Author: admin

நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் சரோஜா தலைமை வகித்தார். தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் பேராசிரியர் முனைவர். வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் போட்டிக்கு தயாராக வேண்டிய விதம், எழுதிப் பார்க்க வேண்டிய மாதிரித் தேர்வுகள் ஆகியவை பற்றி விளக்கமாக பேசினார். தனது உரையின்போது கேட்ட கேள்விகளுக்கு சரியாக விடை அளித்த மாணவர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு பயனுள்ள நூலான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கைடுகளை வழங்கினார். இது குறித்து பேராசிரியர் வெங்கடேசன் கூறியது: ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டி நூல் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரித்த நூல் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் போட்டித் தேர்வு பயிற்சியில் நீண்ட அனுபவம்…

Read More

கிரிக்​கெட் போட்​டிகளில் மிக​வும் முக்​கிய​மானது 3 துறை​கள். பேட் டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் ஆகிய 3 துறைகளி​லுமே சிறந்து விளங்​கக் கூடிய அணி​கள் தான் எப்​போதும் வெற்​றிக் கனியைச் சுவைக்​கின்​றன. ஆனால், சில போட்​டிகளில் மோச​மான ஃபீல்​டிங் காரண​மாக மிகச் சிறந்த பேட்​ஸ்​மேன்​கள், பந்​து​வீச்​சாளர்​களைப் பெற்​றுள்ள சிறந்த அணி​கள் கூட தோல்​வியைச் சந்​திக்க நேரிடும். குறிப்​பாக எதிரணி​களைச் சேர்ந்த முக்​கிய வீரர்​களின் கேட்ச்​களை கோட்டை விடு​வது அந்​தப் போட்​டி​யின் முடிவையே மாற்றி அமைக்​கக்​கூடும். அவ்​வாறு கேட்ச்​களை கோட்டை விடு​வ​தால் சுதா​ரித்​துக் கொண்டு விளை​யாடும் பேட்​ஸ்​மேன்​கள் அரை சதம், சதம் என விளாசி போட்​டியை தங்கள் வசம் எடுத்​துச் சென்​று​விடு​வர். அந்த அளவுக்கு கேட்ச்​கள் மிக முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை. கிரிக்​கெட் புத்​தகத்​தில் கேட்ச்​களால் போட்​டியை வெல்ல முடி​யும் ​(கேட்ச்​சஸ் வின் மேட்ச்​சஸ்) என்ற சொல​வடை உண்​டு. அதனால்​தான் பயிற்சியின் போது தனி​யாக வீரர்​களுக்கு கேட்ச் செய்​வதற்கு தீவிர பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. ஆனால், நடப்பு…

Read More

கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானி டாக்டர் மது சூதன் கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் பிறந்தவர். வாராணசி ஐஐடி.,யில் பி.டெக் பட்டம் பெற்றார். முதுநிலை பட்டம் மற்றும் பி.எச்.டி ஆய்வுகளை மாசசூசட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் (எம்ஐடி) முடித்தார். சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களில் இவர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2013-ம் ஆண்டு இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வான் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 55 கான்கிரி -இ என்ற தொலைதூர கிரகம் பூமியைவிட பெரியது. அதில் கார்பன் அதிகளவில் இருக்கலாம் என இவரது ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. வாஸ்ப்-19பி என்ற கிரகத்தில் டைட்டானியம் ஆக்ஸைடு உள்ளதையும் இவரது தலைமையிலான குழு கண்டுபிடித்தது. கடந்த 2020-ம் ஆண்டு கே2-18பி என்ற கிரகத்தை ஆய்வு செய்து அதன் மேற்பரப்பில்…

Read More

மதுரை: கோயில் விழாக்களில் சாதி பெயர் குறிப்பிடக் கூடாது என அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு 4 வாரம் இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில பொதுச்செயலர் ஆறுமுக நயினார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், கோயில் திருவிழாக்களில் குறிப்பிட்ட சாதியின் பெயர் மற்றும் சமுதாய குழுக்களின் பெயர்கள் குறிப்பிடக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அடிப்படையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் மற்றும் பாபநாசம் சுவாமி கோயில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்கள் அச்சிடப்படாது என கோயில் செயல் அலுவலர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து கோயில் விழாக்களிலும் சாதி, சமுதாய குழுக்களின் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் பொதுவான உத்தரவு பிறப்பிக்கவில்லை. குறிப்பிட்ட கோயில்…

Read More

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா உடன் மோதல் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பில் சுந்தர்.சி – நயன்தாரா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக இருவருமே விளக்கம் அளிக்காமல் இருந்தனர். தற்போது ‘கேங்கர்ஸ்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். நயன்தாரா உடன் மோதலா என்ற கேள்விக்கு சுந்தர்.சி, “அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. எதனால் அப்படியொரு செய்தி பரவியது என்று தெரியவில்லை. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. முதலில் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதே வேளையில் ‘கேங்கர்ஸ்’ படத்தின் பணிகளும் இருந்தது. ஆகையால் சென்னையிலே படப்பிடிப்பை தொடங்கிவிட்டோம். நயன்தாரா ரொம்ப அர்ப்பணிப்பான நடிகை. அரை மணி நேரம் படப்பிடிப்பு தாமதமானால், கேரவேன் செல்லுங்கள் என்பேன். இல்லை சார்… இங்கேயே…

Read More

கோவை: “தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது,” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டத்துக்கு ஆளான வனத்துறை அமைச்சர் பொன்முடியும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது செய்திருக்கும் அமைச்சரவை மாற்றம் வழக்கமானது அல்ல. இந்த மாற்றம், முதல்வர் ஸ்டாலினின் விருப்பமும் அல்ல. நீதிமன்றங்களும், தமிழக மக்களும் அளித்த கடும் நெருக்கடியால், வேறு வழியின்றி, செந்தில் பாலாஜியையும் பொன்முடியையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி உள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி, ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு பலரிடம் பணம் வாங்கியதை அவரே…

Read More

ஸ்ரீநகர்: “ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இனியொரு ’பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி ஒவ்வொரு முறையும் பரிந்துரைத்தவன். ஆனால், இப்போது நடந்த தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம். நாம் அவர்களுக்கு நீதி செய்ய வேண்டாமா? பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இன்று தேசம் விரும்புகிறது. பஹல்காம் தாக்குதல் போல் இனியொருமுறை நடக்காத அளவுக்கு அந்தத் தாக்குதல் இருக்க வேண்டும் என்று…

Read More

சென்னை: இந்தியாவில் ‘CMF போன் 2 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது நத்திங் நிறுவனம். முதல் முறையாக இந்த போனுடன் சார்ஜரையும் வழங்குகிறது நத்திங். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டில் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்த சூழலில் மலிவு விலையிலான போனை சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கில் ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை நத்திங் நிறுவனம் 2023-ல் தொடங்கியது. இந்த பிராண்டின் கீழ் கடந்த ஆண்டு…

Read More

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய இறுதி விடைக்குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே…

Read More

சென்னை: உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக உள்ள ஒவ்வொரு தேசத்தின் வீடுகளிலும் சச்சின் டெண்டுல்கர் எனும் வீரரின் பெயரை அறிந்திருப்பார்கள். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சினுக்கு இன்று பிறந்தநாள். 52-வது வயதை அவர் எட்டியுள்ளார். கிரிக்கெட்டில் களத்தில் ஓய்வு பெறும் வரை ரன் சேர்ப்பதில் பிஸியாக இருந்தவர். கடந்த 1989-ல் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் நடந்த அனைத்தும் சாதனை. அவரது ஆட்ட நேர்த்தி மற்றும் தான் நேசித்த விளையாட்டுக்காக வெளிக்காட்டிய அர்ப்பணிப்பு என எல்லாமும் இதில் அடங்கும். இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் மற்றொரு ஜாம்பவானான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் உடனான தனது தனிப்பட்ட உரையாடலை பேட்டி ஒன்றில் இப்போது பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு கிரிக்கெட்டை ஜாம்பவான்களும் என்ன பேசினார்கள் என்பதை பார்ப்போம். “அப்போது நாங்கள் இருவரும் பேட்டிங் கலை குறித்து பேசி இருந்தோம். பந்து வீச்சாளரின் ரிஸ்ட்…

Read More