Author: admin

ஸ்ரீநகர்: “ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இனியொரு ’பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி ஒவ்வொரு முறையும் பரிந்துரைத்தவன். ஆனால், இப்போது நடந்த தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம். நாம் அவர்களுக்கு நீதி செய்ய வேண்டாமா? பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இன்று தேசம் விரும்புகிறது. பஹல்காம் தாக்குதல் போல் இனியொருமுறை நடக்காத அளவுக்கு அந்தத் தாக்குதல் இருக்க வேண்டும் என்று…

Read More

சென்னை: இந்தியாவில் ‘CMF போன் 2 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது நத்திங் நிறுவனம். முதல் முறையாக இந்த போனுடன் சார்ஜரையும் வழங்குகிறது நத்திங். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டில் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்த சூழலில் மலிவு விலையிலான போனை சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கில் ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை நத்திங் நிறுவனம் 2023-ல் தொடங்கியது. இந்த பிராண்டின் கீழ் கடந்த ஆண்டு…

Read More

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய இறுதி விடைக்குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே…

Read More

சென்னை: உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக உள்ள ஒவ்வொரு தேசத்தின் வீடுகளிலும் சச்சின் டெண்டுல்கர் எனும் வீரரின் பெயரை அறிந்திருப்பார்கள். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சினுக்கு இன்று பிறந்தநாள். 52-வது வயதை அவர் எட்டியுள்ளார். கிரிக்கெட்டில் களத்தில் ஓய்வு பெறும் வரை ரன் சேர்ப்பதில் பிஸியாக இருந்தவர். கடந்த 1989-ல் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் நடந்த அனைத்தும் சாதனை. அவரது ஆட்ட நேர்த்தி மற்றும் தான் நேசித்த விளையாட்டுக்காக வெளிக்காட்டிய அர்ப்பணிப்பு என எல்லாமும் இதில் அடங்கும். இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் மற்றொரு ஜாம்பவானான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் உடனான தனது தனிப்பட்ட உரையாடலை பேட்டி ஒன்றில் இப்போது பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு கிரிக்கெட்டை ஜாம்பவான்களும் என்ன பேசினார்கள் என்பதை பார்ப்போம். “அப்போது நாங்கள் இருவரும் பேட்டிங் கலை குறித்து பேசி இருந்தோம். பந்து வீச்சாளரின் ரிஸ்ட்…

Read More

கீவ்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும், 19 தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி உள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “முதன்மைத் தளபதி சிர்ஸ்கியின் காலை 6 மணி அறிக்கையின்படி, பல்வேறு முன்னணி திசைகளில் இருந்த ஏற்கனவே ரஷ்யாவின் 59 குண்டுவீச்சுத் தாக்குதல்களும், அந்நாட்டுப் படை பிரிவுகளின் 5 தாக்குதல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்டாரோபில்ஸ்க் செயல்பாட்டுக் குழுவும் ஒரு தாக்குதலை பதிவு செய்துள்ளது. டொனேட்ஸ்க் ஒடிஜி பிரிவில் மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன. எதிரிகள் ஏராளமான எஃப்பிவி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். குர்ஸ்கி பிராந்தியத்தில், ரஷ்யப் படைகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது, தாக்குதலுக்கு ட்ரோன்களையும் பயன்படுத்தியுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போர்ச் சூழலக்கு ஏற்ப உக்ரைன் வீரர்கள் தகுந்த…

Read More

பழநி: வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு பழநியில் நேற்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி கிரிவீதிகளில் பல்வேறு வாகனங்களில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவு 9 மணியளவில் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி, கிரிவீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சியில், அறநிலையத் துறை துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலர்கள் பாலசுப்பிரமணி, அன்னபூரணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. முன்னதாக, அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல்,…

Read More

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டு வார வசூல் என்ன என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் ‘குட் பேட் அக்லி’ நல்ல வசூல் செய்து வருகிறது. மேலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அவ்வப்போது வசூல் நிலவரத்தை அறிவித்து வருகிறார்கள். தற்போது 2 வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.172.3 கோடி வசூல் செய்திருப்பதாக தமிழக விநியோகஸ்தர் ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகமாக்கி உள்ளது. ‘விஸ்வாசம்’ பட வசூலை முறியடித்து, தமிழகத்தில் அதிக வசூல் செய்த அஜித் படங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’. அத்துடன், 2025-ல் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலும் முதலிடம் வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக, உலக அளவில் ரூ.250 கோடி வசூலை இப்படம் நெருங்கியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இதில் த்ரிஷா, சிம்ரன்,…

Read More

சென்னை: உழைப்பாளர் தினத்தையொட்டி, மே 1-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி மூடி வைக்க வேண்டும். அன்றை தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், அன்றைய தினத்தில் பார்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக மே 1-ம் தேதி அனைத்து மாவட்டங்களுக்கும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

புதுடெல்லி: ஓடிடி, சமூக வலைதளங்களில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, பத்திரிகையாளரும், முன்னாள் தகவல் ஆணையருமான உதய் மஹுர்கர் மற்றும் பிறர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று (ஏப்.28) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏஜி மாஷிஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கும், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆல்ட்பாலாஜி, முபி, உல்லு டிஜிட்டல் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கும், எக்ஸ் கார்ப், கூகுள், மெட்டா இன்க், ஆப்பிள் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மனு விவரம்: ஓடிடி, சமூக வலைதள ஆபாசம் தொடர்பான மனுவில், “முன்பு தனிநபர் தவறாக இருந்த ஒன்று, இன்று பரந்துபட்ட பிரச்சினையாகி உள்ளது. சமூக வலைதளம் தொடங்கி ஓடிடி வரை இன்று எல்லா டிஜிட்டல் தளங்களிலும் இந்த வன்முறை ஊடுருவியுள்ளது. இதை…

Read More

புதுடெல்லி: பாரம்பரிய முறையில் இருந்து டிஜிட்டலுக்கு ஊடகங்கள் மாற ஊடகத் துறைக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். Storyboard18-DNPA மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், “பாரம்பரிய ஊடகங்கள், புதிய யுக மாற்றத்துக்கு ஏற்ப அவை தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இளைய தலைமுறையினர், பாரம்பரிய ஊடகங்களிலிருந்து டிஜிட்டல் ஊடகங்களுக்கு முற்றிலுமாக மாறிவிட்டனர். இதை கருத்தில் கொண்டு பாரம்பரிய ஊடகங்கள், டிஜிட்டலுக்கு மாறும்போது அவை வேலைவாய்ப்பு, படைப்பாற்றல், பதிப்புரிமை சிக்கல்கள், உள்ளடக்க படைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு நியாயமான இழப்பீட்டை உறுதி செய்தல் தொடர்பாக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த மாற்றத்தின் போது தேவைப்படும் எந்தவொரு ஆதரவையும் வழங்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்” என தெரிவித்தார். டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (DNPA) இந்தியா முழுவதும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து 20…

Read More