சென்னை: இந்தியாவில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலையில் உள்ள தமிழகம், அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர் நலனில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பழைய ஓய்வூதிய திட்ட இயக்ககத்தின் தேசிய தலைவர் டாக்டர் மஞ்சித்சிங் பட்டேல் கடுமையாக விமர்சித்தார். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இப்போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான தேசிய இயக்ககத்தின் அகில இந்திய…
Author: admin
மதுரை: மதுக்கூர் ஜாமீன்தாருக்கு தத்து கொடுக்கப்பட்ட ராமநாதபுரம் சேதுபதி வாரிசுகளில் ஒருவர் ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகளை விற்பனை செய்வதாக அளிக்கப்பட்ட புகாரை போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் ராமநாதபுரம் மாவட்ட சமஸ்தான ராஜபாஸ்கர் சேதுபதியின் பேரன். குமரன் சேதுபதி மகன் நாகேந்திர சேதுபதி, கடந்த 2010-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி கோபாலர் தம்பதியினருக்கு சட்டப்படி தத்து கொடுக்கப்பட்டார். தற்போது அவர் அந்த குடும்பத்தின் சட்டப்படியான வாரிசாக இருந்து சொத்துகளை நிர்வகித்து வருகிறார். நாகேந்திர சேதுபதியின் தந்தை குமரன் சேதுபதி கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரது இறப்புக்கு பின் நாகேந்திர சேதுபதி வருவாய்த் துறையினர் உதவியுடன் தான் குமரன் சேதுபதியின் வாரிசு என சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த வாரிசு சான்றிதழ் அடிப்படையில் ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகளை விற்பனை செய்து…
சென்னை: ‘தமிழகம் வரும் பிரதமரிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த மனு பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது. இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்திட, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (26.7.2025) தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்திடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்…
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு டிராக்டரில், வெற்றிமாலை கண்மாய் கரையருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கண்மாய் கரையில் உள்ள சாலையில் இருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பொன்னம்மாள் (68) ராக்கி (62), முனியம்மாள் (55) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது…
ஒரு மூத்த உடன்பிறப்பாக, தங்கள் இளைய உடன்பிறப்புகள் சண்டையிடத் தொடங்கும் போது, அவர்கள் தானாகவே நடுவர், ஆலோசகர் மற்றும் சில சமயங்களில் மத்தியஸ்தரின் பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்பதை ஒருவர் காண்பார். ஒரு வகையில், மோதல் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை இது அவர்களுக்குக் கற்பிக்கிறது, ஆனால் இது பெரும்பாலும் அவர்கள் உணருவதைக் கேட்க யாரும் இல்லை, அல்லது உணர்வுகள் தகுதியற்றவை அல்ல என்ற உணர்வையும் விட்டுவிடுகின்றன.
“கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவுகள் தான் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன” என்று கூறி குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நாட்டின் முன்னேற்றம் பற்றி கனவு காண வைத்தவர் நம் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். 2002-ம் ஆண்டில் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் பதவி வகித்தபோது, பதவி காலத்திற்கு பின்னர் அப்துல் கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். கடந்த 27.07.2015 அன்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் அவர் பிறந்த ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு தேசிய நினைவிடம் கட்டப்பட்டது. மாணவர்களையெல்லாம் கனவு காணுங்கள் என இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்த கனவு நாயகன்…
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று (ஜூலை 26) காலை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் ஆண்டு பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பேராலயத்தின் 443-வது ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. கொடியேற்றம்: கூட்டுத்திருப்பலி முடிந்ததும் பேராலயத்தில் இருந்து திருக்கொடியை ஆயர் ஸ்டீபன், மேளதாளங்கள் முழங்க, பேராலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வந்தார். பின்னர் பேராலயத்துக்கு முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை…
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஆறாம் கட்டத்தின் முதல் படமாக வெளியாகியுள்ளது ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’. ஃபென்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்களின் காப்புரிமை பல வருடங்களாக 20த் சென்சுரி நிறுவனத்திடம் இருந்ததால் அவற்றை மார்வெல் சினிமாடிக் உலகத்துக்குள் கொண்டு வருவதற்கு தாமதமானது. தற்போது அந்த நிறுவனம் டிஸ்னி வசம் வந்தபிறகே தற்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது. எர்த் 828-ல் ஃபென்டாஸ்டிக் ஃபோர் சூப்பர்ஹீரோக்கள் உதயமாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு கதை தொடங்குகிறது. ரப்பர் போல உடலை நீட்டும் ரீட் ரிச்சர்ட்ஸ், காற்றை வசப்படுத்தி கண்ணுக்கு தெரியாமல் மறையும் சூ ஸ்டார்ம், பாறை போன்ற உடல் அமைப்பைக் கொண்ட பென், நெருப்பாக மாறும் ஜானி. இவர்கள்தான் ஃபென்டாஸ்டிக் ஃபோர். இதில் ரீட் ரிச்சர்ட்ஸும், சூ ஸ்டார்மும் தங்கள் குழந்தையை வரவேற்க தயாராக இருக்கின்றனர். இதனை கொண்டாட எத்தனிக்கும் தருணத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் உலோகம் போன்ற உடலைக்…
சென்னை: நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நடந்தது ‘கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு’ என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்கிறார். ஒருவரின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன், கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா? இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பழங்குடியினர் வீடுகள்: அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘‘திருப்பூர் மாவட்டம், அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோடந்தூர் திருமூர்த்திமலை கிராமத்தில் காமராஜர், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இன்று வாழவே…
சென்னை: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜன.1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இந்த ஆண்டும் வழக்கம்போல சுருக்க முறை திருத்தமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தொடங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகவும் அறிகிறோம். ஏற்கெனவே பிஹாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து…