இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஈடுபட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும்…
Author: admin
தொடர் விடுமுறை காரணமாக, பழநி மலைக் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிஸ்கட்டும், பிரசாதமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்குச் சென்றனர். பழநி அடிவாரம், சந்நிதி வீதி, பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
முரளி, வடிவேலு நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘இ பறக்கும் தள்ளிகா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். அதனையும் தஹா தான் இயக்கி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இதன் மறுவெளியீட்டு உரிமையினை சிவபெருமான் என்பவர் கைப்பற்றி இருக்கிறார். தற்போது மறுவெளியீட்டில் பல படங்கள் வெற்றியடைந்து வருவதால், இப்படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் (92). வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில், 17 கோடி பேரை வறுமை கோட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 2011-12-ம் ஆண்டில் 16.2 சதவீதம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இந்த அளவு கடந்த 2022-23-ம் ஆண்டில் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. 17 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு மேல் சென்றுள்ளனர். கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்களின் சதவீதம் 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் இடைவெளி 7.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. குறைந்த நடுத்தர வருவாய் பிரிவில் 37 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்தப் பிரிவில் கிராமங்களில் ஏழ்மையானவர்கள் 69 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாக குறைந்துள்ளனர். நகர்ப்புறங்களில் 43.5 சதவீதத்திலிருந்து 17.2 சதவீதமாக குறைந்துள்ளனர்.…
சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன் முறையாக ஓடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பி.ராபர்ட் ராஜா கூறியதாவது: இந்தியாவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசடியாளர்கள் புதுப்புது வழிமுறைகளை கண்டறிந்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி அண்மைக்காலமாக பிரபலமாகி வருகிறது. சைபர் குற்றங்களில் ஏமாறாமல் இருக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறதே தவிர அதற்கான தீர்வுகளை யாரும் தருவதில்லை. இந்த நிலையில்தான் நமது நிறுவனம், ஸார்கீசைன் மெயில், ஸார்கீசைன் ஸ்பாட் என்ற இரு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 20 கோடி மின்னஞ்சல் பயனாளர்களும், 100 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கும் பயன்பெறுவர். ஸார்கீசைன் மெயில் என்பது ஒரு பிரவுசர் அல்லது பயனாளருக்கான மின்னஞ்சல் எக்ஸ்டென்ஷன் மென்பொருளாகும். இது, மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துவோரை குறிவைத்து நடத்தும்…
சிஎஸ்கே நேற்று முதல் முறையாக சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்று நடப்பு ஐபிஎல் தொடரில் 7-வது தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘பேபி ஏபிடி’ என்று வந்த புதிதில் வர்ணிக்கப்பட்ட டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். பிரேவிஸ் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருக்கையில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடிக்க அங்கு கமிந்து மெண்டிஸ் அட்டகாசமான, நம்ப முடியாத, பிரமிப்பூட்டும் கேட்சை எடுத்தார். இதனால் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் என்றிருந்த சென்னை 180 ரன்களைக் குவிக்க முடியாமல் போனதும் தோல்விக்குக் காரணமானது. இந்நிலையில், பிரேவிஸ் ஆட்டத்தைப் பார்த்து பிரமித்த இந்திய அணியின் முன்னாள் நம்பர் 1 ஸ்பின்னரும், கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே பிரமித்துப் போனதாகத் தெரிவித்தார். அதே வேளையில் அவரது விக்கெட் இந்த ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த…
இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், “அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு, 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனினும், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் மலைப்…
மூலவர்: பீமேஸ்வரர் அம்பாள்: ஆனந்தநாயகி தல வரலாறு: துரியோதனன், பாண்டவர்களுக்கு தன் தேசத்தில் பாதியை தரமறுத்தான். இதனால் மகாபாரத போர் தொடங்குவதற்குமுன்பு பாண்டவர்கள், தாங்கள் இழந்த தேசத்தையும் பதவியும் மீண்டும் பெற பலதலங்களுக்கு, சேர்ந்தும், தனித்தனியாகவும் சென்று வழிபட்டனர். அவர்களில் ஒருவனான பீமன், ஆதலையூர் வந்து,தாமரைக்குளத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி, வெற்றி பெற வலிமை தர வேண்டினான். சிவபெருமான் பீமனுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். பிறகு பாண்டவர்கள் குருஷேத்திரப் போரில் வெற்றி பெற்று, இழந்த தேசத்தையும், பதவியையும் மீட்டனர். பீமன் வழிபட்டதால் இவ்வூர் ஈசன், பீமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோயில் சிறப்பு : சிவபெருமான் கயிலாயத்தில் உருமாற்றி விளையாடும் திருவிளையாடலைத் தொடங்கினார். வில்வமரம், கங்கை என்று உருமாறி இருந்தாலும், பார்வதி தேவி அவரை கண்டுபிடித்தாள். இதையடுத்து சிவபெருமான் பூலோகம் சென்று பசுவாக உருமாறினார். முரட்டுப் பசு யாருக்கும் அடங்காமல் பலருக்கு இன்னல்கள் விளைவித்ததால், அதை ஊர் மக்கள் கட்டி வைத்தனர். சிவபெருமானைத் தேடிஅங்கு…
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இன்று (25.04.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 2504.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு 12.07.2025 அன்று நடைபெறும். 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -…