Author: admin

விஜய்யின் ‘சச்சின்’ தோல்விப் படமா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் தாணு பதிலளித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய், ஜெனிலியா, சந்தானம், வடிவேலு, பிபாஷா பாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் மறுவெளியீட்டிலும் மாபெரும் வசூல் சாதனை செய்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் நடன இயக்குநர் ஷோபி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இதில் தாணு பேசும் போது, “‘திருப்பாச்சி’, ‘மதுர’ போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு மாற்றத்திற்காக விஜய்யுடன் கலந்துரையாடும் போது இயக்குநர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் ‘குஷி’ போன்ற கதை ஒன்றை கூறினார். நீங்கள் கேட்கிறீர்களா என்று கேட்டேன். அதன் பிறகு இயக்குநர் ஜான் மகேந்திரன் விஜய்யிடம்…

Read More

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உட்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியர்கள் முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயர்வு வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைந்தபட்சமாக ரூ.1300, அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம்…

Read More

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்று 27-ம் தேதி இரவுக்குள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என ஹைதராபாத் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக டிஜிபி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரில் 213 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் சுற்றுலா விசா, சிலர் மருத்துவ விசாக்களிலும் வந்து தங்கி உள்ளனர். இவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், இன்று 27-ம் தேதி இரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் இருந்து அந்த 213 பேருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வெறும் 4 குடும்பத்தினர் மட்டுமே ஹைதராபாத்தில் தங்கி உள்ளனர். இவர்களும் இன்று இரவுக்குள் பாகிஸ்தான் செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Read More

கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT சர்வரையே நெட்டிசன்கள் திணற வைத்துள்ள நிலையில் ‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் நீக்கமற பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி வீட்டின் செல்லப் பிராணி படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். ChatGPTயின் GPT 4o வெர்சன் ஏஐ ஜெனரேட்டர் இந்த கிபிலி பாணி படங்களை நொடிப் பொழுதில் ஜெனரேட் செய்து தருவதால் அது பலருக்கும் பொழுதுபோக்காக மாறியுள்ளது. இந்த அம்சத்தை பிரீமியம் செலுத்தியே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை முதலில் இருந்தது. ஆனால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கவே ஃப்ரீ யூஸர்ஸுக்கும் இந்த சேவையை நீட்டிதது ஓபன் ஏஐ. இந்நிலையில்…

Read More

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது புதிய சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து அனைத்து ஊடகங்களும் செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை உடன்பாட்டுத் தொனியில் எச்சரிக்கும் விதமாக சில கருத்துகளைக் கூறியிருப்பது வைரலானது. ஐபிஎல்-ன் இளம் வீரராக அடியெடுத்து வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி, அன்று தன் முதல் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே லக்னோவுக்கு எதிராக சிக்ஸருக்கு அனுப்பி அசத்தினார். அதுவும் அனுபவ பவுலர் ஷர்துல் தாக்கூரை அலட்சியமாக தூக்கி சிக்ஸருக்கு அனுப்புகிறார் என்றால் இவர் கையில் இன்னும் எத்தனை பவுலர்கள் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகின்றனரோ என்றே பேச்சாக இருந்து வருகிறது. இவரை மட்டுமல்ல ஷர்துலை விடவும் வேகமாக வீசும் ஆவேஷ் கான் பந்துக்கும் சிக்ஸர்தான் பதில். 34 ரன்களை அச்சமற்ற விதத்தில் ஆக்ரோஷமாக ஆடும் அவரது ஃப்ரீஸ்டைல் விரேந்திர சேவாக்கை நினைவூட்டி இருக்கலாம். ஆனால், சேவாக்…

Read More

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப் தெரிவித்திருப்பது அந்நாட்டின் ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸ் விவாதத்தில் பங்கேற்ற குவாஜா எம்.ஆசிப்பிடம், “இந்த பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் அமைச்சர், “கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காக நாங்கள் இதைச் செய்தோம். அமெரிக்காவுக்காக மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகள் மற்றும் இங்கிலாந்துக்காகவும் நாங்கள் இந்த மோசமான வேலையை செய்து வருகிறோம். அது ஒரு தவறு. பாகிஸ்தான் அதனால் பாதிக்கப்பட்டது. சோவியத் – ஆப்கானிஸ்தான் போரின் போதும், 9/11-க்குப் பிறகு தலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின்போதும் மேற்கு நாடுகளுடன் இஸ்லாமாபாத் (பாக். அரசு) இணைந்திருக்காவிட்டால் பாகிஸ்தானின் கடந்த காலப் பதிவு…

Read More

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் உலா வரும் இடங்களையும், அம்மன், சுவாமி உலா வரும் இடங்களையும் எளிதில் கண்டறிய, ஜிபிஎஸ் செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நடந்த அனைத்து நாட்களிலும் 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 30 லட்சமாக உயரும் என மாநகராட்சி கணித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நெரிசலால் தொடரும் பக்தர்கள் உயிரிழப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். டிராக் அழகர்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரைத் திருவிழாவின்போது, மாவட்டக் காவல் துறை கண்காணிப் பாளராக இருந்த மணிவண்ணன், தனது…

Read More

ஊட்டி: “தேசிய கல்விக் கொள்கை மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் படிக்கலாம்” என துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பெருமிதம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4-வது ஆண்டாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஊட்டி ராஜ்பவனில் நடந்த மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆர்.கிரிலோஸ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக துணை குடியிரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசியது: ”பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் தேசத்துடன் இணைந்து எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தால் ஒற்றுமையாகக் கையாளப்பட வேண்டிய ஓர் உலகளாவிய அச்சுறுத்தல். பாரதம் உலகின் மிகவும் அமைதியை விரும்பும் நாடு. நமது நாகரிக நெறிமுறைகள் வாசுதேவ குடும்பகத்தை பிரதிபலிக்கின்றன. பிரதமரின் தலைமைப் பண்பு நமது நாட்டுக்கு உத்தரவாதம். தேசிய நலனே முதன்மையானது. எப்போதும் தேசத்தை முன்னிலைப்படுத்த…

Read More

சென்னை: அரசியல் லாப, நஷ்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சார்பு அணிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். மதிமுக 32-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளைக் கடந்து 32-வது ஆண்டில் மே 6-ம் தேதி அடியெடுத்து வைக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்துத்துவ கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என்று தான் மதிமுக உறுதியாக முடிவெடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் அரசியல் லாப நட்டங்களை பார்க்காமல் பயணத்தை தொடர்கிறது. இந்த சூழலில் 2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியை பெறும். அதேநேரம், கடந்த 31 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த ஏப்.20-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுவில் உணர்ச்சி…

Read More

புதுடெல்லி: தமிழகத்​தின் தென்​காசி மாவட்ட கடையநல்​லூரை சேர்ந்த சுப்​பையா – மலை​யம்​மாள் தம்​ப​தி​யின் மூத்த மகன் எஸ்​.​ராஜலிங்​கம். திருச்சி என்​ஐடி.​யில் வேதி​யல் பிரி​வில் 2003-ல் பட்​டம் பெற்​றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.​யின் அலிகரில் பணியை தொடங்​கி​னார். பின்​னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரி​விலேயே பணி​யில் சேர்ந்​தார். ஐஏஎஸ் பணி​யில் அவுரய்​யா, சோன்​பத்​ரா, குஷி நகர் மற்​றும் சுல்​தான்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் ஆட்​சி​ய​ராக பணி​யாற்​றி​னார். கடந்த நவம்​பர் 2022-ல் வாராணசி​யின் 58-வது ஆட்​சி​ய​ராக ராஜலிங்​கத்தை முதல்​வர் ஆதித்​ய​நாத் நியமித்​தார். இந்த மாவட்​டத்​தில் ஆட்​சி​ய​ராக நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்​டரை ஆண்டு வாராணசி நிர்​வாகத்​தில் 3 காசி தமிழ்ச் சங்​கமங்​கள் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. பிரதமர் உத்​தர​வின் பேரில் பல கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் ராஜலிங்​கம் அமல்​படுத்​தி​னார். இதனால், பிரதமர் மோடி​யின் அபி​மானத்தை பெற்​றார். பின்​னர் பிரதமர் மோடி நேரடி​யாக​வும் வீடியோ கான்​பரன்​சிங் கூட்​டங்​களி​லும், ‘மிஸ்​டர்…

Read More