தினம் லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. எய்டன் மார்கிரம் 52, மிட்செல் மார்ஷ் 45, ஆயுஷ் பதோனி 36, டேவிட் மில்லர் 14, நிக்கோலஸ் பூரன் 9, அப்துல் சமத் 2 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், சமீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி…
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாத ஆப்கானியர்கள் அல்லது ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்துள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதிக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாடு எச்சரித்திருந்தது. தவறினால் சம்மந்தப்பட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தது. பின்பு இந்தக் காலக்கெடு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தலால் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏப்ரல் 30 என்பது இறுதிக்கெடு. பாகிஸ்தானில் தங்குவதற்கு தேவையான செல்லத்தக்க விசாக்களை வைத்திருப்பவர்களே இங்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தார். பாகிஸ்தானின் இந்த வெளியேற்றும் நடவடிக்கை, கடந்த 2023-ம் ஆண்டின் பிற்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நாட்டில் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர்…
கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூத்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன்கள் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் 7-ம் நாளான கடந்த 8-ம் தேதி மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சமாக (ருத்திரர்) எழுந்தருளி வீதியுலாவும், வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு பச்சை மலர்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.…
சிம்புவுடன் இணைந்து நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது நாயகனாக நடித்து வருவதால், சிம்புவுக்காக ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டது. இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனிடையே, ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்துக்காக அளித்த பேட்டியில், சிம்புவுடன் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். சிம்பு கேட்டால் ‘நோ’ சொல்லமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்துக்காக புதிய படம் ஒன்றை தாமதமாக தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிம்புவின் மீது மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளார் சந்தானம் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், சின்னத்திரையில் இருந்த சந்தானத்தை ‘வல்லவன்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு என்பது நினைவுகூரத்தக்கது.
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில்,நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக…
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தாக்கு தல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூரில் உள்ள காஷ்மீர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் – ஓஜிடபிள்யூ) உதவி செய்துள்ளதை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம், உணவு போன்ற வசதிகளை செய்து கொடுப்பவர்களை ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கின்றனர். இதுகுறித்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் 15 பேர் உதவியது எலக்ட்ரானிக் கருவிகளை ஆய்வு செய்த போது தெரிய வந்தது. அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை பிடிபட்டுள்ளனர். மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகிறோம். தாக்குதல் நடந்த 22-ம் தேதி வரை அவர்களுடைய செல்போன் உட்பட எலக்ட்ரானிக் கருவிகள் இயங்கியுள்ளன. அதன்பிறகு அவை அணைக்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற 10 பேரிடம் என்ஐஏ, காஷ்மீர் போலீஸ், புலனாய்வு பிரிவு, ரா போன்ற அமைப்பினர் தீவிர…
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரித்துள்ளது என சிஐஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 4-வது சர்வதேச கருத்தரங்கு, ‘தி ஏஐ இந்தியா கண்காட்சி 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதில் ‘செயற்கை நுண்ணறிவின் போக்கு மற்றும் எதிர்கால தாக்கம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை பிராட்டிவிட்டி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனமும், சிஐஐ அமைப்பும் இணைந்து தயாரித்தது. இதில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரிக்கிறது. இந்திய தொழில்களில், வெகு விரைவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக அதிகரிக்கவுள்ளது. ஏஐ பயன்பாட்டை தங்கள் நிறுவனங்களில் விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டருப்பதாக, நாட்டில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக 10-ல் 6 நிறுவனங்கள் (59 சதவீதம்) தெரிவித்துள்ளன. 38 சதவீத நிறுவனங்கள்…