புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தாக்கு தல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூரில் உள்ள காஷ்மீர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் – ஓஜிடபிள்யூ) உதவி செய்துள்ளதை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம், உணவு போன்ற வசதிகளை செய்து கொடுப்பவர்களை ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கின்றனர். இதுகுறித்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் 15 பேர் உதவியது எலக்ட்ரானிக் கருவிகளை ஆய்வு செய்த போது தெரிய வந்தது. அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை பிடிபட்டுள்ளனர். மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகிறோம். தாக்குதல் நடந்த 22-ம் தேதி வரை அவர்களுடைய செல்போன் உட்பட எலக்ட்ரானிக் கருவிகள் இயங்கியுள்ளன. அதன்பிறகு அவை அணைக்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற 10 பேரிடம் என்ஐஏ, காஷ்மீர் போலீஸ், புலனாய்வு பிரிவு, ரா போன்ற அமைப்பினர் தீவிர…
Author: admin
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரித்துள்ளது என சிஐஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 4-வது சர்வதேச கருத்தரங்கு, ‘தி ஏஐ இந்தியா கண்காட்சி 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதில் ‘செயற்கை நுண்ணறிவின் போக்கு மற்றும் எதிர்கால தாக்கம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை பிராட்டிவிட்டி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனமும், சிஐஐ அமைப்பும் இணைந்து தயாரித்தது. இதில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரிக்கிறது. இந்திய தொழில்களில், வெகு விரைவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக அதிகரிக்கவுள்ளது. ஏஐ பயன்பாட்டை தங்கள் நிறுவனங்களில் விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டருப்பதாக, நாட்டில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக 10-ல் 6 நிறுவனங்கள் (59 சதவீதம்) தெரிவித்துள்ளன. 38 சதவீத நிறுவனங்கள்…
சென்னை: “திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 37 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் கே.செல்லூர் ராஜூ மதுரை விளாங்குடியில் இருபாலருக்கான கலைக் கல்லூரி தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர்கோவி.செழியன் பதிலளித்து பேசும்போது, “மதுரை மாவட்டத்தில் தற்போது 3 அரசு மற்றும் 21 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. விளாங்குடி அருகிலேயே அரசுக் கல்லூரிகள் இருப்பதால் அந்த பகுதியில் புதிய கல்லூரி திறக்க தேவை எழவில்லை” என்றார். அப்போது, அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, “விளாங்குடியில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்படும் என்று பேரவையில் ஏற்கனவே வாக்குறுதி தரப்பட்டுள்ளது” என்றார். அதற்கு அமைச்சர் கோவி.செழியன், “கடந்த அதிமுக ஆட்சியில் 2011-16-ம் ஆண்டுகளில் 18, பின்பு…
ஹைதராபாத்: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். மேலும், போட்டி தொடங்கும் முன்பு தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்திருந்தது. மேலும், போட்டியின் முடிவில் பயன்படுத்தப்படும் பட்டாசு வெடிக்கும் கொண்டாட்டங்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
வாஷிங்டன்: “பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்.” என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய வருகை குறித்து தெரிவித்துள்ளார். தன்னுடன் பேசியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவினை இணைத்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “பிரதமர் மோடியுடன் பேசியது மிகவும் பெருமைக்குரியது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்குடன் உரையாடியது தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவொன்றில், “எலான் மஸ்குடன் பேசினேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன்னில் நாங்கள் சந்தித்தபோது பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போது பேசினோம். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைகளில் ஒத்துழைப்புகளுக்கான மகத்தான ஆற்றல்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.” என்று தெரிவித்திருந்தார். இந்தியா…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை (ஏப்ரல் 11) மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பு இருந்து பங்குனி உத்திரம் நாளில் ஶ்ரீரெங்கம் ரெங்கமன்னாரை மணம் புரிந்தார் என்பது கோயில் வரலாறு. ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் கருட சேவை, கோவர்த்தனகிரி கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு உற்சவம் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை(ஏப்ரல் 10) காலை 7.05 மணிக்கு செப்புத் தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம்…
‘ஜெயிலர் 2’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஃபகத் ஃபாசில். நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30% காட்சிகளை முடித்துவிட்டது படக்குழு. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா என முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். தற்போது இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினி – ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. முன்னதாக இருவரும் ‘வேட்டையன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘ஜெயிலர்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால், இதன் 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கி இருக்கிறது. இதனை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தது அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சலுகை அளித்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்புகள் எல்லாமே எங்களிடம் இருந்து பணம் பெற்று செய்யக்கூடியவை. ஊதிய மாற்றத்தின்போது வழங்காத 21 மாத ஊதிய நிலுவைத் தொகை, கடந்த ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு நிலுவைத் தொகை வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று, தேர்தல் வாக்குறுதியில் கூறியதை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக நீட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியருக்கு பதிலி ஆசிரியர்கள் நியமிக்க அறிவிப்பு இல்லை. அரசு துறைகளில் 4.5…
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல். தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 16 யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 63 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், சுனோ நியூஸ், ஜியோ நியோ உள்ளிட்ட பாகிஸ்தான் நாட்டு ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதே போல இர்ஷாத் பட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் பாரூக் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ரெஃபரென்ஸ், சாமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட் மற்றும் ராஸி நாமா உள்ளிட்ட சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த…
சென்னை: ஒரே மாதத்தில் சுமார் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை இந்தியாவில் முடக்கி உள்ளது மெட்டா நிறுவனம். பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதளமாக அறியப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் பல கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் ஒரே மாதத்தில் சுமார் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது மெட்டா நிறுவனம். தங்கள் சமூக வலைதளத்தில் உள்ள பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மெட்டா மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்ட…