சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கான 41-வது ஆண்டு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் 28-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அன்றைய தினமே தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் செயலாளர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசனை 9382207524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Author: admin
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாகப் பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று பகல் 12.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டன. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் ஓடி வந்து நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. மேலும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு…
தேனி: மலையாள புத்தாண்டு தினமான விஷு (சித்திரை 1) அன்று சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு (சுவாமி புனித நீராடல்) திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக ஏப்.1-ம் தேதி கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1, 2, 4, 6, 8 கிராம்களில் டாலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலையாள வருடப் பிறப்பான விஷு பண்டிகை தினமான ஏப்.14-ம் தேதி முதல் இந்த டாலர்கள் விற்பனைக்கு வருகிறது. இது குறித்து தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், ”கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படம் பார்த்துவிட்டு படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோர்ட்’. இப்படத்தினை சூர்யா பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு பூங்கொத்து அனுப்பி பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை படக்குழுவினர் பலர் தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் ராம் ஜெகதீஷ், தயாரிப்பாளர் பிரசாந்தி, தயாரிப்பாளர் நானி, ப்ரியதர்ஷி, சிவாஜி, ரோகிணி, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி மற்றும் சாய் குமார் ஆகியோருக்கு சூர்யா தரப்பில் இருந்து பூங்கொத்து அனுப்பப்பட்டுள்ளது. ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் ப்ரியத்ர்ஷி நடிப்பில் வெளியான படம் ‘கோர்ட்’. போக்சோ சட்டத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. சுமார் ரூ.50 கோடி அளவுக்கு வசூல் செய்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை: வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஊடகம் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் திருமாவளவன், சீமான், சித்தராமையா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. உலகளவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தலைமையேற்று நடத்தும் பெரும்பாலான அமைப்புகள் பாகிஸ்தானில்…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி பாதுகாப்பு படைகளின் தலைவர் அணில் சவுகான் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று விளக்கியிருந்தார். இந்நிலையில், அதற்கு அடுத்தநாளில் பிரதமருடனான இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல், பஹல்காம் தாக்குதல் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு மூன்று நாட்களுக்கு பின்பு இன்றைய சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன? ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22-ம் தேதி நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு…
கோவை: தொழில் நகரான கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகிவரும் நிலையில், இந்தியாவிலேயே 2-ம் நிலை நகரங்களில் உலகளாவிய திறன் மையங்கள் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியா உலகளாவிய திறன் மையமாக (குளோபல் கெபாசிட்டி சென்டர்ஸ்-ஜி.சி.சி.) மாறி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1,285 உலகளாவிய திறன் மையங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது ஜி.சி.சி-க்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 19 லட்சம் பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் எம்.எல்., டேட்டா சயின்ஸ், சைபர் பாதுகாப்பு, பிளாக்செயின் தொழில்நுட்பங்களில் திறன்மிக்க பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்திய அளவில் 800-க்கும் மேற்பட்ட ஜி.சி.சி. மையங்களுடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை சென்னையில் 305 ஜி.சி.சி. மையங்கள் உள்ளன. சென்னைக்கு வெளியே கோவையில் 25…
நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் சரோஜா தலைமை வகித்தார். தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் பேராசிரியர் முனைவர். வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் போட்டிக்கு தயாராக வேண்டிய விதம், எழுதிப் பார்க்க வேண்டிய மாதிரித் தேர்வுகள் ஆகியவை பற்றி விளக்கமாக பேசினார். தனது உரையின்போது கேட்ட கேள்விகளுக்கு சரியாக விடை அளித்த மாணவர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு பயனுள்ள நூலான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கைடுகளை வழங்கினார். இது குறித்து பேராசிரியர் வெங்கடேசன் கூறியது: ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டி நூல் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரித்த நூல் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் போட்டித் தேர்வு பயிற்சியில் நீண்ட அனுபவம்…
கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கியமானது 3 துறைகள். பேட் டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலுமே சிறந்து விளங்கக் கூடிய அணிகள் தான் எப்போதும் வெற்றிக் கனியைச் சுவைக்கின்றன. ஆனால், சில போட்டிகளில் மோசமான ஃபீல்டிங் காரணமாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களைப் பெற்றுள்ள சிறந்த அணிகள் கூட தோல்வியைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக எதிரணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்களின் கேட்ச்களை கோட்டை விடுவது அந்தப் போட்டியின் முடிவையே மாற்றி அமைக்கக்கூடும். அவ்வாறு கேட்ச்களை கோட்டை விடுவதால் சுதாரித்துக் கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்கள் அரை சதம், சதம் என விளாசி போட்டியை தங்கள் வசம் எடுத்துச் சென்றுவிடுவர். அந்த அளவுக்கு கேட்ச்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரிக்கெட் புத்தகத்தில் கேட்ச்களால் போட்டியை வெல்ல முடியும் (கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்) என்ற சொலவடை உண்டு. அதனால்தான் பயிற்சியின் போது தனியாக வீரர்களுக்கு கேட்ச் செய்வதற்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், நடப்பு…
கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானி டாக்டர் மது சூதன் கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் பிறந்தவர். வாராணசி ஐஐடி.,யில் பி.டெக் பட்டம் பெற்றார். முதுநிலை பட்டம் மற்றும் பி.எச்.டி ஆய்வுகளை மாசசூசட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் (எம்ஐடி) முடித்தார். சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களில் இவர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2013-ம் ஆண்டு இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வான் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 55 கான்கிரி -இ என்ற தொலைதூர கிரகம் பூமியைவிட பெரியது. அதில் கார்பன் அதிகளவில் இருக்கலாம் என இவரது ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. வாஸ்ப்-19பி என்ற கிரகத்தில் டைட்டானியம் ஆக்ஸைடு உள்ளதையும் இவரது தலைமையிலான குழு கண்டுபிடித்தது. கடந்த 2020-ம் ஆண்டு கே2-18பி என்ற கிரகத்தை ஆய்வு செய்து அதன் மேற்பரப்பில்…