கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தில் ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாத இறுதியில் இந்நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்பவும், 2027 மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘ககன்யான்’ திட்டத்தில் 85 சதவீத சோதனைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இஸ்ரோ மட்டுமின்றி கடற்படை, வானியல்…
Author: admin
சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு இரத்த குளுக்கோஸை உயர்த்துவதை விட அதிகம். இது சிறுநீரகங்களை அதிக வேலை செய்கிறது, குறிப்பாக இன்சுலின்-எதிர்ப்பு அல்லது கண்டறியப்படாத முன்கணிப்பு நபர்களுக்கு. சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து அதிகப்படியான குளுக்கோஸை வடிகட்ட சிரிக்கின்றன. இரத்த சர்க்கரை தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அவர்கள் அவ்வாறு செய்வது கடினம். எவ்வாறாயினும், இது காலப்போக்கில் சிறுநீரகத்திற்குள் உள்ள இரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் காரணமாக செயல்படும். இனிப்பான பானங்களின் நுகர்வு, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் ஆகியவற்றைக் குறைப்பது சிறுநீரகங்களின் பணிச்சுமையைத் தணிக்கும், இதனால் அவை சிறந்த முறையில் செயல்பட அனுமதிக்கும்.
சென்னை: திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்தை கூறி, திமுக கட்சி, திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும் , துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையையும் வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிளுக்கு மாற்றி, வருமான வரித் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்து திமுக அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை யை மத்திய சர்கிளுக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது திமுக அறக்கட்டளை சார்பில்…
வயிற்று வலி, நீங்கள் ஒருபோதும் முயற்சிக்காத எடை இழப்பு அல்லது இருமல் வெளியேறாது. நீங்கள் 50 வயதிற்குட்பட்டவராக இருக்கும்போது இந்த விஷயங்களைத் துலக்குவது எளிதானது. எல்லாவற்றிற்கும் மேலாக, புற்றுநோய் என்பது வாழ்க்கையில் பிற்காலத்தில் தாக்கும் ஒரு நோயாக இருக்க வேண்டும், இல்லையா? இனி இல்லை.சமீபத்திய உலகளாவிய ஆராய்ச்சி இளைஞர்களிடையே புற்றுநோய் கடுமையாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. பி.எம்.ஜே ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட 204 நாடுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான ஆய்வில், ஆரம்பகால புற்றுநோய்கள், அதாவது 50 வயதிற்கு முன்னர் கண்டறியப்பட்டவர்கள் 1990 முதல் கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகரித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மட்டும், 50 வயதிற்குட்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகளவில் கண்டறியப்பட்டனர். இது குறிப்பாக கவலைக்குரியது என்னவென்றால், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் பெரும்பாலும் நுட்பமானவை மற்றும் சிறிய பிரச்சினைகள் என்று நிராகரிக்கப்படுகின்றன.இளைய பெரியவர்கள் தொடர்ச்சியான அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் இப்போது வலியுறுத்துகின்றனர். எளிமையான சோர்வு, அஜீரணம் அல்லது…
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த ‘வாக்குத் திருட்டு’ குறித்தும் ‘ஆதாரங்களை’ வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது இந்த முயற்சி, பிஹார் தேர்தலில் தாக்கம் தருமா என்ற கேள்வி எழுகிறது. ‘Vote chori’ அதாவது ‘வாக்கு திருட்டு’ – கடந்த சில வாரங்களாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தால், நாடு முழுவதும் அதிகம் பேசப்படும் சொல்லாடல் இது. இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை வலிமையாக எதிர்க்க வகுக்கப்பட்ட உத்தியின் எளிமையான வெளிப்பாடு இது. ‘Vote chori’ அல்லது ‘வாக்கு திருட்டு’ என்பது இரண்டே வார்த்தைதான். ஆனால், அதன் வீச்சு…
‘மார்கோ’ படத்தின் 2-ம் பாகத்துக்கு ‘லார்ட் மார்கோ’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. ஹனீப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் ‘மார்கோ’. மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. அதே வேளையில் இப்படத்தின் வன்முறை நிறைந்த சண்டைக் காட்சிகள் கடும் எதிர்வினைகளை சந்தித்தது. இதனை முன்வைத்து 2-ம் பாகத்தில் இருந்து விலகினார் உன்னி முகுந்தன். உன்னி முகுந்தன் நடிக்காமல் 2-ம் பாகம் உருவாகாது என்று பலரும் கருதினார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ 2-ம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என்று அறிவித்தது. க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் தான் இதன் 2-ம் பாக உரிமை இருக்கிறது. தற்போது அந்த நிறுவனம் 2-ம் பாகத்துக்கு ‘லார்ட் மார்கோ’ என தலைப்பிட்டு இருப்பதாக அறிவித்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநர், நாயகன் யார் என்றெல்லாம் அறிவிக்கவில்லை. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. முதல் பாகத்தின் வெற்றியால், 2-ம் பாகத்தை அனைத்து…
மதுரை: “மக்களுக்கான நலனை பற்றி சிந்திக்காமல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “தமிழகத்தில் மக்கள் விரோத மன்னராட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முழு வன்மத்தையும் அதிமுக மீதும், பொதுச் செயலாளர் பழனிசாமி மீதும் முதல்வர் ஸ்டாலின் கொட்டிக் கொண்டிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்பை, குறைகளை எடுத்துச் சொல்வதுதான் எதிர்க்கட்சியின் பிரதான கடமையாகும். எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ள ஸ்டாலினுக்கு இதுகூட தெரியாதா? திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பால் அதிமுக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலனை பற்றி சிந்திக்காமல் 24 மணி நேரமும் தூக்காமில்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறார். பழனிசாமி மக்கள் மனதில் நிறைந்துள்ளார். அவரது பிரச்சாரத்தல் திரண்டு வரும் மக்களே அதற்கு…
சியா விதைகளைப் பற்றி நாம் விரும்புவது அவை எவ்வளவு வம்பு இல்லாதவை என்பதுதான். 10-படி நடைமுறைகள் இல்லை, அதிசய தயாரிப்புகளில் இல்லை. உணவில் ஒரு ஸ்பூன்ஃபுல், நாம் மனநிலையில் இருக்கும்போது விரைவான DIY முகமூடி, மற்றும் தோல் நன்மைகள் உண்மையானவை.அழகு பெரும்பாலும் அதிகமாக இருக்கும் உலகில், சியா விதைகள் ஒரு நினைவூட்டலாகும், சில நேரங்களில் எளிமையான, பெரும்பாலான இயற்கையான தந்திரங்கள் தான் வைத்திருக்க வேண்டியவை.ஆகவே, அடுத்த முறை மற்றொரு புதிய தோல் பராமரிப்பு துவக்கத்தால் நாங்கள் ஆசைப்படும்போது, முதலில் சமையலறையை சரிபார்க்க வேண்டும். எங்கள் தோல் எங்களுக்கு அதிக நன்றி சொல்லக்கூடும்.
புதுடெல்லி: கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, “அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு கடந்த 16-ம் தேதி விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் எம்.நூலி, “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும்…
‘தனி ஒருவன் 2’ படத்தின் நிலை குறித்து இயக்குநர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டார் இயக்குநர் மோகன் ராஜா. அவரிடம் ‘தனி ஒருவன் 2’ படம் எப்போது நடைபெறும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மோகன் ராஜா, “‘தனி ஒருவன் 2’ படத்துக்கான மீட்டிங் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளருடன் நடைபெற்றது. படத்தின் பட்ஜெட் என்ன என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. தயாரிப்பாளர் இக்கதையைக் கேட்டுவிட்டு, இந்தக் கதைக்கு இது சரியான நேரம் அல்ல என்றார்கள். பட்ஜெட்டாக பெரியதா என்று கேட்டேன். அப்படியில்லை சார், ரொம்ப அற்புதமான கதை. இக்கதையை படமாக்குவோம், ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல. திரையுலகின் நிலை சரியாகட்டும் என்றார்கள். தயாரிப்பாளருடன் தொடர்ச்சியாக பேசி வருகிறேன். அனைவரும் நினைப்பது போல சீக்கிரமாக நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும்” என்று பதிலளித்துள்ளார் மோகன் ராஜா.…